பாக். ஏன் Silent Mode-ல் இருக்கிறது.? இப்போதான் புரியுது; அந்த பயம் இருக்கட்டும்.!

|

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பான டி.ஆர்.டி.ஓ (DRDO - Defence Research and Development Organization) நிறுவனமானது, இந்திய - சீன எல்லைப்பகுதிகளில் ஒன்றான சிக்கீமில் ஹை-ஆல்டிடூட் ஆயுத சோதனை (high altitude trial) ஒன்றை நிகழ்த்தியதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு அடுத்தபடியாக, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஒடிசா கடற்கரையில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை அசாதாரணமாக எட்டி அழிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத பலமான அக்னி -2 ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

பாகிஸ்தானின் பீதி சற்று அதிகரித்தது.!

பாகிஸ்தானின் பீதி சற்று அதிகரித்தது.!

இந்த சர்பேஸ் டூ சர்பேஸ் ஏவுகணை சோதனையின் விளைவாக, இந்தியா மீதான பாகிஸ்தானின் பீதி சற்று அதிகரித்தது என்றே கூறலாம். அந்த பீதியை மென்மேலும் அதிகரிக்கும் வண்ணம், கடந்த ஞாயிறு அன்று, டி.ஆர்.டி.ஓ தலைமையின் கீழ், இன்டகான்டினென்டல் பாலிஸ்டிக் ஏவுகணை (ஐசிபிஎம்) அக்னி - 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்ப்பட்டுள்ளது. அக்னி தொடரின் ஐந்தாவது பதிப்பான இந்த ஏவுகணை சோதனையதும் ஒடிசா கடற்கரையிலேயே தான் நடத்தப்பட்டது.

ஏவுகணையின் செலவினம்.!?

ஏவுகணையின் செலவினம்.!?

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, சரியாக 0945 மணிக்கு நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனையானது, முழுமையான வெற்றியை அடைந்தது மட்டுமின்றி, அதன் நம்பகத்தன்மையும் வெளிப்படுத்தியது. செலுத்தப்பட்ட ஏவுகணையானது, இலக்கை அடையும் வரையிலாக கண்காணிக்கப்பட்டதும், இந்த ஏவுகணையின் செலவினம் ஆனது சுமார் $ 8 மில்லியன் டாலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

5000 கிமீ முதல் 8000 கிமீ வரை.!

5000 கிமீ முதல் 8000 கிமீ வரை.!

சுமார் 5000 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை சுமார் 1.5 டன்கள் வரை எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு சென்று தாக்கும் வல்லமை கொண்ட இந்த அக்னி-5 ஏவுகணையின் 'பேலோட்' (சுமந்து செல்லும் எடை) குறைக்கப்பட்டால், அது 8000 கிமீ தொலைவில் கூட செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் எளிமையான வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால், இனி பாகிஸ்தானும் சீனாவும் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும்.

முன்பை விட அதிகமான துல்லியம்.!

முன்பை விட அதிகமான துல்லியம்.!

அக்னி - 5 ஆனது, புதிய துல்லியமான ரிங் லேசர் கைரோ அடிப்படையிலான இநெர்ஷியல் நேவிகேஷன் சிஸ்டம் (Ring Laser Gyro based Inertial Navigation System - RINS) மற்றும் மைக்ரோ நேவிகேஷன் சிஸ்டம் (Micro Navigation System - MINS) போன்ற புதிய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. இந்த முன்னேற்றங்கள் காரணமாக, இது முன்பை விட அதிகமான துல்லியத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடந்த அணுவாயுத அக்னி-2 சோதனையின் வீச்சு என்ன.?

முன்னதாக நடந்த அணுவாயுத அக்னி-2 சோதனையின் வீச்சு என்ன.?

அக்னி 2 ஆனது அணுவாயுதத்தை சுமந்து செல்லும் திறன்கொண்ட, ஒரு 20 மீட்டர் நீளமுள்ள கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கக்கூடிய (பாலிஸ்டிக்), 17 டன் எடை கொண்ட ஒரு ஏவுகணையாகும். இது சுமார் 1000 கிலோ எடையை சுமந்து கொண்டு 2,000 கிமீ தூரத்திற்கு பாயும் திறன் கொண்டது.

தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு.!

தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு.!

இன்னும் குறிப்பிட்டு கூறவேண்டுமெனில் அக்னி -2 என்பது ஒரு இரண்டு கட்ட பாதை கொண்ட ஏவுகணையாகும். ஒரு மேம்பட்ட மற்றும் உயர் துல்லியமான வழிசெலுத்தல் அமைப்பு (high accuracy navigation system) மற்றும் ஒரு தனித்துவமான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (unique command and control system) கொண்டு இந்த ஏவுகணை வழிநடத்தப்படும்.

துல்லியமான வெற்றி.!

துல்லியமான வெற்றி.!

மார்ச் மாதத்தில் நிகழ்ந்து முடிந்த அக்னி-2 ஏவுகணை சோதனையின் முழு போக்கும் - அதிநவீன ரேடார்கள், டெலிமெட்ரி கண்காணிப்பு நிலையங்கள், எலெக்ட்ரோ-ஆப்டிக் கருவிகள் மற்றும் - வங்க கடலோரப் பகுதியின் வரம்பிற்கு கீழ் அமைந்துள்ள இரண்டு கடற்படை கப்பல்களால் கண்காணிக்கப்பட்டு, துல்லியமான வெற்றியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

(பொதுவான) அக்னி ஏவுகணைகளின் வீச்சு என்ன.?

(பொதுவான) அக்னி ஏவுகணைகளின் வீச்சு என்ன.?

இதர அக்னி ஏவுகணைகளின் வீச்சை பொறுத்தமட்டில் அக்னி 1 ஆனது 700 கிமீ வீச்சும், அக்னி -3 ஆனது 3,000 கிமீ வீச்சும், அக்னி -4 மற்றும் அக்னி-5 ஆகுல ஏவுகணைகள் மிக நீண்ட தூர தாக்குதல் எல்லைகளை கொண்டுள்ளன. அக்னி-2 ஏவுகணையின் முதல் சோதனையானது கடந்த ஏப்ரல் 11, 1999 அன்றும் பின்னர் இறுதியாக மே 4, 2017 அன்றும் நடந்தது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
India just tested a ballistic missile capable of carrying 1.5 tonne nuclear warheads. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more