அடுத்தாண்டு 45 செயற்கைகோளை ஏவும் இஸ்ரோ: சந்திராயன் 2 தள்ளிபோகும் காரணம்?

இஸ்ரோ 55 செயற்கை கோள் திட்டம்:இஸ்ரோ நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 55 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சி சிவன் தெரிவித்துள்ளார்.

|

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தற்போது வேகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இஸ்ரோ நிறுவனம் தற்போது வர்த்தக ரீதியாகவும் வெற்றியை குவித்து வருகிறது.

 அடுத்தாண்டு 45 செயற்கைகோளை ஏவும் இஸ்ரோ:

இஸ்ரோ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைகோள்களையும், தனியார் அமைப்புகளின் செயற்கைகோள்களையும் விண்ணுக்கு செலுத்தி சாதனையும் படைத்து வருகிறது.

இஸ்ரோ நிறுவனத்தி செயல்பாடு:

இஸ்ரோ நிறுவனத்தி செயல்பாடு:

இஸ்ரோ நிறுவனம் சந்திராயன்-1, மங்கள்யான் செயற்கைகோள்களும், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் தொழில் நுட்ப ரீதியாகவும் வெற்றிகரமாக விண்கலன்களையும் செலுத்தி வருகிறது. தளவாட பொருட்களும் தொழில் நுட்பமும் இந்தியாவிலேயே தாயரிக்கப்படுகிறது. இதன் காரணமாக மலிவான சந்தையாக இந்திய கருத்தப்படுகிறது.

பல்வேறு ராக்கெட்களை ஏவும் இஸ்ரோ:

பல்வேறு ராக்கெட்களை ஏவும் இஸ்ரோ:

விண்வெளிக்கு அனுப்படும் செயற்கைகோள்களும், ராக்கெட் உதிரி பாகங்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு இங்கேயே ஏவப்படுகிறது. விலை மலிவான சந்தையாக இந்திய விண்வெளி துறை இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவிற்கு வருகின்றனர். மேலும் வெற்றிகரமாக அவர்களின் விண்கலன்கள் ஏவப்படுகிறது. அனைத்து நாடுகளின் பார்வையும் முற்றிலுமாக இந்தியாவின் மீது திரும்பியுள்ளனர். ஓரே ராக்கெட்டில் பல்வேறு நாட்டு செயற்கை கோள்களை ஏவுவதிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

இஸ்ரோ 55 செயற்கை கோள் திட்டம்:

இஸ்ரோ 55 செயற்கை கோள் திட்டம்:

இஸ்ரோ நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 55 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சி சிவன் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு 44 செயற்கைகோள்:

அடுத்தாண்டு 44 செயற்கைகோள்:

இஸ்ரோ தலைவர் கே.சி. சிவன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: இஸ்ரோ நிறுவனம் அடுத்த ஆண்டு 22 செயற்கைகோள்கைள விண்ணில் ஏவ உள்ளது. 3 ஆண்டுகளில் 44 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

45 செயற்கைகோள்கள்:

45 செயற்கைகோள்கள்:

மேலும் அவர் கூறுகையில்: தற்போது வரை இந்தியாவின் 45 செயற்கைகோள்கள் விண்ணில் வலம் வருகின்றன. மேலும் 45 செயற்கைகோள்களை ஏவ வேண்டிய அவசியம் நாட்டிற்கு உள்ளது என்றார்.

சந்திராயன் 2 தள்ளிப்போகலாம்:

சந்திராயன் 2 தள்ளிப்போகலாம்:

சந்திராயன் 2 செயற்கைக்கோள்கள் ஏவப்படுவதற்கு ஜனவரி 3ம் தேதி குறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மார்ச் மாதம் வரை தள்ளிப்போகலாம். இந்தியாவின் சந்திராயன் 2 திட்டம் அமெரிக்கா மனிதரை விண்ணுக்கு அனுப்பிய அப்பல்லோ திட்டத்திற்கு நிகரானது என்று அவர் பெருமிதம் கூறினார்.

Best Mobiles in India

English summary
India needs 45 more satellites in space ISRO chairman : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X