பாகிஸ்தான் சீனாவை துரத்தியடிக்கும் இந்தியாவின் 5சேட்லைட்கள்.!
இந்நிலையில், அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதத்தை அடியோ அழிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கு உதவும் வகையிலும் நாட்டின் பாதுகாப்புக்கும் இஸ்ரோ மூலம் இந்தியா 5 சேட்லைகளை ஏவ இருக்கின்
நாட்டின் பாதுகாப்புகாக இந்தியா 5 செயற்கைகோளை ஏவு இருக்கின்றது. ஏற்கனவே மிஷன் சக்தி மூலம் விண்வெளியில் உளவு பார்க்கும் செயற்கைகோளையும், செயற்கோள் எதிர்ப்பு ஆயுத்தால் சுட்டு வீழ்த்தியது.
இதைத்தொடர்ந்து, எமிசாட் செயற்கைளோளை ஏவி எதிரியின் ரேடாரை கண்காணிப்பதில் புதிய சாதனை செய்தது.
இந்நிலையில், அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதத்தை அடியோ அழிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கு உதவும் வகையிலும் நாட்டின் பாதுகாப்புக்கும் இஸ்ரோ மூலம் இந்தியா 5 சேட்லைகளை ஏவ இருக்கின்றது.

இதனால் இந்தியாவை அமெரிக்கா வியப்புடன் பார்த்து வருகின்றது. மேலும், இந்தியா உளவு செயற்கைகோளை அனுப்பும் நடவடிக்கையால் பாகிஸ்தான்-சீனா தெறித்துள்ளது.
எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கும் பாகிஸ்தானும் கதறும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.

ஆன்டி சேட்லைட் ஆயுதம் வெற்றி:
இந்தியாவின் ஆன்டி சேட்லைட் ஆயுதம் எனப்படும் செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுதம் வெற்றியடைந்துள்ளது. மேலும், குறைந்த புவிவட்ட பாதையில், செயற்கைகோளை எதிர்த்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த சோதனையில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது. மேலும், விண்வெளி வல்லரசு ஆகவும் உருவெடுத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

4 வது நாடான இந்தியா:
வானில் உளவு பார்க்கும் செயற்கைகோள்களை இந்தியா எளிதாக தாக்கி அழிக்க முடியும். இதன் மூலம் ஆன்டி சேட்லைட் ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் பட்டியில் இந்தியா தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து 4 வது நாடாக உருவாகியுள்ளது.

குறைந்த புவி வட்ட பாதை:
மேலும், குறைந்த புவி வட்ட பாதையில் இந்தியா செயற்கைகோள் எதிர்ப்பு ஆயுத்தால் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது மூன்று நிமிடத்தில் நிகழ்த்தப்பட்டது. இது இது மிஷன் சக்தியின் கீழ் நடத்தப்பட்டது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

2000 கி.மீ உயரத்தில் அழிக்கும்:
மேலும், குறைந்த புவிவட்ட ஆர்பிட் எனப்படும் 2000 கி.மீ உயரத்தில், ஏ-சாட் செயற்கை ஆயுதங்களை அழிக்க அல்லது இது செயலிக்க செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு ஆயுதமாகும். இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை பாதுகாப்பதற்காக மிஷன் சக்தி ஒரு முக்கிய படிக்கல்லாக இருக்கின்றது.

A-SAT ஏவுகணை :
இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு A-SAT ஏவுகணை புதிய பலத்தை தருவதாக பிரதமர் கூறினார். மேலும், எங்கள் திறனை யாருக்கும் எதிராக பயன்படுத்த முடியாது. சர்சதே நாடுகளுக்கும் உறுதியளித்தார். இந்தியாவின் பாதுகாப்புத் திட்டமாகும். நாம் விண்வெளியில் ஆயுதங்களை எதிர்த்து நிற்கிறோம். இந்த சோதனையானது சர்வதேச சட்டம் அல்லது ஒப்பந்தங்களை மீறுவதாக இல்லை. "

ரேடாரை காட்டும்:
என்ன மாதிரியான ரேடாரை எதிரிகள் பயன்படுத்துகின்றனர் என்பதையும் இந்த செயற்கைக்கோள் மூலம் அறியமுடியும். சில நாட்களுக்கு முன்னர் விண்ணில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் மிசன் சக்தி என்ற சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியது.

எமிசாட் செயற்கைகோள்:
இந்திய பாதுகாப்புத்துறையின் பலத்தை கூட்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 749 கிலோ மீட்டர் தொலைவில் புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்டுள்ள எமிசாட் செயற்கைக்கோளானது, எதிரிகளின் ரேடார் சிக்னல்களை கண்டறியும் வல்லமை பெற்றது.

5 செயற்கைகோள் ஏவும் இஸ்ரோ:
பாதுகாப்பு படையினரின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் மேலும் 5 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி 4 ரிசாட் வகை செயற்கைகோள்களையும், கார்ட்டோசாட் 3 வகை செயற்கைகோள் ஒன்றையும் விண்ணில் செலுத்தவுள்ளது.

பாலக்கோட் தாக்குதல் உதவியது:
இந்த ரிசாட் வகை செயற்கை கோள்களால் அனுப்பப்பட்ட வரைபடங்களை வைத்தே பாலக்கோட்டில் தீவிரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கடல் பகுதிக்கும் முற்றுப்புள்ளி:
எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் அதிகரித்து வரும் சீனக் கடற்படை செயல்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு சார்ந்த செயற்கைகோள்களை அதிக அளவில் செலுத்த உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அடியோடு முடங்கும்:
நிலப்பகுதி மற்றும் அல்லாமல் கடல் பகுதி அத்துமீறலுக்கும் இந்தியா அடியோடு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் இறங்கியுள்ளது. இதனால் சீனா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் நடுக்கத்தில் இருக்கின்றன.

விண்வெளியில் வல்லரசு:
இந்தியா தற்போது சுமார் 29 நாடுகளை தனது நாட்டு செயற்கைகோள் மூலம் காண்காணித்து வருகின்றது. மேலும், விண்வெளியிலும் வளர்ந்த நாடுகளுடன் போட்டி போடும் வகையில் புதிய பரிமாணத்துடன் உருவெடுத்து இருப்பது அமெரிக்காவையும் திக்குமுக்காட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications