இந்திய ராணுவத்தை பார்த்து 'இதை' கற்றுக்கொள்ளுங்கள் ஸ்கூல் பாய்ஸ்.!
ஆயிலில் சுட்ட வடைகளை விட, பாகிஸ்தான் மற்றும் வடகொரியாவின் வாயினால் சுட்ட வடைகளே அதிகம்.
ஆயிலில் சுட்ட வடைகளை விட, பாகிஸ்தான் மற்றும் வடகொரியாவின் வாயினால் சுட்ட வடைகளே அதிகம்.!

ஆ..வூனா.. இந்தியாவை உலக வரைபடத்தில் இருந்தே அழித்துவிடுவோம் என்று கொக்கரிக்கும் சில பென்சில் பாய்ஸ்களுக்கு, இந்தியா சார்பாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன் - பலம் என்பது தன் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கானதே ஒழிய, பிற நாட்டை பயமுறுத்துவதற்கும், கிடைக்கப்பெற்ற பலத்தால் பிதற்றுவதற்கும் அல்ல.!

அதை செய்யாமல் இருக்க முடியவில்லையா.? ரொம்ப சிம்பிள். இந்தியாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.!

வேடிக்கை காட்டுமொரு சோதனையல்ல
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, ஒடிசாவில் இந்திய இராணுவம் மேற்கொண்ட ஒரு ஆயுத சோதனையானது வெறுமனே நடக்குமொறு - வேடிக்கை காட்டும், பீதியை கிளப்புமொரு சோதனையல்ல. அன்று இந்தியாவின் அணுசக்தித் திறனின் வீச்சு மேலும் ஒருபடி மேல்சென்றது என்றே கூறலாம்.

350 கிமீ வீச்சு
அன்று இந்தியாவின் மற்றொரு பெருமையான பிரித்வி -2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சண்டிகரில் உள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேன்ஞ்சின்கீழ் உள்ள மொபைல் ஏவுதளத்திலிருந்து சுமார் 350 கிமீ வீச்சு கொண்ட ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

பணி நோக்கங்கள்
சரியாக 11.35 மணியளவில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் ஒரு முழு வெற்றி அடைந்ததாக அறிவியக்கப்பட்டது. அதாவது ஏவுகணையானது சோதனை முயற்சியில், அதன் அனைத்து பணி நோக்கங்களையும் சரியாக சந்தித்து என்று அர்த்தம்.

"வழக்கம்போல்" வெற்றி
கடந்த ஜனவரி 18 அன்று, ஒடிஷா கடற்கரையின் அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யபட்ட அக்னி -1 ஏவுகணைக்கு பிறகு நடந்த இந்த சோதனையும் "வழக்கம்போல்" வெற்றிகரமாக முடிந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


அணு ஆயுதம் உட்பட
பிரித்வி -2 ஏவுகணையானது 500 முதல் 1000 கிலோகிராம் எடை வரையிலான ஆயுதங்களை (அணு ஆயுதம் உட்பட) சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும் இதுவொரு இரட்டை திரவ உந்துவிசை என்ஜீன்களால் தூண்டப்படுகிறது.

அட்வான்ஸ்டு இணர்ஷியல் கைடன்ஸ் சிஸ்டம்
மேலும் இந்த ஏவுகணையானது அதன் இலக்கை அடைவதையும், சூழ்ச்சித்திறன் கொண்ட வழிகாட்டுதலை பெறுவதையும் ஏவுகணைக்குள் உள்கட்டமைகப்பட்டுள்ள அட்வான்ஸ்டு இணர்ஷியல் கைடன்ஸ் சிஸ்டம் (Advanced inertial guidance system) உறுதி செய்கிறது.

எலெக்ட்ரோ -ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்ஸ்
ஒடிசா கடற்கரையோரத்தி,லிருந்து டி.ஆர்.டி.ஓ மூலம் ராடார், எலெக்ட்ரோ -ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம்ஸ் மற்றும் டெலிமெட்ரி நிலையங்கள் மூலமாக ஏவப்பட்ட ஏவுகணையின் பாதை கண்காணிக்கப்பட்டது. பின்னர் அது வங்காள விரிகுடாவில் நியமிக்கப்பட்ட தாக்க புள்ளியை சென்றடைந்து வெற்றியும் கண்டது.

இறுதியாக..
இதேபோன்றதொரு சோதனையானது கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 அன்று தொடர்ச்சியாக இரண்டு ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட்டு சோதிக்கப்பட்டன. இறுதியாக கடந்த ஜூலை 2, 2017 அன்று நிகழ்த்தப்பட்ட சோதனையும் வெற்றி பெற்றதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications