Home
Scitech

கப்சிப் ஆன சீனா, பாக்.. 400 கிமீ தூரத்திலேயே செஞ்சி விட்ட DRDO விஞ்ஞானிகள்.. மிரட்டும் புது Anti-Stealth டெக்!

நவீன கால போர்களில், ஸ்டெல்த் தொழில்நுட்பம் (Stealth Technology) ஆனது - நீண்ட காலமாக ஒரு இறுதி துருப்புச்சீட்டாக பார்க்கப்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது. எதிரி நாட்டின் ரேடார்களில் சிக்கலால் கடந்து செல்லக்கூடிய விமானங்களை உருவாக்க பல நாடுகள் பில்லியன் கணக்கானபணத்தை செலவிடுகின்றன.

ஆனால் டிஆர்டிஓ (DRDO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Defence Research and Development Organisation) ஆனது ஒட்டுமொத்த உலக நாடுகளையும் - குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளை - வாய்பிளக்க வைக்கும்படியான புதிய ஆன்ட்டி-ஸ்டெல்த் ரேடார் தொழில்நுட்பத்தை உருவாகியுள்ளது.

கப்சிப் ஆன சீனா, பாக்.. மிரட்டும் புது Anti-Stealth டெக்!

இனி கண்ணுக்குத் தெரியாததும் கூட நன்றாக தெரியும்: பெங்களூரில் நடந்த ஏரோ இந்தியா 2025 நிகழ்வில், டிஆர்டிஓ ஆனது - இந்தியாவின் முதல் உள்நாட்டு மிக உயர் அதிர்வெண் (Very High Frequency) ஆன்ட்டி-ஸ்டெல்த் கண்காணிப்பு ரேடார் (Anti-stealth surveillance radar) ஆன DRDO-BEL VHF-SR-வை வெளியிட்டது.

இது வெறுமனே இந்தியாவின் இன்னொரு ரேடார் அமைப்பு மட்டுமல்ல; டிஆர்டிஓ மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆகிய இரண்டிற்கும் இடையேயான ஒத்துழைப்பிலிருந்து உருவான இந்த தொழில்நுட்பம் ஆனது ஒரு "கேம்-சேஞ்சர்" ஆகும். ஏனென்றால் இது எப்-35, பி-2 பாமர் விமானங்கள் மற்றும் சீனாவின் ஜே-20 போர் விமானங்கள் உட்பட உலகின் மிகவும் மேம்பட்ட ஸ்டெல்த் விமானங்களை எல்லாம் 400 கிலோமீட்டர் தொலைவிலேயே கண்டறியும் திறனை கொண்டுள்ளது.

இந்தியா இதை சாதியப்படுத்தியது எப்படி? பொதுவாக ஸ்டெல்த் விமானங்கள் ஆனது உயர் அதிர்வெண் ரேடார் அலைகளை உறிஞ்சும் அல்லது திசைதிருப்பும் சிறப்பு பொருட்கள் மற்றும் வடிவங்களுடன் வடிவமைக்கப்படும். அதாவது சாதாரண ஒளியின் கீழ் நம்முடைய கண்களுக்கு தெரியாததாக மாற்றும் ஒரு மேலங்கியை அணிவது போல தன்னை மறைத்துக்கொள்ளும்

ஆனால் விஎப்எச் (VFH) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வெரி ஹை ப்ரீக்வென்சி (மிக உயர் அதிர்வெண்) ரேடார் ஆனது மிக குறைந்த அதிர்வெண்களில் இயங்குகிறது. அதாவது சாதாரண பார்வைக்கு பதிலாக அகச்சிவப்பு பார்வையை பயன்படுத்துவது போல இது செயல்படும். ஸ்டெல்த் பொருட்களால் இந்த நீண்ட ரேடியோ அலைகளை உறிஞ்சுவோ அல்லது திசைதிருப்பவோ முடியாது!

ஒரு வழக்கமான டார்ச்சைப் பயன்படுத்தி ஒரு இருண்ட அறையில் ஒரு கருப்பு பூனையைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள். ஸ்டெல்த் விமானங்களை கண்டறிய முயற்சிக்கும்போது வழக்கமான ரேடார்கள் எதிர்கொள்ளும் விதம் இதுதான். ஆனால் டிஆர்டிஓ வின் விஎப்எச் ரேடார், மிகவும் மறைக்கப்பட்ட பொருட்களை கூட பிரகாசமாக ஒளிரச் செய்யும் ஒரு சிறப்பு அகச்சிவப்பு ஒளியை இயக்குவது போன்றது!

இந்தியாவிற்கு இது ஏன் முக்கியம்? ஆன்ட்டி-ஸ்டெல்த் கண்காணிப்பு ரேடார் அறிமுகம் செய்யப்படுவதற்கு இதைவிட சிறப்பான நேரம் இருக்க முடியாது. சீனா ஏற்கனவே ஜே-20 ஸ்டெல்த் போர் விமானங்களை இயக்கும் அதே வேளையில், சீனாவின் ஜே-35ஏ ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்குவது குறித்து பாகிஸ்தான் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆக மிகவும் பயனுள்ள ஆன்ட்டி-ஸ்டெல்த் திறன்கள் இல்லாமல், இந்தியாவால் சீனா மற்றும் பாகிஸ்தானின் லோ ரேடார் கிராஸ் செக்ஷன் (Low Radar Cross Section) அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடிந்து இருக்காது. ஆனால் இந்தியா இதுபோன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க பில்லியன் கணக்கில் செலவு செய்து, வெளிநாட்டு ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்குவதற்கு பதிலாக - ஒரு சிறந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. DRDO-BEL VHF-SR அமைப்பானது ஸ்டெல்த் விமானங்களை மட்டுமல்ல, ஸ்டெல்த் ட்ரோன்களுக்கு எதிராக செயல்படும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
India Vs China Vs Pak How DRDO New Anti Stealth RADAR Helps To Detect Advanced Aircraft Before 400 Kms
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X