சத்தமில்லாமல் புதிய சாதனையை படைத்தது இந்தியாவின் செயற்கைக்கோள்.! என்ன தெரியுமா?

|

பூமியில் இருந்து சுமார் 9.3பல்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் விண்மீன் மண்டலத்திலிருந்து புற ஊதாக் கதிர்கள் அதிகளவில் உமிழப்படுவதை இந்தியாவின் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான அஸ்ட்ரோசாட் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த அட்டகாசமான செயற்கைக்கோள் எக்ஸ்-ரே அகச்சிவப்பு கிதிர்,புற ஊதாக் கதிர் உள்ளிட்ட பல அலை நிளங்களுடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது.

க அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள்

குறிப்பாக அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்த புனேவிலுள்ள வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழகம் தெரிவித்தது என்னவென்றால், இந்தியாவின் முதல் பல அலைநீள செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட் 9.3பில்லயன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள AUDFs01 என்று அழைக்கப்படும் விண்மீன் மண்டலத்திலிருந்து தீவிர புற ஊதாக் கதிர் உமிழ்வைக் கண்டறிந்துள்ளது.

வாட்ஸ்அப்-ல் Advanced Search Mode அம்சம் பயன்படுத்துவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!வாட்ஸ்அப்-ல் Advanced Search Mode அம்சம் பயன்படுத்துவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

புற ஊதாக் கதிர் உமிழ்வைக்

மேலும் நாசாவின் ஹப்பிள் புறஊதா விண்வெளி தொலைநோக்கி 13.6EV-க்கு அதிகமான புறஊதாக் கதிர் உமிழ்வை விண்மீன் மண்டலத்திலிருந்து இதுவரை கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் புற ஊதாக் கதிர் உமிழ்வைக் கண்டறிந்து தனித்துமான சாதனையை செய்துள்ளது.

க்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன் : அசத்தல் ரிவியூ...க்ளவுட்வாக்கர் 65 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஸ்கிரீன் : அசத்தல் ரிவியூ...

 ஐ.யூ.சி.ஏ.ஏ.இவின் வானியல் இணை பேராசிரியர்

மேலும் ஐ.யூ.சி.ஏ.ஏ.இவின் வானியல் இணை பேராசிரியர் டாக்டர் கனக் சஹா தலைமையிலான சர்வதேச வானியலாளர்கள் குழுவினரின் இந்த புதிய கண்டுபிடிப்பை 'நேச்சர் வானியல்' இதழில் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.யூ.சி.ஏ.ஏ.இ இயக்குனர் சோமக் ராய்சவுத்ரி

மேலும் ஐ.யூ.சி.ஏ.ஏ.இ இயக்குனர் சோமக் ராய்சவுத்ரி தெரிவித்தது என்னவென்றால், இது பிரபஞ்சத்தின் இருண்ட யுகங்கள் எவ்வாறு முடிவடைக்கின்றன மற்றும் பிரபஞ்சத்தில் ஒளி இருந்தது என்பதற்கான மிக முக்கியமான குறிப்பாகும்.

 எப்போது துவங்கியது என்பதை நாம்

குறிப்பாக இது எப்போது துவங்கியது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் ஆரம்பகால ஒளியின் மூலங்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. நமது சகாக்கள் இதுபோன்ற ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை செய்ததில் மிகவும் பெருமையடைகிறேன் என்றார்.

Best Mobiles in India

English summary
India's ASTROSAT Detects UV Light From a Galaxy 9.3 Billion Light Years Away: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X