Just In
- 5 hrs ago
மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!
- 6 hrs ago
உரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு! ஆர்டர் செய்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- 7 hrs ago
சாம்சங்:146' இன்ச், 219' இன்ச், 292' இன்ச் அளவுகளில் தி வால் டிஸ்பிளே டிவிகள் அறிமுகம்.! சொன
Don't Miss
- News
குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. அவர்களையும் சேருங்க.. இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுத்த சிவசேனா!
- Finance
நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Movies
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
- Lifestyle
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.!
சந்திராயன் 2 விண்கலன் வரும் ஜூலை 15ம் தேதி ஸ்ரீஹரிகோட்ட விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுவதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து இஸ்ரோ இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இஸ்ரோ அனுப்பும் சந்திராயன் 2 விண்கலன் மீது உலக நாடுகளின் பார்வையும் திரும்பியுள்ளது.
இதுவரை எந்த நாடும் நிலவில் தரையிறக்காத பகுதியில் விண்கலனை தரையிறக்க இருக்கின்றது இஸ்ரோ. இதனால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதில் மற்றொரு ஆர்ச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னென்வென்றால், நிலவில் தரையிறங்கும் விண்கலனை இரண்டு இந்திய பெண்கள் வடிவமைத்துள்ளனர் என்பது தான். இன்று இது டாப் டிரெண்டிங்காகவும் இருக்கின்றது.

சந்திராயன் 1 வெற்றி:
கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் 1 நிலவுக்கு முதல் முயற்சியிலேயே இந்தியா செலுத்தி வெற்றி கண்டது. இது மட்டும் இல்லாமல் மற்ற நாடுகளையம் தன் திரும்பி பாரக்கும் வகையில் இது அமைந்தது.
நிலவில் உறைந்த நிலையில் தண்ணீர் இருக்கின்றது என்று கண்டுபிடித்து உலகிற்கு முதலில் கூறியது.இதை நாசா விஞ்ஞானிகளும் சந்திராயன் கூறியது உண்மை தான் என்று கூறினர்.
சந்திராயன்-1 செயலிழந்தால், இஸ்ரோவின் முழுமையான ஆராய்ச்சி பாதியிலேயே தடைபட்டது. இதையடுத்து இஸ்ரோ சந்திராயன்-2 திட்டத்தையும் தயார் செய்தது.

சந்திராயன் 2 திட்டம் தயார்:
இதற்காக வரும் 19ம் தேதி பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு சந்திராயன் 2 திட்ட விண்கலன் மற்றும் உதிரிபாகங்கள் கொண்டு வரப்படுகின்றது. பிறகு அங்கியிருந்து மறுநாள் வரும் 20ம் தேதி ஸ்ரீஹரிகோட்ட ராக்கெட் ஏவுதளத்திற்கு ராக்கெட் மற்றும் விண்கலன் கொண்டு செல்லப்படுகின்றது.
பிறகு ஜூலை 15ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுவரை எந்த நாடும் நிலவில் நிலவின் தென்துவருவத்தில் இறக்கியது இல்லை. இந்த சாதனையும் இஸ்ரோ செய்ய இருக்கின்றது.

சந்தியராயன்-2 உருவாக்கிய 2 பெண்கள்:
இஸ்ரோ விண்வெளி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளர்களாக நீண்ட காலம் அனுபம் வாய்ந்த இரண்டு பெண்கள் விஞ்ஞானிகளான வனிதா மற்றும் ரித்து கரிதால் இவர்கள் தாம் பெரும் பொறுப்பையும் முன்னெடுத்து சென்றுள்ளனர்.

முத்தையா வனிதா:
சந்தியரான் திட்டத்தில் இயக்குநராகச் செயல்படுறார். மொத்த விண்கலன் தயாரிப்பு மற்றும் உறுப்பு ஆகியவற்றை சரிபார்ப்பது, இதை இறுதி வடிவமாக்கி விண்ணுக்கு அனுப்புவது வரை எல்லாம் இவர் தான். மேலும் இதற்கு முன்பு வனிதா கார்டோசார்-1 ஓசன்சட் 2 ஆகிய விண்கல தயாரிப்புகளில் பணியாற்றியுள்ளார்.

ரித்து கரிதால்:
மற்றொரு பெண் விஞ்ஞானியான ரித்து கரிதால் சந்திராயன் திட்டத்தின் துணை செயல்பாடு இயக்குநராக உள்ளார். இவர் விண்கலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து இவரின் பணி. இவர் மங்கல்யான் விண்கல தயாரிப்பில் பணியாற்றியுள்ளார்.

இரு பெண்களே செய்துள்ளனர்-சிவன்:
இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் இதற்கு முன்பு பெண்கள், தகவல் தொடர்பு மற்றும் பிற விண்கலன்கள் ஏவுதும் பொறுப்பிலிருந்துள்ளனர். ஆனால் விண்கலத்தின் பாகங்கள் தயாரிப்பது முதல் அதன் செயல்பாடு என அனைத்து வேலைகளும் இரு பெண்களின் தலைமையில் நடப்பது இதுவே முதல்முறை. சந்தியரான் 2 இந்தியாவுக்கு மிகவும் சவாலான விண்கலன் என்றும் குறித்து பேசியுள்ளார்.
சந்திராயன்-2 மூலம் பிற நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ.!

மயில்சாமி அண்ணாதுரை கருத்து:
முத்தையா வனிதா விண்கலனத்தின் இயக்குரான நியமிக்கபட்டுள்ளது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் அவர் விண்கல தயாரிப்பில் வேலை செய்துள்ளார்.
ஆனால் அதில் அவரின் வேலைகள் அனைத்தும், தரவு கையாளுதல் தொடர்பாக மட்டுமே இருக்கும். தன் ணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது வனிதாவுக்கு நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-2 ரகசியம் அம்பலம்- மயில்சாமி: நிலவில் தரையிறங்கும் இடம்?

ரித்து கரிதால் பணி:
1997-ம் ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். அவர் 2007-ம் ஆண்டு இளம் விஞ்ஞானிக்கான விருதையும் பெற்றுள்ளார். பல ஆண்டுகளாகப் பல விண்கலத்தின் தயாரிப்பில் இருந்துள்ளார். இது தொடர்பாக ரித்து கூறும்போது, துணை செயல்பாட்டு இயக்குநர், இதுதான் எனக்கும் எனது குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ள வேலை. விண்கலத்தின் இயக்கத்தை நாங்கள் கவனித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.
சந்திராயன்-2 விண்கலம் ஏவுதல் தள்ளிவைப்பு: பின்னணி என்ன?

முழுமையாக இந்தியாவில் தயாரிப்பு:
சந்திரயான் 2 தான் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு நிலவுக்குச் செல்லும் முதல் விண்கலம். அதற்கான அனைத்துத் திறன்களையும் சந்திரயான் கொண்டுள்ளது. இஸ்ரோவில் உள்ள ஆண் விஞ்ஞானிகளுக்கு இணையாகப் பெண்களின் செயல்பாடும் சந்திரயான் 2 விண்கலத்தில் வெளிப்பட்டுள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090