பிளாக் ஹோலை படம்பிடிக்க உதவியது ஒரு இந்தியர்! வெளியான வரலாற்று உண்மை!

இதை நிரூபிப்பதற்காக அவர் கிரெஸ்கோகிராஃப் என்று அழைக்கப்படும் மிகவும் அதிநவீன கருவி ஒன்றை வடிவமைத்தார்.

|

ஒரு இந்திய விஞ்ஞானி, விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகிய இரண்டும் மிகவும் பொதுவானவையாகும் என்பதை நிரூபித்தார். அதாவது வெப்பம், குளிர், ஒளி, இரைச்சல் மற்றும் பல்வேறு பிற தூண்டுதலுக்கான உணர்திறனை தாவரங்களும் கொண்டுள்ளன என்பதை நிரூபித்தார் - அவர்தான் சர் ஜகதீஷ் சந்திர போஸ்!

பிளாக் ஹோலை படம்பிடிக்க உதவியது ஒரு இந்தியர்! வெளியான வரலாற்று உண்மை!

இதை நிரூபிப்பதற்காக அவர் கிரெஸ்கோகிராஃப் என்று அழைக்கப்படும் மிகவும் அதிநவீன கருவி ஒன்றை வடிவமைத்தார். அதன் மூலம் வெளிப்புற தூண்டுதல்களுக்கான தாவரங்களின் நுட்பமான மறுமொழிகளை பதிவு செய்தார். அதன் விளைவாக தாவரத்தின் திசுக்களின் இயக்கம் சுமார் 10,000 மடங்காக அதிகரிக்குமாம். அவ்வாறு நடக்கும் போது, ​​தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு இடையே பல ஒற்றுமைகள் காணப்பட்டன.

சர் ஜகதீஷ் சந்திர போஸ்

சர் ஜகதீஷ் சந்திர போஸ்

இந்த ஆய்விற்கு பின்னர் இந்தியாவின் முதன்மையான இயற்பியலாளர்களில் ஒருவராக கருதப்பட்ட சர் ஜகதீஷ் சந்திர போஸ்,இந்நாள் வரையிலாக வானொலி மற்றும் நுண்ணலை ஒளியியல் ஆய்வில் முன்னோடி என்றும், நவீன வைஃபையின் தந்தை என்றுமே அறியப்பட்டார். ஆனால் தற்போது ஒரு வரலாற்று உண்மை வெளிப்பட்டுள்ளது. அந்த உண்மையை இந்தியர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஏற்றுக்கொள்ளுமா? ஜீரணித்து கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை.

1895 ஆம் ஆண்டில்

1895 ஆம் ஆண்டில்

இத்தாலிய கண்டுபிடிப்பாளர் ஆன குக்லீல்மோ மார்கோனி, 1895 ஆம் ஆண்டில் முதன் முதலாக தந்தியை கண்டுபிடித்த அதே நேரத்தில், போஸ், ரேடியோ அலைகள் மற்றும் அவற்றின் நடத்தையை புரிந்து கொள்ள முயன்றார். 30 ஜிகாஹெர்ட்ஸ் முதல் 300 ஜிகாஹெர்ட்ஸ் வரையிலாக விழும் மில்லிமீட்டர் அலைவரிசைகளுடன் வானொலி தொடர்பை நிகழ்த்தி, செயல் விளக்கமளித்த முதல் ஆய்வாளராக இவர் திகழ்ந்தார். அந்த மில்லிமீட்டர் அலைகள் தான் இப்போது 5ஜி தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக அமைகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈவென்ட் ஹார்ஸன் தொலைநோக்கி

ஈவென்ட் ஹார்ஸன் தொலைநோக்கி

இப்படியாக இவரின் பல கண்டுபிடிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கதாக ஒன்றாக இருந்ததோடு, அவைகள் பல வரலாற்று சாதனையை அடைந்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டன, பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. அதில் ஒன்றுதான் மனிதகுலம் பதிவு செய்த கறுப்பு துளையின் முதல் புகைப்படம். இந்த நிகழ்வானது ஏப்ரல் 10, 2019 அன்று நிகழ்ந்தது. இந்த புகைப்படத்தை பதிவு செய்ய உதவியது ஈவென்ட் ஹார்ஸன் தொலைநோக்கி ஆகும். இந்த இடத்தில் தான் - பல ஆண்டுகளுக்கு முன்பே - போஸ் நுழைகிறார்.

 பூமியைவிட முப்பத்து லட்சம் மடங்கு பெரியது

பூமியைவிட முப்பத்து லட்சம் மடங்கு பெரியது

புகைப்படத்தில் பதிவான அந்த சூப்பர் மேஸிவ் பிளாக் ஹோல் ஆனது பூமியைவிட முப்பத்து லட்சம் மடங்கு பெரியது மற்றும் 500 மில்லியன் ட்ரில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 200 ஆய்வாளர்கள் இரவும் பகலும் வேலை செய்ததின் விளைவாக இந்த புகைப்படம் உருவாக்கம் பெற்றது. எம்ஐடி பட்டதாரியான கேட்டி பவ்மேனின் அல்காரிதம் ஆனது அந்த பிளாக் ஹோலை கைப்பற்றும் சாத்தியத்தை ஏற்படுத்திய போதிலும், அதிர்வெண் குறித்த போஸின் ஆய்வு தான் ஈவென்ட் ஹாரிசன் தொலைநோக்கியின் செயல்பாட்டை எளிதாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 இரண்டு புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார்

இரண்டு புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார்

போஸ் இரண்டு புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார்; 'வாழ்க்கை மற்றும் அல்லாதோர் வாழ்க்கை' (1902) மற்றும் 'நரம்பு வழிமுறை தாவரங்கள்' (1926). இவரின் தலைமையின் கீழ் தான், ரேடியோ அலைகளின் நடத்தை இன்னும் விரிவாக ஆராயப்பட்டது என்பதும், இவர் பெரும்பாலும் ஒரு தாவர ஆய்வாளராக அறியப்பட்டார் என்பதும், ஆனால் உண்மையில் அவர் ஒரு இயற்பியலாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரேடியோ அலைகளை கண்டுபிடிப்பதற்காக 'இணைப்பான்' எனும் மற்றொரு கருவியிலும் கூட போஸ் முன்னேற்றம் கண்டார்.

 78 ஆம் வயதில் போஸ் இறந்தார்

78 ஆம் வயதில் போஸ் இறந்தார்

அதற்காக 1917 ஆம் ஆண்டில் பாராட்டப்பட்ட போஸ், அவரது அற்புதமான பங்களிப்பிற்கும் சாதனைகளுக்காகவும் 1920 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று, தனது 78 ஆம் வயதில் போஸ் இறந்தார்.

Best Mobiles in India

English summary
indian-physiologist-jc-bose-s-invention-made-it-possible-to-capture-the-real-image-of-black-hole : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X