Home
Scitech

இந்தியர்கள் இல்லையேல் நாசா இல்லை; அதற்கு அனிதா ஒரு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.!

பல வகையான ஆய்வுகளுக்கு குளிர்சிமிக்க சூழல் என்பது மிகவும் முக்கியமானதாகும்.

பல வகையான ஆய்வுகளுக்கு குளிர்சிமிக்க சூழல் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் தேசிய ஏரோனாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிறுவனத்தின் (நாசா) கோல்ட் ஆட்டம் லேபாரட்டரி (CAL) ஆனது அந்த குளிர்ச்ச்சியான சூழலை ஒரு தீவிரமான நிலைக்கு கொண்டு செல்கிறது. அதாவது இந்த சிஏஎல் ஆய்வகமானது. இப்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்கிறது.

இந்தியர்கள் இல்லையேல் நாசா இல்லை; அதற்கு அனிதா ஒரு எடுத்துக்காட்டு.!

அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் இந்த "அடேங்கப்பா" திட்டத்திற்கு பின்னால் முக்கிய மூளையாக செயல்பட்டது, இந்திய-அமெரிக்க விஞ்ஞானியான அனிதா செங்குப்தா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டு முதல் 2017 வரை, அனிதா ஐஎஸ்எஸ்-க்கான லேசர்-கூலிங் க்வாண்டம் இயற்பியல் மையத்தின் குளிர் அணு ஆய்வுக்கூடத்தின் வளர்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பிரபஞ்சத்தின் மிக குளிர்ச்சியான இடம்: குளிர் அணு ஆய்வகம் (CAL).!

பிரபஞ்சத்தின் மிக குளிர்ச்சியான இடம்: குளிர் அணு ஆய்வகம் (CAL).!

குளிர் அணு ஆய்வகம் (CAL) என்பது பிரபஞ்சத்தின் வெற்றிடத்தை விட 10 பில்லியன் மடங்கு அதிக குளிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வமானது, சென்சார்கள், குவாண்டம் கம்ப்யூட்டர்கள் மற்றும் அணு கடிகாரங்கள் (விண்கல வழிநடத்தலில் பயன்படுத்தப்படும்) உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.

இதன் நன்மை என்ன.?

இதன் நன்மை என்ன.?

சிஏஎல் என்று அழைக்கப்படும் இந்த தீவிர குளிர் ஆய்வகத்தின் பயன் என்ன என்கிற விளக்கம் கேட்கப்பட்டபோது, "இந்த சிஏஎல் ஆய்வகம் வழியாக, நுண்ணுயிரி சூழலின் கீழ், மிக நீண்ட காலத்திற்கு தீவிர குளிர் அணுக்களை கண்காணிக்க முடியும்" என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஆய்வகம் ஏன் விண்வெளிக்கு செல்ல வேண்டும்.?

இந்த ஆய்வகம் ஏன் விண்வெளிக்கு செல்ல வேண்டும்.?

அணுவை, முழு பூச்சியத்திற்கும் மேலான ஒரு குளிர்நிலைக்குள் கொண்டுசெல்வது என்பது பூமியில் சாத்தியமில்லை. அதை சாத்தியப்படுத்தும் நோக்கத்தின் கீழ், வடிவமைக்கப்பட்டுள்ள குளிர் அணு ஆய்வகமானது, ஒரு உயர் தர வெற்றிட அறை மற்றும் ஒரு சக்தி வாய்ந்த லேசர்களின் வரிசையைப் பயன்படுத்துகிறது. இதெல்லாம் நடக்கும் அதே சமயம் பூமியின் ஈர்ப்பு விசைகளை அகற்ற வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

பூமியில் சாத்தியம் தான்; ஆனாலும் சாத்தியம் இல்லை.!

பூமியில் சாத்தியம் தான்; ஆனாலும் சாத்தியம் இல்லை.!

எளிமையாக கூறவேண்டுமெனில், பூமியில் உருவாக்கப்படும் மிகவும் குளிர்ந்த வெப்பநிலையானது சில நொடிகளில் உருக்குலைந்து விடும். இதனால் தீவிரமான குளிர் அணுக்கள் சார்ந்த ஆய்வில் நீடிப்புத்தன்மை இருக்காது. இதுவே விண்வெளி என்றால், அங்கு ஈர்ப்பு சக்தியை வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் அங்கு ஏற்க்கனவே ஸீரோ கிராவிட்டி நிலவுகிறது. ஆக ஆய்வில் எந்த இடையூறும் மற்றும் கடினத்தன்மையும் இருக்காது. ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகளுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

இது அனைத்திற்கும் பின்புலமாக செயல்பட்ட அனிதா சென்குப்தா.!

இது அனைத்திற்கும் பின்புலமாக செயல்பட்ட அனிதா சென்குப்தா.!

முன்னாள் நாசா விஞ்ஞானியான அனிதா செங்குப்தா, இந்தியாவுடன் ஒரு நெருக்கமான உறவை கொண்டுள்ளார். ஏனெனில் அவரின் தந்தையின் சொந்த மாநிலம் மேற்கு வங்காளம் ஆகும். நாசா உடனான பணிகளை வெற்றிகரமாக முடித்த அனிதா, தற்போது விர்ஜின் ஹைப்பர்லோப் ஒன் (Virgin Hyperloop One) நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

அனிதா பற்றி அவரின் வலைத்தளம் கூறுவது என்ன.?

அனிதா பற்றி அவரின் வலைத்தளம் கூறுவது என்ன.?

டாக்டர் அனிதா செங்குப்தா, ஒரு ராக்கெட் விஞ்ஞானி மற்றும் விண்வெளி பொறியியலாளராக இருக்கிறார், இவர் 20 ஆண்டுகளாக செவ்வாய் கிரகம், எரிமலை மற்றும் ஆழ்ந்த விண்வெளி ஆய்வுகளை செயல்படுத்தும் தொழில்நுட்பங்கள் சார்ந்த வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். போயிங் ஸ்பேஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களின் வழியாக அனிதா இந்த துறைக்குள் நுழைந்தார்.

நாசாவின்

நாசாவின் "சத்தமில்லாத" சாதனையாளர்.!

அதனை தொடர்ந்து, அனிதாவின் பயணம் நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்திற்குள் சென்றது. 2006-ல் நாசாவின் 'டான்' (Dawn) விண்கலத்தை வளிமண்டலத்திற்குள் செலுத்த உதவிய அயனி இயந்திரங்களை வளர்ச்சியடைய வைப்பதில் முக்கிய பங்காற்றினார். பின்னர் 2012-ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் நாசாவின் க்யூரியாசிட்டி ரோவர் இறங்குவதற்கு உகந்ததாக இருந்த சூப்பர்சனிக் பாராசூட் அமைப்புக்கும் அனிதா பொறுப்பாளியாக இருந்தார்.

Best Mobiles in India

English summary
Indian-American scientist Anita Sengupta is the brain behind Nasa's latest project. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X