கூரையை பிச்சுக்கிட்டு கொடுத்த தெய்வம்: சவப்பெட்டி செய்பவருக்கு அடித்த ஜாக்பாட்.!

|

நமது வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால் கடின உழைப்பு கட்டாயம் வேண்டும். சில நமிடங்களில் நமக்கு வரும் அதிஷ்டம் நமது வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடும், அதற்கு உதராணமாக ஒரு சிறப்பான சம்பவம் நடந்துள்ளது.

வருமானத்தில்

அதன்படி இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருபவர் Josua Hutagalung (33). இவர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சவப்பெட்டி செய்யும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வரும் Josua. அதில் வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

விழுந்து கிடந்துள்ளது

இந்த நிலையில் தனது வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு விழுந்த ஒரு பொருளால் தனது வாழ்க்கை முழுவதும் மாறும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். சம்பவத்தன்று வீட்டிலிருந்த Josua, திடீரென பயங்கர சத்தம் ஒன்றைக் கேட்டுள்ளார். உடனே அந்த சத்தம் வந்த இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தபோது, அங்கு வீட்டின் கூரையை உடைத்துக் கொண்டு ஏதோ கல்

ஒன்று விழுந்து கிடந்துள்ளது.

இணைய வேகத்தில் பாக்., நேபாளம் முன்னிலை: இந்தியா பிடித்த இடம் இதுதான்!

சிறிது சேதம்

இதனால் வீட்டின் மேல் பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த கல்லை அவர் எடுக்க முயன்ற நிலையில் அது பயங்கர சூடாக இருந்தது. ஒரு வேளை உள்ளூர்வாசிகள் யாராவது கல்லை எறிந்து விட்டு சென்றிருக்கலாம் என Josua நினைத்த நிலையில், அப்போது தான் விண்கல் என்ற விஷயம் அவருக்கு தெரிய வந்தது.

வப்பெட்டி செய்வதிலேயே

மேலும் இது பற்றி அவர் கூறுகையில், எனது வாழ்க்கை முழுவதும் சவப்பெட்டி செய்வதிலேயே போய்விடுமோ எனப் பலமுறை எண்ணி இருக்கிறேன், ஆனால் எனக்கு கிடைத்துள்ள அதிஷ்டம் என்பதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று என Josua கூறியுள்ளார். பின்பு இந்த தகவல் காட்டு தீ போன்று பரவிய நிலையில் பலரும் Josua-வின் வீட்டிற்கு வந்து அந்த கல்லை ஆர்வமுடன் பார்த்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 4.5 பில்லியன்

குறிப்பாக அந்த விண்கல் ஆனது 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்ற தகவல் தெரியவந்தது. இதனிடையே அந்த விண்கல்லை அமெரிக்க விண்கல் நிபுணர் கொலின்ஸ் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். அதை விண்கல் சேகரிப்பாளர் ஜெய் பியடெக் வாங்கினார் என அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியில் உள்ள சந்திர மற்றும் கிரக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விண்கல் ஆனது சுமார் 1.4 மில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

பின்பு கடந்த ஆகஸ்ட் மாதம்

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 13 கோடி ரூபாய் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த விண்கல் ஆனது CM1/2 வகையைச் சார்ந்த மிகவும் அரிதான ஒன்றாகும். பின்பு கடந்த ஆகஸ்ட் மாதம் விண்கல்லின் மேலும் 3 துண்டுகள் Josua வசித்து வரும் பகுதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வயல்வெளியில் விழுந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

News Source: dailymail.co

Most Read Articles
Best Mobiles in India

English summary
Indonesian man who became a millionaire in a meteorite crash with a terrifying noise: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X