ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன?

இப்போது செய்யப்படும் ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கி கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம்அளிக்க வேண்டும்.

|

தற்சமயம் ரஷ்யாவிடம் அனு சக்தி கப்பலை அவரச அவசரமாக 10 ஆண்டுகள் குத்தகைக்கு பெற இந்திய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரஷ்யாவிடம் அவரச அவசரமாக அணு சக்தி கப்பலை வாங்கும் இந்தியா: காரணம் என்ன

கடந்த ஆண்ட அக்டோபர் மாதம் எஸ்-400 என்ற ஏவுகணையை ரஷ்யாவிடம் பெற 5.4 பில்லியன் டாலர் தொகையை கொடுத்து இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்சமயம் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய தொகைக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இந்திய பாதுகாப்புத்துறை கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அகுலா வகை

அகுலா வகை

இப்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் பெயர் அகுலா வகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த கப்பலை விலைக்கு வாங்கவில்லை என்றும், குத்தகைக்கு மட்டுமே வாங்க இந்தியா ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 3 பில்லியன் டாலர்

3 பில்லியன் டாலர்

அணுசக்தியில் இயங்கும் கடற்படை நீர்மூழ்கிக் கப்பலை 3 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யாவிடம் பத்தாண்டுகளுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது நம் இந்தியா. பல மாதங்கள் நடைபெற்று வந்த இந்த பேச்சுவார்த்தை தற்போது
முடிவுக்கு வந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

2025-ம் ஆண்டுக்குள்

2025-ம் ஆண்டுக்குள்

இப்போது செய்யப்படும் ஒப்பந்தத்தின்படி அகுலா வகை நீர்மூழ்கி கப்பலை வரும் 2025-ம் ஆண்டுக்குள் ரஷ்யா இந்தியாவிடம் அளிக்க வேண்டும். இந்திய கடற்படையில் இந்த நீர்மூழ்கி கப்பல், சக்ரா மூன்று என அழைக்கப்படுகிறது.

சீனா

சீனா

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா தனது ஆதிகத்தை பெருக்கி வரும் நிலையில் இந்தியா தனது கடற்படை பலத்தை கூட்டி வருகிறது. ஏற்கனவே 1988-ம் ஆண்டில் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மூன்று ஆண்டுகளுக்கும், பின்பு 2012-ம் ஆண்டில் ஒரு ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை 10ஆண்டுகளுக்கும் இந்தியா குத்தகைக்கு எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 உதவியாய் இருக்கும்

உதவியாய் இருக்கும்

குறிப்பாக இந்த கப்பல்கள் மருத்தவமனை வசதி, பேரிடர் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் ஆகியவற்றைக்கு பயன்படுத்த அதிக உதவியாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு
பெறும் 3-வது கப்பல் அகுலா வகை கப்பல் ஆகும்.

Best Mobiles in India

English summary
India, Russia sign USD 3 billion deal for nuclear-powered attack submarine for Indian Navy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X