ஒரு இலக்கையும் விட்டுவைக்காத இந்தியாவின் புதிய 'சர்ஃபேஸ்-டூ-ஏர் மிஸைல்'..!

|

ஆயுத பலம் கொண்ட நாடு சொல்லும் போது தான் "அமைதி" என்ற வார்த்தைக்கான அர்த்தம் புரிந்துகொள்ளப்படுகிறது, உலக நாடுகளின் நிலை அப்படித்தான் இருக்கிறது. அண்டை நாடுகளும், நம்மை எளிதில் அணுக கூடிய உலக நாடுகளும் தத்தம் ஆயுத கிடங்குகளில் பூக்களை வளர்க்கவில்லை என்கிற போது அதிநவீன ஆயுத வளர்ச்சியில் முன்னேற்றம் காணவில்லை என்றால் பின்வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை நன்கு அறிந்த ஒரு நாடு - நம் இந்தியா..!

அதனை வெளிப்படுத்தும் ஒரு வெற்றி மைல்கள் தான் இந்தியாவின் புதிய மிஸைல் டெக்னாலஜியான - 'சர்ஃபேஸ்-டூ-ஏர் மிஸைல்' (surface to air missile)..!

#1

#1

ஒடிசா கடலோரப் பகுதியின் பாதுகாப்பு தளத்தில் இருந்து, மேற்பரப்பில் இருந்து காற்றுக்குள் செல்லும் புதியவகை ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா..!

#2

#2

இந்தியா இந்த சோதனையை இஸ்ரேல் உடன் இணைந்து நிகழ்த்தியது, இந்த நடுத்தர தூர ஏவுகணையை (எம்ஆர்-எஸ்ஏஎம் ) இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளின் கூட்டு முயற்சி தயாரிப்பாகும்..!

#3

#3

08.15 மணிக்கு சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை ரேஞ்ச்சில் (ஆகாஷ்) இருந்து மொபைல் லாஞ்சர் மூலம் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Defence Research and Development Organisation - DRDO) தகவல்கள் தெரிவிக்கின்றன.

#4

#4

உடன் இந்த சோதனையில் ஏவுகணையானது அனைத்து இலக்குகளையும் சந்தித்து பெரிய அளவிலான துல்லியமான வெற்றியை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#5

#5

ரேடார்களிடம் இருந்து சிக்னல் கிடைத்ததும், வங்காள விரிகுடா மீது பறக்கும் ஒரு ஆளில்லா விமான வாகனத்தை (பன்ஷீ ) இலக்காக கொண்டு சீறிப் பாய்ந்துள்ளது 'சர்ஃபேஸ்-டூ-ஏர்' ஏவுகணை.

#6

#6

ஏவுகணையை தவிர்த்து அதில் பல செயல்பாட்டு கண்காணிப்பு அமைப்பு மற்றும் ராடார் அச்சுறுத்தல் எச்சரிக்கையை (எம்.எப் ஸ்டார் ) கண்டறிதல் , கண்காணிப்பு மற்றும் ஏவுகணை வழிகாட்டல் ஆகிய திறன்களும் உள்ளது.

#7

#7

எம்.எஃப் - ஸ்டார் திறன் இணைப்பு கொண்ட ஏவுகணையானது எந்தவொரு வான்வழி அச்சுறுத்தல்களையும் நடுநிலையான முறையில் கையாள பயனர்களுக்கு வழிவகுக்கும்.

#8

#8

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்டிரீஸ் கூட்டு முயற்சியில் உருவான இந்த சோதனையானது ஆரம்பத்தில் ஜுன் 29-ஆம் தேதி அன்று நிகழ்த்தலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது பின்பு இன்று கடைசி நொடியில் தள்ளி வைக்கப்பட்டடு நேற்று நிகழ்த்தப்பட்டது.

#9

#9

இதுபோன்ற மேற்பரப்பு காற்று ஏவுகணை வகையில் நீண்ட தூர மற்றும் நடுத்தர தூர என்ற இரண்டு பிரிவிலும் ஆண்டுக்கு 100 ஏவுகணைகள் என்று உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

#10

#10

இந்த சோதனைக்கு முன்னதாக, இந்திய கடற்படை நீண்ட அளவிலான மேற்பரப்பு காற்று ஏவுகணை (எல்ஆர்-எஸ்ஏஎம் ) ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#11

#11

இந்திய கடற்படையின் அந்த ஏவுகணை சோதனையானது கடந்த டிசம்பர் 30, 2015 அன்று மேற்கு சமுத்திரத்தின் கடற்பரப்பில் இருந்த ஐஎன்எஸ் கொல்கத்தாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#12

#12

அதுபோன்ற நடுத்தர அளவிலான மேற்பரப்பு காற்று ஏவுகணைகள் மூலம் 50 முதல் 70 கி.மீ தூரம் இலக்குகளை கொள்ள முடியும். தற்போது இந்தியாவால் அந்த ஏவுகணைகளை இடைவெளியை நிரப்ப முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

#13

#13

வின்ஸ்டன் சர்ச்சில் கட்டிக்காத்த ரகிசயம் அம்பலம்.!!


எதிரிகளைத் திணறடிக்க தயார் நிலையில் தேஜாஸ்.!!

#14

#14

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
India test-fires new surface-to-air missile co-developed with Israelis. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X