இந்தியா vs பாகிஸ்தான் : யுத்தம் நடந்தால் யார் வெல்வார்கள்? கசப்பான உண்மைகள்!
இந்தியா எந்தவொரு "முதல் பயன்பாட்டு கொள்கையையும்" (no-first-use doctrine) கொண்டு இருக்கவில்லை என்பதால், அணு ஆயுத போர் என்று வந்து விட்டால், இந்தியா முதலில் தாக்காது.
உலகின் மிகவும் இராணுவமயமாக்கப்பட்ட எல்லையோரங்களை கொண்ட நாடுகள் என்கிற பட்டியலிலும் சரி, ஒன்றுக்கொன்று எதிராக அணு ஆயுதமயமாக்கப்பட்ட அண்டை நாடுகள் என்கிற பட்டியலிலும் சரி, பல தசாப்தங்களாக உலக சக்திகளுக்கு நடுக்கங்களை கொடுத்து வரு நாடுகள் என்கிற பட்டியலிலும் சரி இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இந்தியாவிற்கும் சரி, பாகிஸ்தானிற்கும் சரி பரஸ்பர உறவின் மீது எப்போதுமே முழு நம்பிக்கை இருந்ததில்லை, இருக்கவில்லை, இருக்க போவதும் இல்லை - ஏனென்றால் இது "சரிபார்க்கப்பட்ட வரலாறு" அப்படி இருக்கிறது!

குறிப்பாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் எப்படியாவது சமாதானமான நிலைப்பாட்டை உருவாக்கி விட வேண்டும் என்றும் எவவ்ளவு முயற்சி செய்தாலும், அது பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகிறது. அதனாலேயே காஷ்மீர் எல்லையில், இரண்டு இராணுவ சக்திகளுக்கிடையில் ஒரு சாத்தியமான போர் அச்சுறுத்தல் நிலவி கொண்டே தான் இருக்கிறது. அந்த போர் ஒரு அணு ஆயுத போராக விரிவாக்கப்படக்கூடிய சாத்தியமும் உள்ளது.

இந்தியா முதலில் தாக்காது!
இந்தியா எந்தவொரு "முதல் பயன்பாட்டு கொள்கையையும்" (no-first-use doctrine) கொண்டு இருக்கவில்லை என்பதால், அணு ஆயுத போர் என்று வந்து விட்டால், இந்தியா முதலில் தாக்காது. ஆனால் நாட்டின் பாதுகாப்பு நலன் என்று வரும் பட்சத்தில் இந்தியா ஒரு மிகப்பெரிய மற்றும் சமமற்ற பிரதிபலிப்புகளை நிகழ்த்தும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்!
பொதுவாக எந்தவொரு காலத்திலும், எந்தவொரு இடத்திலும், பாகிஸ்தானின் தாக்குதலை சமாளிப்பதிலும், உடனடியான பதில் தாக்குதலை நடத்துவதிலும் இந்தியா தயங்கியது கிடையாது.ஆனால், சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் ஆனது இந்தியாவின் கையாள் ஆகாத தனத்தை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. ஒருபக்கம் இந்திய மக்கள் மற்றும் ஊடகவியலாளர் இதை கடுமையாக விமர்சித்து வரும் நிலைப்பாட்டில், மறுபக்கம் "இதற்கு போர் தான் ஒரே முடிவு", "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்கிற தூண்டுதல் கோஷங்களும் கிளம்புகின்றன. அதனால் இரு நாட்டிற்கும் இடையே போர் வெடிப்பதற்கான அபாயம் நிலவுகிறது. அப்படியொரு யுத்தம் நடந்தால் எந்த நாடு வெல்லும்? என்பது தான் இங்கும் எழும் மாபெரும் கேள்வி!

ஓரிரு படிகள் மேலே இருக்கிறது!
இந்தியாவும் சரி, பாகிஸ்தானும் சரி, இரண்டுமே உலகின் சிறந்த பயிற்சி பெற்ற மற்றும் மிகவும் தொழில்ரீதியான போர் படைகளை கொண்ட நாடுகளாக மதிக்கப்படுகிறது. மிகப்பெரிய ராணுவ படைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவோ மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் நவீன கருவிகள், இடை நிறுத்தும் ஆயுதங்கள், தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தவரை, இந்த இரண்டு சக்திகளுமே மற்ற நாடுகளை விட ஓரிரு படிகள் மேலே இருக்கிறது என்பது தான் உண்மை.

பலவீனம்!
இந்தியாவைப் பொறுத்தவரை, பாகிஸ்தானின் இராணுவத்தை விட மிகச் சிறப்பாக உள்ளது, இது பாகிஸ்தானின் பலவீனம் ஆகும். மறுகையில், இந்தியா ஒரு மிகப்பெரிய நீண்ட எல்லையை பாதுகாக்கும் பணிக்கு உட்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீனாவிடம் இருந்து அதன் வட மற்றும் வடகிழக்கு எல்லைகளை பாதுகாக்கும் பணி மிகவும் சுமையானது ஆகும், இது இந்தியாவின் பலவீனம் ஆகும். அதனால் தான் இரண்டு நாடுகளும் சமீப காலமாக அணு ஆயுத திறனைக் கொண்ட ஒரு ஏவுகணைகளை உருவாக்கி வருகின்றன.

உளவு செயற்கைகோள்!
நாம் வாக்கி டாக்கி மூலம் தகவல் சொல்லும் காலத்தில் வாழவில்லை, வலையமைப்பு மையப் போர் காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை உணர வேண்டும். அதாவது போர்க்கள நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இந்தியா தனக்கான உளவு செயற்கைகோள்களையும், ஊடுருவல் விண்கலங்களையும் கொண்டுள்ளது. மறுகையில் உள்ள பாகிஸ்தானோ, போர்க்களத்தில் செயலாற்ற தேவைப்படும் செயற்கைகோள் தரவுக்காக சீனாவின் உதவியை நாடும் நிலைப்பாட்டில் உள்ளது. இது பாகிஸ்தானின் மிகப்பெரிய பலவீனம் ஆகும்.

இந்தியா இஸ்ரேலின் கைகளை நம்பி உள்ளது!
எதிர்காலப் போர்கள் ஆனது பெரும்பாலும் ஆளில்லா வானூர்தி வாகனங்கள் (UAV) மூலம் தான் நிகழ்த்தப்படும் என்கிற கோணத்தில் பார்த்தால் - இரண்டு நாடுகளுமே இன்னும் அந்தந்த தொழில்நுட்பங்களில் வளர்ச்சி அடையவில்லை என்பது கசப்பான உண்மை. ஆளில்லா வானூர்தி வாகனங்களை பொறுத்தமட்டில், இந்தியா இஸ்ரேலின் கைகளை நம்பி உள்ளது, மறுகையில் உள்ள பாகிஸ்தானோ உள்நாட்டிலேயே பணியாற்றி வருகிறது.

எது சரியான ஒப்பீடு?
இந்த இடத்தில் இரண்டு நாடுகளின் இராணுவச் சக்திகளுக்கிடையில் நாம் ஒப்பீட்டை நிகழ்த்துவதை விட அந்த சக்திகளின் பின்னால் இருக்கும் வீரர் - வீராங்கனைகளின் போர் திறன் மட்டும் முடிவெடுக்கும் திறமை ஆகியவைகளை ஒப்பிடுவது தான் சரியான ஒப்பீடு ஆகும் என்பதும், ஆனால் அதை களத்தில் மட்டுமே காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications