டியர் தமிழ்நாடு.! ஒன்னு நீயா பண்ணு, இல்லனா கேரளாவை பார்த்து கத்துக்கோ.!

|

நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய ஆலை கட்டுமான பணிகள் வயனாட்டில் உள்ள பனசுரா சாகர் நீர்த்தேக்கத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

டியர் தமிழ்நாடு.! ஒன்னு நீயா பண்ணு, இல்லனா கேரளாவை பார்த்து கத்துக்கோ!

கேரள மாநில மின்சார வாரியத்தின் இந்த 500 கிலோவாட் பீக் (kilowatt peak) சூசோலார் பிளான்ட் ஆனது நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பில் சுமார் 6,000 சதுர மீட்டர் பரப்பளவில் மிதக்கும் வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.9.25 கோடி ஆகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் விளையும் நன்மைகளை பற்றி அறியும் போது நம்ம தமிழ் நாடும் தான் இருக்கே என்ற சலிப்பு உள்ளூர ஏற்படத்தான் செய்கிறது.

18 பிளாட்பார்ம்

18 பிளாட்பார்ம்

இந்த மிதக்கும் சூரிய பண்ணையின் சூரிய வால்ட்டிக் பேனல்கள் ஆனது, காலியான உட்பக்கங்கள் கொண்ட பெர்ரோ-சிமெண்ட் மிதவைகள் கொண்டு கட்டமைக்கப்பட்ட 18 பிளாட்பார்ம்களாக உருவாக்கியுள்ளது.

கேரள முதல்வர் அறிவிப்பு

கேரள முதல்வர் அறிவிப்பு

இந்த 500 கிலோவாட்பீக் திட்டம் தான், நாட்டின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் பிளான்ட் திட்டமாகும், இந்த திட்டத்தின் வேலை மார்ச் 2016 இல் தொடங்கியது. அடுத்த மாதத்தில் ஆலை திறக்கப்படும் என்றும், கேரள முதல்வர் அறிவிப்புக்கு காத்திருப்பதாகவும் கேரள மாநில மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிகின்றன.

செயல்திறன் மிக்க சூரிய பேனல்கள்

செயல்திறன் மிக்க சூரிய பேனல்கள்

இந்த ஆலை மூலம் ஆண்டுதோறும் 7.5 லட்சம் யூனிட் பவர் கிடைக்கும். அந்த மின்சக்தி நீருக்கடியிலான கேபிள்களைப் பயன்படுத்தி அருகாமையில் இடங்களுக்கு வழங்கப்படும். கேரள மாநில மின்சார வாரியத்தின் (KSEB) விதிமுறைகளின் படி, இந்த திட்டத்திற்காக அதிக செயல்திறன் மிக்க சூரிய பேனல்கள் பயன்படுத்தபட்டுள்ளது.

நீராவிக் கட்டுப்பாட்டு மையம்

நீராவிக் கட்டுப்பாட்டு மையம்

மேலும், 11கிலோவாட் என்ற வெளிக்கொணர்வை பெறும் வண்ணம் உற்பத்தி மற்றும் பொருளாதார-பாதுகாப்பு அம்சங்களை கருத்திற் கொண்டு ஒரு நீராவிக் கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பிடும்போது அதிக திறன்

ஒப்பிடும்போது அதிக திறன்

குழு வெப்பநிலையில் நீரின் உட்புறங்களின் ஏற்படும் மிதமான விளைவு காரணமாக, இந்த மிதக்கும் சூரிய மின்கலங்களானது, நிலப்பகுதிகளில் ஏற்றப்பட்ட நிறுவல்களுடன் ஒப்பிடும்போது அதிக திறன் கொண்டது.

குறைந்த அளவிலேயே தூசி சேகரிப்பு

குறைந்த அளவிலேயே தூசி சேகரிப்பு

மேலும், தரையில் கட்டமைக்கப்பட்ட அடிப்படையிலான அலகுகளுடன் ஒப்பிடும் போது, ​​மிதக்கும் பேனல்கள் குறைந்த அளவிலேயே தூசி சேகரிப்புகளை நிகழ்த்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிளை அலற வைத்த ஜோசப்..! யார் இவர்..? என்ன செய்தார்.?

ஆப்பிளை அலற வைத்த ஜோசப்..! யார் இவர்..? என்ன செய்தார்.?

ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகள் (ஐபோன், ஐபாட், ஐபாட் டச், அல்லது ஆப்பிள் வாட்ச்) ஆனது உரிமையாளரிடம் இருந்து திருடப்பட்டுவிட்டது அல்லது தொலைந்து விட்டது என்றால் மற்றவர்கள் அக்கருவிகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் அனுமதிக்கும் ஆப்பிள் மிகவும் பாதுகாப்பான லாக் செயல்படுத்தும் முறையானத்தில் ஒரு பெரிய ஓட்டையை போட்டுவிட்டார் கேராளவை சேர்ந்த பொறியாளர் மாணவரான ஹேமந்த் ஜோசப்.

"பைண்ட் ஐபோன் ஆப் மூலம் ஒரு உரிமையாளர் லாக் செய்த கருவியை திறக்க நான் ஒரு வழி கண்டறிந்து விட்டேன்" என்று கூறுகிறார் ஹேமந்த் ஜோசப், பொறியியல் இறுதியாண்டு மாணவர், அமல் ஜோதி பொறியியல் கல்லூரி, கஞ்சிரப்பள்ளி.

செக்யூரிட்டி லேப்ஸ்

செக்யூரிட்டி லேப்ஸ்

இதை நிகழ்த்த ஜோசப் கையாண்டது செக்யூரிட்டி லேப்ஸ்களை தான். நேம், யூசர் நேம், பாஸ்வேர்ட் ஆகிய இன்புட் பீல்ட்டுகளில் செக்யூரிட்டி லேப்ஸ் பயன்படுத்தியுள்ளார். "இம்மாதிரியான இன்புட் பீல்ட்டுகளில் எந்தவிதமான கேரக்டர் லிமிட்க்ளும் கிடையாது.

வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார்

வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார்

ஆக யாரும் 10,000 லெட்டர்களில் பெயர் அல்லது 10,000 லெட்டர்களில் ஒரு கடவுச்சொல்லை அமைக்கப் போவதில்லை எனவே கேரக்டர் லிமிட் இதுபோன்ற பக்ஸ்'களை சீர் செய்ய தேவை" என்று ஜோசப் அவரின் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார், பின்னர் அவரின் நண்பர்கள் அவர் இதை எப்படி நிகழ்த்தினார் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

கேரக்டர் லிமிட்களும் இல்லை

கேரக்டர் லிமிட்களும் இல்லை

இது அனைத்திற்கும் காரணம் ஜோசப்பின் நண்பர் ஒருவர் இபேவில் ஐபாட் ஒன்று வாங்கியுள்ளார், அக்கருவி முந்தைய உரிமையாளரால் பூட்டப்பட்டது என்று பின்னர் கண்டறியப்பட்டது. அதை சோதிக்கும் போது அதில் எந்தவிதமான கேரக்டர் லிமிட்களும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளார் அதாவது 'மற்றொரு வைஃபை நெட்வொர்க்கை' விருப்பத்தை இணைக்கும் முன் அதை சரிபார்ப்பதற்கான இன்புட் பீல்டகளில் கேரக்டர்ல் லிமிட்கள் இல்லை என்று தெரிந்தவுடன் "ஆக "நாம் பல எழுத்துக்களை பீல்ட்டில் நுழைத்து ஒரு ஓவர் ப்ளோவை உருவாக்க முடியும்" என்று வலைதளத்தில் எழுதியுள்ளார் ஜோசப்.

ஒரு 'பாதுகாப்பு ஆய்வாளர்'

ஒரு 'பாதுகாப்பு ஆய்வாளர்'

பனிரெண்டாம் வகுப்பில் இருந்தே ஜோசப், தான் எழுதி வரும் 'பக் ஹன்டிங்' என்ற வலைத்தளத்தில் தன்னை ஒரு 'பாதுகாப்பு ஆய்வாளர்' என்று குறிப்பிடுகிறார். சில மாதங்களுக்கு முன்பு, கிளவுட் பிளாட் பார்மில் இருந்த 'பக்' ஒன்றை சுட்டிக்காட்டி ரூ .5 லட்சம் ருபாய் பரிசை கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விசாரணை

விசாரணை

இதே போன்ற ஏடி & டி, பீபல், ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இவர் பரிசு பெற்றுள்ளார். தற்போது ஆப்பிள் நிறுவனம் ஜோசப் சுட்டிக்காட்டியுள்ள பிரச்சினையை விசாரணை செய்வதாக அவருக்கு பதில் அளித்துள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Kerala Gets India's Largest Floating Solar Plant, It Will Produce A Whopping 7.5 Lakh Units Of Power Annually. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X