இவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்.? கெத்து காட்டும் கே.சிவன்.!

|

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அதன் மங்கள்யான் விண்கலத்தின் வெற்றி மூலம் விண்வெளி தொழில்நுட்பங்களை கட்டமைப்பதில் மிகவும் திறன்மிக்க மற்றும் புகழ்பெற்ற வழிமுறைகளை உருவாக்கியதையும், இன்னும் எளிமையாக கூறினால், இந்தியாவின் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (MoM) ஆனது ஹாலிவுட் திரைப்படமான 'க்ராவிட்டி'யின் தயாரிப்பை விட மிக குறைவான செலவையே சந்தித்ததையும் நாம் அறிவோம்.

இவ்ளோ கம்மியான பட்ஜெட்டில் எப்படி இதெல்லாம் சாத்தியம்? அசத்தும் இஸ்ரோ!

இப்படியாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் பொறாமையை சம்பாதித்த இஸ்ரோ, தற்போது, தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ்எக்ஸ் உடனான அடுத்தகட்ட போட்டிகளுக்காக தயாராகி வருகிறது. அதென்ன போட்டி.? எலான் மஸ்க்கின் அதிபுத்திசாலித்தனத்தை இஸ்ரோ வீழித்துமா.? முன்னேறுமா.?

சரி.. இஸ்ரோவின் பிளான் என்ன.?

சரி.. இஸ்ரோவின் பிளான் என்ன.?

இஸ்ரோவின் மற்றொரு புதிய கண்டுபிடிப்பின் மூலம், உலக தரத்திலான உந்துசக்தி தொழில்நுட்பத்தை (World class propulsion technology) அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவிதுள்ளார். இந்த வளர்ச்சியானது, ரீ-யூசபிள், ரிக்கவரபில் மற்றும் ரீ-ஸ்டார்ட்டபிள் (re-usable, recoverable, re-startable) விண்வெளி ஏவல்களின் செலவினத்தை இன்னும் குறைக்கும் என்பது வெளிப்படை.

இதனால் ஸ்பேஸ்எக்ஸ்-க்கு என்ன பாதிப்பு.?

இதனால் ஸ்பேஸ்எக்ஸ்-க்கு என்ன பாதிப்பு.?

கடந்த பிப்ரவரி மாதத்திலேயே, செலவுகளை குறைக்கும் நோக்கத்தின் கீழ், ஸ்பேஸ்எக்ஸ் போன்றே ரீ-யூசபிள் (மறுமுறை பயன்படுத்தப்படக்கூடிய) ராக்கெட்களை, இஸ்ரோவும் பயன்படுத்தும் என்கிற துணுக்கை, கே.சிவன் குறிப்பிட்டு இருந்தார். இஸ்ரோவின் இந்த புதிய முயற்சியானது, சாத்தியமாகும் பட்சத்தில், இஸ்ரோவின் மறுபயன்பாட்டு உந்து தொழில்நுட்பம் (reusable propulsion technology) ஆனது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரீ-யூசபிள் ராக்கெட் ஆனஃ, பால்கோன் 9-க்கு மாபெரும் சவாலாக திகழும்.

இஸ்ரோ vs ஸ்பேஸ்எக்ஸ் - எது பலமானது.?

இஸ்ரோ vs ஸ்பேஸ்எக்ஸ் - எது பலமானது.?

இஸ்ரோவா.? ஸ்பேஸ்எக்ஸ்-ஆ.? என்கிற நேருக்கு நேர் ஒப்பீட்டை நிகழ்த்தினால், சந்தேகத்திற்கு இடமின்றி, ஸ்பேஸ்எக்ஸ் தான் வலிமையானதாக திகழ்கிறது. குறிப்பாக அதன் Falcon 9 மற்றும் Falcon Heavy ஆகியவற்றின் பேலோடு அளவுகள் இஸ்ரோவின் தற்போதைய திறன்களை விட அதிகம் என்பதை மறுக்கவே முடியாது. இஸ்ரோவின் GSLV Mk III (Fat Boy) ராக்கெட்டின் பேலோடு ஆனது தற்போது தான் 4 டன்களில் இருந்து 6.5 டன்களாக அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

ஸ்பேஸ்எக்ஸ் முன்னிலை வகிக்க காரணம் என்ன.?

ஸ்பேஸ்எக்ஸ் முன்னிலை வகிக்க காரணம் என்ன.?

முதலில் இஸ்ரோவையும், ஸ்பேஸ்எக்ஸ்-ஐயும் ஓப்பிடுவதே தவறாகும். வேட்டைக்கு சிங்கம், வேகத்திற்கு சிறுத்தை என்பது போல, இஸ்ரோவும் சரி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் சரி, அவைகளுக்கே உரிய திறன்களில் முதன்மை வகிக்கின்றன. ஸ்பேஸ்எக்ஸ்-ன் வேலைக்கும், விண்வெளி ஆராய்ச்சிக்கும், விண்கலம் மற்றும் செயற்கைகோளுக்கும் சம்பந்தமே இல்லை. அதன் வேலை- விண்வெளி ஏவல்களில் இருந்து பணம் சம்பாதிப்பது மட்டும் தான். ஆனால் இஸ்ரோ அப்படி இல்லை, ராக்கெட் தயாரிப்பு முதல் விண்வெளி ஆராய்ச்சி வரை எல்லாவற்றையுமே நிகழ்த்த வேண்டும்.

பட்ஜெட்டிலும் சிக்கல் இருக்கிறது.!

பட்ஜெட்டிலும் சிக்கல் இருக்கிறது.!

ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஆண்டு பட்ஜெட் உடன் ஒப்பிடும் இஸ்ரோவின் பட்ஜெட் எல்லாம் ஒன்றுமே கிடையாது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது ஆண்டுக்கு 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிற மூலதனத்தினை கொண்டிருக்க, மறுகையில் உள்ள இஸ்ரோவானது, வணிக ரீதியாக நடவடிக்கை, ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானம் என அனைத்திற்குமே சேர்த்து ஆண்டுதோறும் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவினத்தை மட்டுமே கொண்டுள்ளது.

என்னதான் பட்ஜெட் இடிச்சாலும், இஸ்ரோ தான் டாப்பு, எப்படி.?

என்னதான் பட்ஜெட் இடிச்சாலும், இஸ்ரோ தான் டாப்பு, எப்படி.?

இஸ்ரோவின் செயற்கைகோள்களை பற்றி பேச ஆரம்பித்தால், உலகமே வியப்பில் மூழ்கும். மறுகையில் ஸ்பேஸ்எக்ஸ் வெளியிட்டுள்ள்ள செயற்கைகோள்களை பற்றி பேசவே முடியாது. ஏனெனில் ஸ்பேஸ்எக்ஸ், ஒரு செயற்கைக்கோளை கூட விண்ணில் செலுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் சாட்டிலைட்களை செலுத்துவது அவர்களின் நோக்கமே இல்லை. ஆகமொத்தம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினால் இஸ்ரோவை போல் செயற்கைகோள்களை ஏவ முடியாது. ஆனால், இஸ்ரோவோ, ஸ்பேஸ்எக்ஸ்-ன் ரீ-யூசபிள் ராக்கெட்டை உருவாக்க முடியும். அதுவும் மிகவும் குறைவான செலவில் மற்றும் பட்ஜெட்டில், அது தான் இஸ்ரோவின் வெற்றி.!

ரீயூசபிள் லான்ச் சிஸ்டம் என்றால் என்ன.?

ரீயூசபிள் லான்ச் சிஸ்டம் என்றால் என்ன.?

ரீயூசபிள் லான்ச் சிஸ்டம் (ஆர்எல்எஸ்) என்பது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் அல்ல, ஒரு மறுபயன்பாட்டு வெளியீட்டு முறை ஆகும். எளிமையாக கூறவேண்டும் எனில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடிய ராக்கெட் ஆகும். ஒரு முறை குடிச்ச டீ கிளாஸையே உடைக்கிற துபாய்காரங்க உலவும் உலகத்துல, ஒரு முறை யூஸ் பண்ண ராக்கெட்டை மீண்டும் யூஸ் பண்ணுறதா.? இது ரிஸ்க் இல்லையா.? என்ற கேள்வி எழுகிறது அல்லவா.?

ரிஸ்க் இல்லையென்றால்.. வளர்ச்சி இல்லை.!

ரிஸ்க் இல்லையென்றால்.. வளர்ச்சி இல்லை.!

ரீயூசபிள் ராக்கெட் என்பது ரிஸ்க் மட்டும் அல்ல. வட கொரியா நடத்தும் அணு ஆயுத சோதனை போன்றெதொரு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் அண்டை நாடுகளை அச்சமூட்டும் ஒரு "பப்ளிக் ஸ்டண்ட்டும்" அல்ல. இதுவொரு அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியாகும். கற்பனைக்கு எட்டாத அளவில், செலவுகள் மிச்சமாகும். அதனை கொண்டு இன்னொரு செயற்கைகோளே உருவாக்கலாம் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஸ்பேஸ்எக்ஸ்-க்கு 14 ஆண்டுகள்; இஸ்ரோவிற்கு.?

ஸ்பேஸ்எக்ஸ்-க்கு 14 ஆண்டுகள்; இஸ்ரோவிற்கு.?

அதுமட்டுமின்றி இந்த ரீயூசபிள் லான்ச் சிஸ்டத்தில், விண்வெளி மாசு குறைப்பு உட்பட பல வகையான நன்மைகள் உண்டு. இவ்வாறான நன்மைகளை வழங்கும் ஒரு ரீயூசபிள் ராக்கெட்டை உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையமான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அதன் முதல் ரீயூசபிள் ராக்கெட்டை உருவாக்க 14 ஆண்டுகள் எடுத்து கொண்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆனால், இஸ்ரோ நிச்சயமாக அவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளாது.

சத்தம் போடாமல் வேலை பார்க்கும் இஸ்ரோ.!

சத்தம் போடாமல் வேலை பார்க்கும் இஸ்ரோ.!

சந்திரயான் -2 என்கிற மிக முக்கியமான விண்வெளி திட்டத்தை, வருகிற அக்டோபரில் முடித்த கையோடு, அடுத்த மாபெரும் திட்டமாக ரீயூசபிள் லான்ச் வெயிக்கல் டெக்னாலஜி டெமான்ஸ்டேட்டர் (re-usable launch vehicle technology demonstrator - RLV-TD) சோதனையை நிகழ்த்த, இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில், ரீயூசபிள் ராக்கெட் சார்ந்த சில வேலைகளை, இஸ்ரோ சத்தமில்லாமல் ஏற்கனவே முடித்து விட்டதாம். அதாவது லேண்டிங் கியர் மற்றும் லோ சப்சோனிக் உடனான விண்ட் டெனல் (Wind tunnel) ஆனது ஐஐடி கான்பூரில் சோதனை செய்யப்பட்டு விட்டது. அடுத்த கட்ட சோதனையில், வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுமந்து செல்லும் செயற்கைகோளை சுற்றுப்பாதைக்குள் விடுவித்துவிட்டு மீண்டு வரும் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட உள்ளது.

எப்போது சாத்தியமாகும்.?

எப்போது சாத்தியமாகும்.?

"நேவிகேஷனல் சாதனங்களின் உதவியுடன் ஆட்டோனமஸ் லேண்டிங்கை நிகழ்த்தப்போகும் இந்த ரீயூசபிள் பரிசோதனைக்கான லேண்டிங் ரன்வே தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நேவிகேஷனல் சாதனங்கள் மற்றும் அது தொடர்புடைய அமைப்புகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று இந்த ரீயூசபிள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் விஞ்ஞானிகள் கருத்து கூறியுள்ளனர். இதை இஸ்ரோவின் தலைவர் ஆன கே.சிவனும் உறுதிப்படுத்தி உள்ளார். கூறப்படும் "ரீயூசபிள் ராக்கெட் பரிசோதனைகள் ஆனது பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆண்டு, இஸ்ரோவின் முழு கவனமும் பல்வேறு வகையான விண்வெளி திட்டங்களில் மட்டுமே இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
India’s ISRO To Take On SpaceX With Its Own Smart and Reusable Rockets. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X