Subscribe to Gizbot

இனி பாகிஸ்தான் வாயே திறக்காது; அப்துல் கலாம் தீவில் அப்படி என்ன நடந்தது.?

Written By:

சதா 24 மணிநேரமும் நாட்டின் வறுமை மற்றும் பட்டினிச்சாவு பற்றியே கவலைக்கொள்ளும் நம்மில் பெரும்பாலானோர்களுக்கு நாட்டின் பாதுகாப்பும் மற்றும் அதன் கீழ் இருக்கும் ஒட்டுமொத்த உயிர்களையும் பற்றி யோசிக்க நேரமிருக்காது; முக்கியமாக மனமிருக்காது.

ஒருவேளை நாம் அனைவரும் சிறைச்சாலைகளே அல்லது குற்றங்களே அல்லது விதிமீறல்களே இல்லாத பூமியில் பிறந்திருந்தால், மிகவும் நேர்மையான அல்லது வெளிப்படையான மனித இனம் சூழ வாழ்ந்திருந்தால் பசி மற்றும் பட்டினியை பிரதான கவனத்தில் கொள்ளலாம். இவன் எப்போது சறுக்குவான்; அவன் கழுத்தை எப்போது கவ்விக்கொள்ளலாம் என்று காத்திருக்கும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில், முயல்குட்டிகளை வளர்ப்பது எந்த விதத்திலும் நியாமில்லை.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பதிலுக்கு மிரட்டுவதும் ஒருவகையில் கடமை தான்.!

பதிலுக்கு மிரட்டுவதும் ஒருவகையில் கடமை தான்.!

இது சாமானியர்களுக்கு புரியுமோ இல்லையே, இந்திய அரசாங்கம் உட்பட நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமையை ஏற்றுள்ள ஒவ்வொருவருக்கும் நன்றாக புரியும். ஆக, பாகிஸ்தானின் வாய்சவடாலுக்கு பதில் கொடுப்பது ஒன்றும் தேசகுற்றமல்ல; அதுவும் ஒரு கடமை தான். அப்படியான ஒரு பதிலடி தான் ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் நிகழ்ந்தது.

சர்பேஸ் டூ சர்பேஸ் ஏவுகணை.!

சர்பேஸ் டூ சர்பேஸ் ஏவுகணை.!

சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அசாதாரணமாக எட்டி அழிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத பலமான அக்னி -2 ஏவுகணையின் சோதனை நேற்று 8.38 மணியளவில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த சர்பேஸ் டூ சர்பேஸ் ஏவுகணை சோதனையானது, தீவின் ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சில் (Integrated Test Range - ITR) இருந்து மொபைல் லான்ச்சரில் இருந்து நடத்தப்பட்டது.

2,000 கிமீ தூரத்திற்கு பாயும் திறன்.!

2,000 கிமீ தூரத்திற்கு பாயும் திறன்.!

அக்னி 2 ஆனது அணுவாயுதத்தை சுமந்து செல்லும் திறன்கொண்ட, ஒரு 20 மீட்டர் நீளமுள்ள கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கக்கூடிய (பாலிஸ்டிக்), 17 டன் எடை கொண்ட ஒரு ஏவுகணையாகும்.இது சுமார் 1000 கிலோ எடையை சுமந்து கொண்டு 2,000 கிமீ தூரத்திற்கு பாயும் திறன் கொண்டது.

தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு.!

தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு.!

இன்னும் குறிப்பிட்டு கூறவேண்டுமெனில் அக்னி -2 என்பது ஒட்டு இரண்டு கட்ட பாதை கொண்ட ஏவுகணையாகும். ஒரு மேம்பட்ட மற்றும் உயர் துல்லியமான வழிசெலுத்தல் அமைப்பு (high accuracy navigation system) மற்றும் ஒரு தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (unique command and control system ) இது வழிநடத்தப்படும்.

துல்லியமான வெற்றி

துல்லியமான வெற்றி

இந்த சமீபத்திய சோதனையின் முழு போக்கும் - அதிநவீன ரேடார்கள், டெலிமெட்ரி கண்காணிப்பு நிலையங்கள், எலெக்ட்ரோ-ஆப்டிக் கருவிகள் மற்றும் - வங்க கடலோரப் பகுதியின் வரம்பிற்கு கீழ் அமைந்துள்ள இரண்டு கடற்படை கப்பல்களால் கண்காணிக்கப்பட்டு, துல்லியமான வெற்றியை அடைந்துள்ளது.

லாஜிஸ்டிக் ஆதரவு

லாஜிஸ்டிக் ஆதரவு

அக்னி 2 ஏவுகணையானது ஏற்கனவே சேவையில் ஈடுபட்டுள்ளதென்பதும், இந்த சமீபத்திய சோதனையானது, இராணுவ ஆராய்ச்சி மூலோபாய படைகளின் (SFC) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வழங்கிய லாஜிஸ்டிக் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
அக்னி ஏவுகணைகளின் வீச்சு

அக்னி ஏவுகணைகளின் வீச்சு

இதர அக்னி ஏவுகணைகளின் வீச்சை பொறுத்தமட்டில் அக்னி 1 ஆனது 700 கிமீ வீச்சும், அக்னி -3 ஆனது 3,000 கிமீ வீச்சும், அக்னி -4 மற்றும் அக்னி-5 ஆகுல ஏவுகணைகள் மிக நீண்ட தூர தாக்குதல் எல்லைகளை கொண்டுள்ளன. அக்னி-2 ஏவுகணையின் முதல் சோதனையானது கடந்த ஏப்ரல் 11, 1999 அன்றும் பின்னர் இறுதியாக மே 4, 2017 அன்றும் நடந்தது.

பசித்தவனுக்கு சோறு இல்லை; ஆனா பாகிஸ்தானை பயமுறுத்த 39,000 கோடி.!

பசித்தவனுக்கு சோறு இல்லை; ஆனா பாகிஸ்தானை பயமுறுத்த 39,000 கோடி.!

சமீபத்தில் வெளியான 2018 பட்ஜெட் எனும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல - ஒரு இந்திய ராணுவ நடவடிக்கை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பாதுகாப்பென்பது மிகவும் அவசியாமானது தான் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.!

இருப்பினும், இந்தியாவின் ராணுவ பலத்துடன் ஒப்பிடும் அளவிற்கு திறனற்ற பாகிஸ்தானை அச்சுறுத்தும் நோக்கத்தின்கீழ் நிகழ்த்தப்படுமொரு ராணுவ பாதுகாப்பு நடவடிக்கையானது சாமானிய மக்களின் கடுப்பை கிளப்பும் என்பதிலும் சந்தேகமில்லை. ரஷ்யாவிடம் இருந்து சுமார் ரூ.39,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் பேச்சுவார்த்தையானது நடக்கிறதாம்.

ஏவுகணை அமைப்புகளை இந்தியா வாங்க திட்டம்.?

ஏவுகணை அமைப்புகளை இந்தியா வாங்க திட்டம்.?

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியானதொரு தகவலின்படி ஐந்து மேம்பட்ட எஸ்-400 ட்ரையூம் விமான பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை (Advanced S-400 Triumf air defence missile systems) ரஷ்யாவிடம் இருந்து ராணுவ பயன்பாட்டிற்காக இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளது

உலகின் சிறந்த விமான பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.!

உலகின் சிறந்த விமான பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்.!

இந்தியா வாங்க திட்டமிடும் எஸ்-400 ஆனது "உலகின் சிறந்த விமான பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்". இந்த ஏவுகணை அமைப்பானது எதிரிடையான மூலோபாய குண்டுவீச்சுகள், உளவு விமானங்கள். ட்ரோன்கள், வேகமான போர் விமானங்கள், ஏவுகணைகள் ஆகியவைகளை 400 கிமீ மற்றும் 30 கிமீ உயரத்தில் தாக்கும் வல்லமை கொண்டவைகள் ஆகும்.

ஒப்பந்தத்தின் கரு.!

ஒப்பந்தத்தின் கரு.!

இந்த எஸ்-400 ஆயுத அமைப்பானது, பாகிஸ்தானின் குறுகிய-தூர அணுசக்தி ஏவுகணையான நாசர் (Hatf-IX) போன்ற ஏவுகணைகளை தவடுபொடியாக்க முடியும். ஆக நாசர் ஏவுகணைகளை மையப்படுத்தியே பெரும்பாலான அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வந்த அண்டை நாடான பாகிஸ்தான் இனி சத்தம் போடாமல் இருக்கும் என்பதே இந்த ரூ.39,000 கோடி ஒப்பந்தத்தின் கருவாகும்.

சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா.!

சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா.!

இந்த ஒப்பந்தத்தில் சீனாவிற்கு அடுத்த இடத்தில இந்தியா உள்ளதென்பதும், கடந்த 2016-ஆம் ஆண்டில், இதே ஆயுத அமைப்பிற்காக நிகழ்த்த உடன்படிக்கையின்கீழ் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா செலவிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் கூற்றின்படி, அடுத்த 54 மாதங்களில் ஐந்து எஸ்-400 அமைப்புகளும் இந்தியாவுக்கு அனுப்பப்படலாம்.

சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சோனிக்.!

சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சோனிக்.!

முன்பு ரஷ்ய பாதுகாப்பு படைகளுக்கு மட்டுமே கிடைத்த எஸ்-300 இன் மேம்பட்ட பதிப்பான எஸ்-400 ஆனது பல்வேறு ஏவுகணை அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வல்லமை கொண்டது. மற்றும் பல்வேறு வகையான சூப்பர்சானிக் மற்றும் ஹைப்பர்சோனிக் வகை ஏவுகணைகளையும் கொண்டுள்ளது.

ஏறக்குறைய 17,000 கிலோ மீட்டர் வேகத்தில்சென்று தாக்கும்.!

ஏறக்குறைய 17,000 கிலோ மீட்டர் வேகத்தில்சென்று தாக்கும்.!

இதில் நீண்ட தூரம் (120-370 கிமீ) இடைமறிப்பு ஏவுகணைகளுக்கான பேச்சுவார்த்தையை தான் இந்தியா நிகழ்த்தி வருகிறது. மொபைல் ஏவுகணை தளத்தில் இருந்து பாயும் இவ்வகை ஏவுகணைகளானது 120 கிமீ, 200 கிமீ, 250 கிமீ மற்றும் 380 கிமீ ஆகிய தூரங்களில் உள்ள இலக்குகளை ஏறக்குறைய 17,000 கிலோ மீட்டர் வேகத்தில்சென்று தாக்கும்.

எந்தவொரு விமானத்தை விடவும் வேகமானது.!

எந்தவொரு விமானத்தை விடவும் வேகமானது.!

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் எந்தவொரு விமானத்தை விடவும் வேகமான இந்த ஏவுகணை அமைப்பானது - மூலோபாய குண்டுவீச்சுகள், மின்னணு போர் விமானங்கள், உளவு விமானம், ஆரம்ப எச்சரிக்கை ரேடார் விமானங்கள், போர் விமானங்கள், மூலோபாய க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவைகளை கூட இலக்காகக் கொள்ளும் திறன் வாய்ந்ததாகும்.

அரசாங்கத்தால் செய்ய முடியாததை, மாணவர்கள் செய்து சாதனை.!

அரசாங்கத்தால் செய்ய முடியாததை, மாணவர்கள் செய்து சாதனை.!

அதிநவீன தொழில்நுட்பத்தை ஒரு சாபமென கருதும் மக்கள் ஒருபக்கமிருக்க, அதை ஒரு வரமாக மாற்றும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானதொரு வரம் தான் - கேரளாவில் உள்ள மாணவர்களின் கூட்டு உழைப்பின்கீழ் உருவாக்கம் பெற்றுள்ள ஒரு ரோபோட்.!

அனுதினமும் நாம் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான படைப்புக்களை போல இந்த ரோபோட்டை கடந்து சென்றுவிட இயலாது ஏனெனில் இந்த ரோபோட் ஆனது இதுநாள் வரை நாம் கேள்விப்பட்ட, சந்தித்த, பார்த்து பழகிய மனித மரணங்களை ஒன்றுமில்லாமல் செய்யவுள்ளது.

திருவனந்தபுரத்து கில்லாடிகள்.!

திருவனந்தபுரத்து கில்லாடிகள்.!

கழிவுநீர் தொட்டிகளுக்குள் மூச்சைப்பிடித்து இறங்கும் பணியாளர்கள், விஷவாயு தாக்கி இறக்கும் கொடுமையான சிக்கலை தீர்த்துக்கட்ட திருவனந்தபுரத்து கில்லாடிகள் ஒரு மீட்டர் உயர ரோபோவை வடிவமைத்துள்ளனர். ஆம், இது கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் ஒரு ரோபோட் ஆகும்.

இந்த ரோபோட் எப்படி வேலை செய்யும்.?

இந்த ரோபோட் எப்படி வேலை செய்யும்.?

'பென்டிக்யூட்' என்று அழைக்கப்படும் இந்த ரோபோட் ஆனது மொத்தம் நான்கு கால்களை கொண்டுள்ளது மற்றும் வைஃபை மற்றும் பிற கட்டுப்பாட்டு பேனல்களுடன் இணைக்கப்பெற்றுள்ளது. ஆழமான கழிவுநீர் தொட்டியின் மேல்புறத்தில் இருந்தபடியே அதன் கால்களை உள்ளேவிட்டு, கழிவுகளை வெளியே துப்பரவு செய்கிறது. பின்னர் கழிவுகளைஒரு வாளிக்குள் போடப்படுகிறது.

காற்றழுத்தவியலின் கீழ் இயங்குகிறது.!

காற்றழுத்தவியலின் கீழ் இயங்குகிறது.!

இந்த 'பென்டிக்யூட்' ரோபோட் ஆனது காற்றழுத்தவியலின் கீழ் இயங்குகிறது. அதாவது வாயு அல்லது அழுத்தம் நிறைந்த காற்றைப் பயன்படுத்துவதன் மூலம் இயக்கப்படுகிறது. இந்த செயல்பாட்டில் கனரக மின்னணு உபகரணங்கள் பயன்படுத்த கூடாது. ஏனெனில் அவையள் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து வெளிப்படும் வாயுக்களின் விளைவாக வெடிப்புகளை நிகழ்த்தும் ஆபத்துகள் ஏற்படலாம்.

இதுவரை நிகழ்ந்த இறப்புகள்

இதுவரை நிகழ்ந்த இறப்புகள்

கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியின்கீழ், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 1,670 பேர் இந்தியாவில் இறந்துள்ளனர்.இந்த இறப்பு விகிதத்தை 'பென்டிக்யூட்' போன்ற பல படைப்புகள் குறைக்கும், கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

கேரள அரசு அங்கீராதித்துள்ளது

கேரள அரசு அங்கீராதித்துள்ளது

பல உயிர்களை காப்பாற்றும் நோக்கத்தின் கீழ் உருவான இந்த கண்டுபிடிப்பை கேரள அரசு அங்கீராதித்துள்ளது என்பதும், பொங்கல் விழாவிற்கு முன்னதாகவே இந்த ரோபோவின் சோதனையை கேரளா நீர் ஆணையம் நிகழ்த்தியது என்பதும் கூடுதல் நற்செய்தி. மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
India test-fires nuclear capable Agni-II missile. Read more about this in Tami GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot