ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆன குஜராத்; இதற்கு காரணம் மோடி அல்ல, ஒரு புதைப்படிமம்.!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட "இது" உலகத்தின் வரலாற்றையே மாற்றப்போகிறது.! ஏன்.? எப்படி.? என்னது இது.?

|

நீங்கள் இதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்: மீன் வடிவத்திலான பல்லி, கடல் இராட்ச மிருகம் அல்லது இத்தியஸர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் புத்தியுண்டு போன இந்த உயிரினம், சுமார் 1,500 மணிநேர தோண்டலுக்கு பின்னர் இந்திய தொல்லுயிரியலாளர்களால் வெளிப்பட்டுள்ளது.

ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆன குஜராத்; இதற்கு காரணம் மோடி அல்ல.!

கண்டறியப்பட்டுள்ள இந்த படிவம், ஒரு ஐந்து மீட்டர் நீளமுள்ள ஒரு கடல் ஊர்வன வகையை சேர்ந்தது. நவீன கால டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களைப் போன்று காட்சியளிக்கும் இந்த தோற்றம் தான் உலகத்தின் வரலாற்றையே மாற்றப்போகிறது.!

குஜராத்தின் கட்ச் மாவட்ட பகுதியில்..

குஜராத்தின் கட்ச் மாவட்ட பகுதியில்..

டெல்லி பல்கலைகழகத்தின் புவியியல் துறையை சேர்ந்த குன்டபுளி பிரசாத்தின் தலைமையிலான ஆய்வாளர்கள் குஜராத்தின் கட்ச் மாவட்ட பகுதியில் நிகழ்த்திய ஆய்வில் வெளிப்பட்டுள்ள இந்த படிமம் ஓப்தால்மோசுரைடே (Ophthalmosauridae) குடும்பத்தின் (அதாவது பெரிய கண்கள், இதைவிடவும் பெரிய அளவிலான முதுகெலும்பு காரணமான பெயரிடப்பட்ட இனம்) ஒரு பகுதியாக இருக்கலாமென நம்பப்படுகிறது.

சுமார் 165 முதல் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்..

சுமார் 165 முதல் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்..

இது அநேகமாக சுமார் 165 முதல் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், குறிப்பிடப்படமுடியாத ஏதோவொரு இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த, அதாவது ஜுராஸிக் காலத்தில் வாழ்ந்த மெசோஸோயிக் சகாப்தத்தில் (அதாவது ஊர்வன வயது காலம்) வாழ்ந்த ஒரு உயிரினமாக இருக்கலாம்.

காவேரி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில்..

காவேரி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில்..

தொழில்நுட்ப ரீதியாக, இத்தியஸரின் எஞ்சிய பாகங்கள் அதாவது பற்கள் மற்றும் எலும்புகள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் குறிப்பாக காவேரி ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதைபடிவமானது கிட்டத்தட்ட அதன் முழுமையான உடலையும் தக்கவைத்துள்ளதால் எளிமையாக இதன் இனங்களை அடையாளம் காண முடியும்.

ஏன் இதுவொரு அரிதான கண்டுபிடிப்பானது.?

ஏன் இதுவொரு அரிதான கண்டுபிடிப்பானது.?

அதுமட்டுமின்றி இம்மாதிரியான உயிரினங்கள் பண்டைய சமுத்திரங்களின் வழியாக எப்படி பரவியது என்ற புரிதலையும் நாம் பெறலாம். இதுதான் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, முதல் ஜுராஸிக் காலத்தில் வாழ்ந்த உயிரினத்தின் புதைப்படிமம் என்பதில் இருந்தே இதுவொரு அரிதான கண்டுபிடிப்பு என்பதை மறுபரிசீலனை செய்யாமல் ஏற்றுக்கொள்ளலாம்.

ஒரு விஞ்ஞான அற்புதமாகவும் காணப்படுகிறது.!

ஒரு விஞ்ஞான அற்புதமாகவும் காணப்படுகிறது.!

வடக்கு நாடுகளில் (வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, மற்றும் சில தென் அமெரிக்க பிரதேசங்களில் ) மிகவும் பிரபலமாக காணப்படும் இத்தகைய புதைபடிவங்கள், முதல்முறை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இதுவொரு ஆச்சரியமான "இறுதி ஓய்வு" இடமாகவும், ஒரு விஞ்ஞான அற்புதமாகவும் காணப்படுகிறது.

இந்தியா - கோண்ட்வானா மகா கண்டத்தின் பகுதி.!

இந்தியா - கோண்ட்வானா மகா கண்டத்தின் பகுதி.!

இந்த கண்டுபிடிபின் மூலம் இந்தியா மற்றும் தென் அமெரிக்காவிற்கும் இடையேயான தொடர்பை சுட்டிக்காட்ட முடிகிறது. அதாவது இவை இரண்டும் கோண்ட்வானா மகா கண்டத்தின் பகுதியாக இருந்தன. பின்னர் இந்திய துணைக் கண்டம் பிரிந்து தற்போது காணப்படும் வடக்கு அரைக்கோளத்திற்குள் சென்றது.

கடல் ஊர்வன பரிணாமத்தின் மீது வெளிச்சம்.!

கடல் ஊர்வன பரிணாமத்தின் மீது வெளிச்சம்.!

இதுவொரு ஆரம்பம் தான். இப்பகுதியில் இன்னும் பல புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்படலாமென ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும் இது இந்தோ-மடகாஸ்கன் பகுதியில் ஏற்பட்ட கடல் ஊர்வன பரிணாமத்தின் மீது வெளிச்சம் போட்டு காட்டும்.

உலகத்தின் வரலாறே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

உலகத்தின் வரலாறே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

மறுகையில், தற்போது ஐரோப்பாவில் உள்ள எந்தெந்த பகுதிகள் ஒருகாலத்தில் கோண்ட்வானா மகா கண்டத்தின் பகுதியாக இருந்தனஎன்ற வரலாற்று ரீதியான இணைப்புகளையும் வெளிப்படுத்தும்; ஒட்டுமொத்த உலகத்தின் வரலாறே மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Best Mobiles in India

English summary
India’s first Jurassic ichthyosaur fossil found in Gujarat. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X