மார்ஸ் ரோவர் டிசைன் டீம்ஸ்: இந்திய மாணவர்கள் உலகிலேயே டாப்!

இக்குழுவானது சமீபத்தில் அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற "யுனிவர்சிடி ரோவர் சேலன்ஜ்" என்ற ரோவர் வடிவமைப்பு போட்டியில் கலந்துகொண்டனர்.

|

நாம் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப தயாராகிவரும் வேளையில் , முதலில் பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு நீர், கனிமங்கள், கட்டுமான பொருட்கள் போன்றவற்றை எடுத்துச்செல்ல சில விண்கலங்கள்( ரோவர்) தேவைப்படுகிறது. தற்போது இந்தியாவில் இருந்து சிறந்த புதிய ரோவர் வடிவமைப்புகள் உருவாகிவருவதாக தெரிகிறது.

மார்ஸ் ரோவர்

மார்ஸ் ரோவர்

மார்ஸ் ரோவர் மணிபால் (MRM) என்ற குழுவில் மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-யைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர். இக்குழுவானது சமீபத்தில் அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற "யுனிவர்சிடி ரோவர் சேலன்ஜ்" என்ற ரோவர் வடிவமைப்பு போட்டியில் கலந்துகொண்டனர். மேலும் அப்போட்டியில் அவர்கள் டாப் பரிசுகளில் ஒன்றையும் பெற்றுள்ளனர்.

 சிறந்த அறிவியல் குழுவிற்காக பரென்கா விருதையும் பெற்றுள்ளது

சிறந்த அறிவியல் குழுவிற்காக பரென்கா விருதையும் பெற்றுள்ளது

மவுசர் எலக்ட்ரானிக்ஸீ மற்றும் எக்ஜெய் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றுடன் , மார்ஸ் ரோவர் மணிபால் குழுவும் இப்போட்டியில் ஆசிய சேலஞ்சர்கள் பிரிவில் வெற்றி பெற்றுள்ளது. 84 உலகளாவிய பங்கேற்பாளர்களில் 8 வது இடத்தை பெற்றுள்ள இக்குழு, அதேபோல சிறந்த அறிவியல் குழுவிற்காக பரென்கா விருதையும் பெற்றுள்ளது.

5 இந்திய அணிகள் தேர்வாகின

5 இந்திய அணிகள் தேர்வாகின

இந்த ஆண்டிற்கான ரோவர் வடிவமைப்பு இறுதிப் போட்டியின் இறுதி கட்டத்திற்கு, எம்ஆர்எம் குழுவுடன் ஐஐடி பாம்பே, ஐஐடி மெட்ராஸ், விஐடி வேலூர் மற்றும் எஸ்ஆர்எம் ஆகியவற்றின் குழுக்கள் என மொத்தம் 5 இந்திய அணிகள் தேர்வாகின. மேலும் மணிபால் குழு தொடர்ந்து நான்காவது ஆண்டாக டாப் 36 சர்வதேச அணிகளில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிவேகத்தில் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல் 4ஜி.!தமிழகத்தில் அதிவேகத்தில் தெறிக்கவிடும் பிஎஸ்என்எல் 4ஜி.!

மார்ஸ் ரோவரை கட்டமைத்தல்

மார்ஸ் ரோவரை கட்டமைத்தல்

இந்த போட்டியில் குறிப்பிட்ட சில அம்சங்களுடன் இந்த ரோவர்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அவற்றில் ஒன்று, அந்த ரோவர்கள் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் நிலப்பரப்பில் பயணிக்க வேண்டும் மற்றும் செவ்வாயில் அவை செய்யவேண்டிய ஆராய்ச்சிகளுடன் தொடர்புடைய சில அடிப்படை பணிகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக நான்கு வடிவமைப்பு இலக்குகளான அறிவியல் மிஷன், தன்னாட்சி பயண மிஷன், தீவிர மீட்பு & டெலிவரி மிஷன் மற்றும் கருவிகள் பராமரித்தல் மிஷன் ஆகியவற்றை முடிக்கவேண்டும்.

செப்டம்பரில் பூமியை தாக்குமா க்யூவி விண்கல்? வாய்ப்பு விகிதம் என்ன?செப்டம்பரில் பூமியை தாக்குமா க்யூவி விண்கல்? வாய்ப்பு விகிதம் என்ன?

கடின உழைப்பு வெற்றி

கடின உழைப்பு வெற்றி

"எங்களது குழுவின் கடின உழைப்பு வெற்றி பெற்றுத்தந்துள்ளது என்பதை பார்க்க மிகவும் பெருமையாக உள்ளது.நாங்கள் அனைவரும் கற்றுக்கொண்டோம் மற்றும் அனைவரையும் பெருமிதம் கொள்ள செய்துள்ளோம். எங்கள் நிறுவனம் மற்றும் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. " என்கிறார் இக்குழுவை தலைமையேற்று வழிநடத்திய சாய் ஷ்யாம்.

கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி வெளியானது.!கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி வெளியானது.!

Best Mobiles in India

English summary
Indian Students Has Ranked Mars Rover Design Teams In The World: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X