Home
Scitech

மோடி எப்படி ரஷ்யாவை கழட்டி விட்டார்? இதுதான் அந்த சமாச்சாரம்!

ஒட்டுமொத்த உலக நாடுகளும் தான். ஆகையால் ஆயுதம் உருவாகும் நேரத்தில், பணத்தில் மக்களின் முன்னேற்றத்தை பற்றி யோசிக்கலாமே என்று வாதிடும் தோழமைகள் இதோடு கொள்ளவும்.

பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற "நிலை இல்லாத" மனநிலையயை கொண்ட நாடுகளின் அருகில் உள்ளோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இந்தியா மேலுமொரு அட்டகாசமான காரியத்தை நிகழ்த்தி உள்ளது.

மோடி எப்படி ரஷ்யாவை கழட்டி விட்டார்? இதுதான் அந்த சமாச்சாரம்!

எதிரி நாடுகளின் ஆயுத பலத்துடன் எப்போதும் சரிக்கு சமமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாடு இந்தியா மட்டும் அல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளும் தான். ஆகையால் ஆயுதம் உருவாகும் நேரத்தில், பணத்தில் மக்களின் முன்னேற்றத்தை பற்றி யோசிக்கலாமே என்று வாதிடும் தோழமைகள் இதோடு கொள்ளவும். இந்த கலி யுகத்தில் ஒரு நாட்டின் ஆயுத வளர்ச்சியும் அத்தியாவசியமே என்கிற புரிதல் உள்ள தோழமைகள் தொடரவும்.

ஐ என் எஸ் சென்னையில் நடந்த வெற்றிகாரமான சோதனை!

ஐ என் எஸ் சென்னையில் நடந்த வெற்றிகாரமான சோதனை!

இந்தியா, இஸ்ரேலுடன் இணைந்து கப்பலில் இருந்து செலுத்தப்படும் வான் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி வந்தது. தற்போது அந்த ஆயுத அமைப்பு நமது ஐ என் எஸ் சென்னையில் வெற்றிகரமாக பரிசோதிக்கபட்டதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

எப்போது நடந்தது?

எப்போது நடந்தது?

இந்திய கடற்படை மற்றும் இஸ்ரேலிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஏவுகணை சோதனை ஆனது, கடந்த வியாழக்கிழமை (24 டிசம்பர்) அன்று கடற்பகுதியில் நிகழ்த்தப்பட்டு உள்ளது. பாரக்-8 இடைமறிப்பு ஏவுகணை என்று அழைக்கப்படும் இந்த மிஸைல் ஆனது லாங் ரேன்ஜ் சர்பேஸ் டூ ஏர் ஏவுகணை (Long Range Surface-to-Air - LRSAM) என்றும் அழைக்கப்படும்.

சுவாரசியமான பகுதி!

சுவாரசியமான பகுதி!

இந்த ஆயுத பரிசோதனையின் சில சுவாரசியமான பகுதிகளை பொறுத்தவரை, பாரக் -8 ஆனது, ஐ என் எஸ் சென்னையிலிருந்து ஒரு குறைந்த உயரத்தில் பறந்து செல்லும் இலக்கை நோக்கி சுடப்பட்டது. ஏவப்பட்ட ஏவுகணை ஆனது நேரடி இலக்கை துல்லியமாக தாக்கியது மட்டும் இன்றி, அனைத்து குறிக்கோள்களும் நிறைவேற்றியும் உள்ளது என்று நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏவுகணை உருவாக்கத்தின் பின்னணி!

ஏவுகணை உருவாக்கத்தின் பின்னணி!

பராக் 8 ஏவுகணை ஆனது, ஐ ஏ ஐ எனப்படும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளின் தலைமையின் கீழ், இரு நாடுகளின் கடற்படை, ரபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், ஐஏஐ எல்டா குழுமம் மற்றும் இந்தியாவில் உள்ள உள்ளூர் தொழில்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு உருவாக்கம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக நிலப்பிரபுத்துவ சச்சரவுகள்!

நீண்ட காலமாக நிலப்பிரபுத்துவ சச்சரவுகள்!

சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நீண்ட காலமாக நிலப்பிரபுத்துவ சச்சரவுகள் நிலவுகின்றன காரணத்தினால் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு வந்ததில் இருந்து இதுபோன்ற ஏகப்பட்ட மற்றும் பெரிய ஆயுத தயாரிப்பு ஒப்பந்தங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது, இராணுவ வன்பாட்டிற்கான பாரம்பரிய நட்பு நாடான ரஷ்யாவை நம்புவதில் இருந்து இந்தியா விலகி வருகிறது. அதனால் தான் சமீப ஆண்டுகளாக, இந்தியா தனது உறவுகளை இஸ்ரேலிடம் - இராஜதந்திர ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் - ஆழப்படுத்தியுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்கு?

இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்கு?

கடந்த ஆண்டு, பாரக் -8 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் கடல்வழிப் பதிப்பை அளிப்பதற்கு இந்தியாவுடன் ஆன 777 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஐஏஏ (இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்) வென்றது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இஸ்ரேலின் அடேங்கப்பா ஆயுத பின்னணி!

இஸ்ரேலின் அடேங்கப்பா ஆயுத பின்னணி!

இஸ்ரேல் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 1 பில்லியன் டாலர்கள் வரையிலாக இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதில், இந்தியாவிற்கு ஒரு பெரிய பாதுகாப்பு வழங்குநராக உள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளும் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் அடுத்த பல ஆண்டுகளுக்கு, நடுத்தர தூர ஏவுகணைகள், ஏவுகணைகள் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு வழங்கலும் அடங்கும்.

Best Mobiles in India

English summary
India tests new anti-radiation missile to take out enemy radars: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X