முதன் முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியா- மோடி பேச்சு.!
சுகன்யான் திட்டம் மூலம் வரும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும். இந்தியா என்னும் யானை உறங்கிய நிலை மாறி இப்போது யானை எழுந்து விட்டது.
டெல்லி: நாடு முழுவதும் 72வது சுதந்திர தின விழா கலைகட்டியது. இதையொட்டி பல்வேறு இடங்களிலும் சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.

முன்னதாக செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும், முப்படைகளின் அணி வகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். இதில், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் பேசினார்.

மோடி பேச்சு:
காந்தி தலைமையில் லட்சக்கணக்கானோர் போரிட்டு சுதந்திரம் பெற்று தந்தனர். இந்தியா சுதந்திரத்திற்கு அரும்பாடு பட்ட தியாகிகளுக்கு வீர வணக்கும் செலுத்துகின்றேன். சாமான்ய மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் இரவு, பகல் பாராமல் கடைமாயாற்றுகின்றனர். காவலர்களின் சேவையை பாராட்டி அவர்களை மோடி வாழ்த்தினார்.

கப்பல்படை அதிகாரிகளால் பெருமை:
கப்பல்படையின் 6 பெண் அதிகாரிகள் உலகை வலம் வந்தது நாட்டிற்கே பெருமை என்று மோடி கூறினார். 125 கோடி இந்தியர்களின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது என்று மோடி தெரிவித்தார்.

ஓய்வூதிய திட்டம்:
ராணுவ வீரர்களின் 40 ஆண்டு கோரிக்கையான ஒரு பதவி ஒரு ஓய்வூதிய திட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் பருவமழை சிறப்பாக பெய்து. வெள்ளம் பெருக்கு எடுத்துள்ளது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அரசு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்:
சுகன்யான் திட்டம் மூலம் வரும் 2022ம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும். இந்தியா என்னும் யானை உறங்கிய நிலை மாறி இப்போது யானை எழுந்து விட்டது.

தொழில் துவங்க ஏற்றநாடு:
முதலீடுகள் மற்றும் தொழில் துவங்குவதற்கு ஏற்ற நாடாக இந்திய இருக்கிறது. 2013ம் ஆண்டு ஒப்பிடுகையில் இந்திய அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. தேர்தலில் மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். இவ்வாறு விழாவில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications