செவ்வாயிக்கு யாரை முதலில் அனுப்புவது: கருத்து மோதலில் யார் அந்த இருவர்.!

செவ்வாய் கிரகத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு மனிதர்கர்களை அனுப்ப முடியும் என்று நாசா ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு முதலில் யாரை அனுப்பவது என்று இந்திய தொழில் அதிபர் ஒ

|

செவ்வாய் கிரகத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு மனிதர்கர்களை அனுப்ப முடியும் என்று நாசா ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு முதலில் யாரை அனுப்பவது என்று இந்திய தொழில் அதிபர் ஒருவரும், அமெரிக்கா தொழில் அதிபரும் ஒருவரும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாயிக்கு யாரை முதலில் அனுப்புவது: கருத்து மோதலில் யார் அந்த இருவர்

இது உலக அளவில் பிரபலமாகியுள்ளது. இந்த கருத்து மோதல்கள் குறித்தும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்று தான் இன்று உலக அளவில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது.

யார் அவர்கள் இதுகுறித்து என்ன மாதிரியாக டுவிட்டரில் மோதிக் கொண்டார்கள் என்று பார்க்கலாம் வாங்க.

செவ்வாயிக்கு மனிதர்கள்:

செவ்வாயிக்கு மனிதர்கள்:

இன்னும் 25 ஆண்டுகளுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவமான நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து ஏறத்தாழ இருபத்தி இரண்டரை கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தை சென்றவடைதற்கு தொழில்நுட்ப ரீதியிலும், மருத்துவ ரீதியிலும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

9 மாதங்கள் ஆகும்:

9 மாதங்கள் ஆகும்:

தற்போதுள்ள ராக்கெட் தொழில்நுட்பத்தின்படி சென்றால் செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு 9 மாதங்களாகும். பூவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயணிக்கும் போது கண்பார்வை பறிபோகவும், எலும்புகள் பாதிப்படையும் ஆபத்து உள்ளது.

கதிர் வீச்சு அபாயம்:

கதிர் வீச்சு அபாயம்:

மேலும் காஸ்மிக் கதிர்வீச்சும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவே விரைவாக செல்லும் விதத்தில் ராக்கெட்டை உருவாக்க வேண்டியதும் அவசியமானது. இதற்கான பணிகளை இப்போதே தொடங்கினால் தொழில்நுட்ப உதவியுடன் 25 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் குறித்து ஆராய்ச்சி:

செவ்வாய் குறித்து ஆராய்ச்சி:

செவ்வாயில் மனிதர்களை எவ்வாறு தரையிறக்குவது, அங்கு அவர்களுக்கு என்ன மாதிரியான உணவு மற்றும் உதவிகள் கட்டமைப்புகள் அத்தியாவசியம் குறித்தும் ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விவாத்தில் ஈடுபட்டனர்:

விவாத்தில் ஈடுபட்டனர்:

இந்நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு முதலில் யாரை அனுப்பவது என்பது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா தொழிலதிபர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பேஸ் எக்ஸ், மகேந்திரா கருத்து மோதல்:

ஸ்பேஸ் எக்ஸ், மகேந்திரா கருத்து மோதல்:

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இந்த பணிகளில் ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியாவின் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

யாரை அனுப்புவது:

யாரை அனுப்புவது:

இந்நிலையில் தொழிலதிபர்கள் இருவரும் டுவிட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கு யாரை அனுப்புவது என்பது தொடர்பாக விவாதத்தில் ஈடுபட்டனர். கவிஞர்களை தான் முதலில் அனுப்ப வேண்டுமென ஆனந்த் மகேந்திரா தமது டுவிட்டரின் பதிவிட, பொறியாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளை அனுப்ப வேண்டுமென எலான் மஸ்க் பதிவிட்டார்.

ஆனந்த் மறுப்பு கருத்து:

ஆனந்த் மறுப்பு கருத்து:

அவர்களால் தான் புதிய கட்டமைப்புகளை உருவாக்க முடியுமென அவர் குறிப்பிட்டார். ஆனால் கவிஞர்களை தான் முதலில் அனுப்ப வேண்டுமென்றும், கவிஞர்களை தவிர மற்றவர்கள் முதலில் செல்வதில் அர்த்தமில்லை என்றும் ஆனந்த் தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Best Mobiles in India

English summary
India US business leaders debate on who to send first to Mars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X