Just In
- 1 min ago
அடேங்கப்பா..செம்மையா இருக்கு: ஆன்லைனில் கசிந்த புதிய சாம்சங் 5G போனின் புகைப்படம்.!
- 1 hr ago
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- 2 hrs ago
ரூ.16,000-க்கு கீழ் அசத்தலான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
- 2 hrs ago
தடைகளை உடைத்த ChatGPT! மாணவர்கள், ஊழியர்களை கெடுக்கிறதா? உண்மை என்ன?
Don't Miss
- Lifestyle
இந்திய ஆண்களுக்கு விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கை குறைய இந்த 5 விஷயங்கள்தான் முக்கிய காரணமாம்...!
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- News
ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக முடித்து கொண்ட நிர்மலா சீதாராமன்! கடந்த ஆண்டுகளை போல இல்லை.. எவ்வளவு நேரம்
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Sports
"இன்னும் ஒரே ஒரு போட்டிதான்.. சுப்மன் கில்லால் இந்தியாவுக்கு ஆபத்து".. பாக். சீனியர் எச்சரிக்கை!
- Movies
கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய அடுத்த பிரபலம்... அதிர்ச்சியில் படக்குழு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை "வாய் பிளக்க" வைக்கும் இந்தியா!
அடுத்தமுறை.. "இஸ்ரோ-லாம் (ISRO) ஒன்னுமே இல்ல.. அமெரிக்காவின் நாசா (NASA) தான்பா கெத்து!" என்று யாராவது கூறக்கேட்டால்..
"நமக்கு ஏன் இந்த தேவை இல்லாத டாப்பிக்லாம்! வாக்குவாதம் பண்ணி என்ன ஆகப்போகுது" என்று - வாயை மூடிக்கொண்டு - ஒதுங்கி விடாதீர்கள்!

வச்சி செஞ்சி விட்ருங்க!
ஏனென்றால், இந்தியாவில் இருந்துகொண்டு அமெரிக்காவிற்கு "முட்டுக்கொடுக்கும்" ஜீனியஸ்களை எல்லாம் அப்படியே உலவ விடக்கூடாது அல்லவா?
"சம்பவம்" என்று வந்துவிட்டால் கூட்டமாக இருந்தாலும் சரி.. சிங்கிள் ஆக இருந்தாலும்.. "வச்சி செஞ்சிடனும்" - நம்ம இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை போல!

ISRO - அப்படி என்ன செய்தது?
இன்னும் செய்யவில்லை; இனிமேல் தான் செய்யப்போகிறது!
இன்னொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால்.. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ "ஒரு குறிப்பிட்ட சாதனையை" மீண்டும் செய்யவுள்ளது!
அதாவது ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோள்களை விண்வெளிக்குள் செலுத்திய நாடுகளின் பட்டியலில் இந்தியா - மீண்டும் சேர உள்ளது!

அது... கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு சாதனை!
ஆம்! விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் எந்தவொரு நாடுமே - அமெரிக்காவின் நாசா உட்பட - கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு சாதனையை இஸ்ரோ செய்தது.
சரியாக, 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதியன்று ஒரே ராக்கெட்டில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, உலக சாதனை படைத்தது - இஸ்ரோ!

ரஷ்யாவை கீழே இறக்கிய இஸ்ரோ!
இஸ்ரோவிற்கு முன்பாக, ஒரே ராக்கெட்டில் (Dnepr Rocket) ரஷ்யா செலுத்திய 37 செயற்கைக்கோள்கள் தான் ஒரு பெரிய சாதனையாக இருந்தது. ஆனால் இஸ்ரோ செலுத்திய செயற்கைகோள்களின் மொத்த எண்ணிக்கை - 104 ஆகும்!
ஆனால், 4 ஆண்டுகளுக்கு பிறகு, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், ஒரே நேரத்தில் 143 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி, இஸ்ரோவின் சாதனையை முறியடித்தது!

மீண்டும் "களமிறங்கும்" இஸ்ரோ.. அதுவும் GSLV MkIII ராக்கெட் உடன்!
இதற்கிடையில், வருகிற அக்டோபர் மாதம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அதன் ஜிஎஸ்எல்வி மார்க் III (GSLV MkIII) ராக்கெட்டின் உதவியுடன் ஒரே நேரத்தில் 36 செயற்கைகோள்களை விண்வெளிக்குள் செலுத்த உள்ளது!
இதன் மூலம் இஸ்ரோவின் இன்னொரு ராக்கெட் ஆன ஜிஎஸ்எல்வி மார்க் III-யும் கமர்ஷியல் பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட்டுள்ளது; அதே சமயம் - ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோள்களை விண்வெளிக்குள் செலுத்திய நாடுகளின் பட்டியல், இந்தியா மீண்டும் இடம்பெறவுள்ளது!

இதற்கு முன்.. 345 செயற்கைகோள்களை.. அசால்ட் ஆக!
நினைவூட்டும் வண்ணம், கடந்த 1999 ஆம் ஆண்டு முதல், இந்தியா தனது போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (அதாவது பிஎஸ்எல்வி) ராக்கெட்டைப் பயன்படுத்தி 36 நாடுகளைச் சேர்ந்த 345 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது.
இந்த பட்டியலில் OneWeb நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களும் இணைய உள்ளது. அறியாதோர்களுக்கு, ஒன்வெப் என்பது இந்தியா - இங்கிலாந்து கூட்டு சேரும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனம் ஆகும்.

GSLV MkIII ராக்கெட்டை ஒரு பீஸ்ட் என்றே கூறலாம்!
640 டன் எடை கொண்ட GSLV MkIII ஆனது சாலிட், லிக்விட் மற்றும் கிரையோஜெனிக் இயந்திரங்களால் இயக்கப்படும் த்ரீ-ஸ்டேஜ் ராக்கெட் ஆகும்.
இந்த ராக்கெட் நான்கு டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை ஜியோசின்க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டிலும் (Geosynchronous Transfer Orbit), 10 டன் எடையுள்ள செயற்கைகோள்களை லோ-எர்த் ஆர்பிட்டிற்கும் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பயணத்தில் 6 டன்!
ஜிஎஸ்எல்வி MkIII ராக்கெட் ஆனது அதன் முதல் கமர்ஷியல் லான்ச்சில், சுமார் ஆறு டன் எடையுள்ள பேலோட்-ஐ கொண்டு செல்ல உள்ளது.
இப்படியாக, OneWeb நிறுவனத்தின் 650 செயற்கைக்கோள்கள் விண்வெளிக்குள் செலுத்தப்பட உள்ளது. இப்போது சொல்லுங்கள்.. யாரு கெத்து? அமெரிக்காவின் நாசாவா? இந்தியாவின் இஸ்ரோவா?
Photo Courtesy: NASA, ISRO, Wikipedia
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470