Home
Scitech

இந்தியாவின் முதல் முதுகெலும்பு அறுவைசிகிச்சை ரோபோ! சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு...

அறுவை சிகிச்சைகள் எப்போதும் வலிநிறைந்தவை மற்றும் அதிலிருந்து மீள அதிக நேரம் எடுப்பது மட்டுமே நிலைமையை மேலும் மோசமாக்கும்.

இந்தியாவின் முதல் முதுகெலும்பு அறுவைசிகிச்சை ரோபோ! சென்னை ஐஐடி .!

அதுமட்டுமின்றி இதயம், மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற உடல்பாகங்களில் அறுவைசிகிச்சை செய்வதற்கு அதிக கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் சிறுதவறுகளும் பேரழிவுக்கு வழிவகுத்துவிடும்.

ஐஐடி சென்னை

ஐஐடி சென்னை

இருப்பினும் ஐஐடி சென்னையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளுக்கு குறைந்த வலிதரும் மற்றும் மலிவான வகையில் கிடைக்கும் முதுகெலும்பு அறுவைசிகிச்சையை செய்யும் இந்தியாவின் முதல் ரோபோட்-ஐ உருவாக்கியுள்ளனர்.

முதுகெலும்பு அறுவைசிகிச்சை ரோபோட்

முதுகெலும்பு அறுவைசிகிச்சை ரோபோட்

இந்த 'முதுகெலும்பு அறுவைசிகிச்சை ரோபோட்' தனது செயல்பாடுகளுக்காக வழக்கமான புகைப்பட வழிகாட்டும் இயந்திர அமைப்பை (Conventional image guided robotic system) பயன்படுத்துகிறது. குறைந்த அளவே ஆக்கிரமிக்கும் அறுவைசிகிச்சையான இதற்கு, ஓபன் சர்ஜரி போல மிகப்பெரிய வெட்டுகள் தேவைப்படாது. இதுகுறித்து இந்த திட்ட பொறுப்பாளர் பேராசிரியர் மோகனசங்கர் சிவபிரகாசம் கூறுகையில், "திறந்த நிலை முதுகெலும்பு அறுவைசிகிச்சைகளை (நிபுணத்துவம் தேவை) காட்டிலும், குறைந்த ஆக்கிரமிப்பு முதுகெலும்பு அறுவைசிகிச்சைகள் வேகமான மீள்நேரம், குறைந்த நோய்த்தொற்று மற்றும் சிறப்பான முடிவுகள் என அதிகபட்ச பலன்களை வழங்குகின்றன" என்கிறார்.

டெக்எக்ஸ்(TechEX)

டெக்எக்ஸ்(TechEX)

மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தால் நிதியுதவி வழங்கப்பட்ட இந்த திட்டமானது, உத்சாதர் அவிஷ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பமானது டெல்லி ஐஐடியில் நடைபெற்ற டெக்எக்ஸ்(TechEX) நிகழ்வில் உலகின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

பேராசிரியர்  மோகனசுந்திரம்

பேராசிரியர் மோகனசுந்திரம்

பேராசிரியர் மோகனசுந்திரம் இதுகுறித்து கூறுகையில், " எங்களது தொழில்நுட்பம் நோயாளிகளுக்கான செயல்முறையில் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், அறுவைசிகிச்சை நிபுணரின் கதிரியக்க பாதிப்புகளையும் குறைக்கிறது. இடையில் வழிகாட்டுதலை வழங்குவதற்காக, தேவைக்கு ஏற்ப கருவி இருக்கும் இடம் மற்றும் ரோபோட்டின் நிலை ஆகியவற்றை சுதந்திரமாக கண்காணிக்க வெளி நிலை கண்காணிப்பும்(External position tracker) வழங்கப்படும்" என்கிறார்.

 முப்பரிமாண மாடல்

முப்பரிமாண மாடல்

மேலும் அவர் கூறுகையில், " முப்பரிமாண மாடல் மற்றும் ரோபோட்டின் நிலையை பூமியின் நிலையுடன் வெளி கண்காணிப்பானை ஒத்துபோகச்செய்ய அளவுதிருத்தம் செய்யப்படும். அதன்பிறகு கண்காணிப்பானின் எந்தவொரு செயல்பாடும் முப்பரிமாண மாடல் மற்றும் அறுவைசிகிச்சை திட்டத்தில் சேரக்கப்படும்.அறுவைசிகிச்சை செய்வதற்கு தேவையான கருவிகள் மற்றும் சாதனங்களை கையாள மற்றும் நிலைநிறுத்த தேவையான அனைத்தும் இந்த அமைப்பில் இருக்கும்" என்கிறார்.


அறுவைசிகிச்சை செய்வதற்கு ரோபோட்களை பயன்படுத்துவது இது முதல்முறை இல்லை என்றாலும், இந்தியாவில் இருந்து முதுகெலும்பு அறுவைசிகிச்சை செய்யும் ரோபோட் உருவாகியிருப்பது இதுவே முதல்முறை.

Best Mobiles in India

English summary
India's first spinal surgery robot IIT Madras Innovation: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X