இஸ்ரோ இஸ் ரெடி; வழக்கம்போல வாய்ப்பிளக்க உலக நாடுகள் ரெடியா.?

இதில் மிகவும் புத்திசாலித்தனமான காரியம் என்னவென்றால் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, ரோவர் விண்வெளி ஆய்விற்கான ஒரு பகுதியாக நிலைத்து செயல்படும் என்பது தான்.

|

2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் இரண்டு "புதிய கண்கள்" சந்திர கிரகத்தை கண்காணிக்க உள்ளது. ஆம், உங்கள் கணிப்பு சரிதான்.

இஸ்ரோ இஸ் ரெடி; வழக்கம்போல வாய்ப்பிளக்க உலக நாடுகள் ரெடியா.?

2008-ஆம் ஆண்டில் துவங்கி சந்திரனை ஆராயும் சந்திரயான் -1 விண்கலத்தை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் சந்திராயன்-2 மட்டுமின்றி டீம் இன்டஸ் (விண்வெளி ஆர்வலர்கள் குழு) ஆனது கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள கூகுள் லூனார் போட்டியில் தனது பங்களிப்பையும் இந்தியா நிகழ்த்தவுள்ளது.

நிலைத்து செயல்படும்

நிலைத்து செயல்படும்

இதில் மிகவும் புத்திசாலித்தனமான காரியம் என்னவென்றால் டீம் இன்டஸ் செலுத்தும் விண்கலமானது, கூகுள் நடத்தும் லூனார் எக்ஸ்ப்ரைஸ் (Lunar XPRIZE) விண்வெளி போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும் கூட, போட்டிக்காக செலுத்தப்பட்ட ரோவர் விண்வெளி ஆய்விற்கான ஒரு பகுதியாக நிலைத்து செயல்படும் என்பது தான்.

மையத்திலிருந்து புறப்படும்

மையத்திலிருந்து புறப்படும்

இந்த இரண்டு சந்திர பயணிகளின் துவக்கமும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுக்க முழுக்க இந்தியாவில்

முழுக்க முழுக்க இந்தியாவில்

இஸ்ரோவின் சந்திரயான் -2 ஆனது ஆழமான சந்திர மேற்பரப்பு ஆய்வு மற்றும் சந்திர மேற்பரப்பை நன்றாக புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கியது. அவைகள் அனைத்துமே முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.

கூகுள் லூனார் எக்ஸ்ப்ரைஸ்

கூகுள் லூனார் எக்ஸ்ப்ரைஸ்

மறுகையில் கூகுள் அறிவித்துள்ள போட்டியில், டீம் இன்டஸ்-ன் ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் நிலைகொண்டு 500 மீட்டர் மீற்றர் பரப்பளவை உயர் வரையறை படங்களாய் பதிவு செய்து பூமிக்கு அனுப்ப வேண்டும். இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் வெற்றி பெரும் அணிக்கு 30 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கூகுள் லூனார் எக்ஸ்ப்ரைஸ் கிடைக்கும்.

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர்

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர்

இஸ்ரோவின் படி, சந்திரயான் -2 லேண்டர் ஒரு குறிப்பிட்ட தளத்தில் சந்திரனில் மென்மையான நிலப்பகுதியில் ரோவரை களமிறக்கும். ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவைகள் சந்திர மேற்பரப்பின் கனிம மற்றும் அடிப்படை ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீள்வட்ட பூமி சுற்றுப்பாதையில்

நீள்வட்ட பூமி சுற்றுப்பாதையில்

டீம் இன்டஸ்-ன் கருத்துப்படி, பிஎஸ்எல்வி ஏவப்பட்ட 12 நிமிடங்கள் கழித்து, 880 கிமீ x 70,000 கிமீ என்ற பூமியின் சுற்றுப்பாதையில் விண்வெளிக்கலம் வெளியேற்றப்படும். பின்னர் அது பூமியிலிருந்து ஒரு நீள்வட்ட பூமி சுற்றுப்பாதையில் (ஒரு சுற்று 10,000 கி.மீ ஆகும்) பூமியை இரண்டரை முறை சுற்றும்.

ஏழரை நாட்கள் கழித்து

ஏழரை நாட்கள் கழித்து

விண்வெளியில் செலுத்தப்பட்டு ஏழரை நாட்கள் கழித்து சந்திரனில் இருந்து 100 கிமீ தூரத்தை அடையும் அந்த விண்கலமானது நொடிக்கு 10.3 கி.மீ என்ற அதன் உச்ச வேகத்தை எட்டும். இந்த இரண்டு சந்திர பயணங்களும் 2018-ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே தொடங்கும்.

Best Mobiles in India

English summary
India set to launch two moon missions in early 2018 Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X