விண்ணுக்கு 3 மனிதர்களை அனுப்பும் இந்தியா: மோடி-இஸ்ரோ-உறுதி.!
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்தபடி இஸ்ரோ தனது முதல் மனித விண்வெளி பயணத்தை துவங்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்தபடி இஸ்ரோ தனது முதல் மனித விண்வெளி பயணத்தை துவங்கும் என்று அவர் தெரிவித்திருந்தார். அதன் படி இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகியாய் நடுகல் ஒன்றிணைந்து "ககன்யான்" திட்டத்தின் பணி குழு பற்றிய அறிவிப்பை அறிவித்துள்ளது.

இஸ்ரோ வுடன் இணைத்து விண்வெளிக்கு முதல் விண்வெளி வீரர்களை அனுப்பும் பனி குழு பற்றிய தகவல்களை பிரெஞ்சு ஸ்பேஸ் தலைவர் ஜீன் யவ்ஸ் லீ கேள், பெங்களூரு ஸ்பேஸ் எக்ஸ்போ 6வது எடிஷன் விழாவில் அறிவித்தார்.

மூன்று விண்வெளி வீரர்கள்
இந்தியா 2022 க்கு முன்பாக மூன்று விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இஸ்ரோ வின் முக்கிய நோக்கம் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா வை தொடர்ந்து விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய சாதனை பட்டியலில் நான்காவது உலக நாடாக வேண்டும் என்பது தான்.

இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு
இஸ்ரோ மற்றும் சிஎன்இஎஸ் பிரெஞ்சு ஸ்பேஸ் நிறுவனம் அனைத்து துரைகளிலுள் இருக்கும் கை சிறந்த வல்லுநர்களை வைத்து பணிக்குழுவை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக விண்வெளி மருத்துவம், விண்வெளி சுகாதார கண்காணிப்பு, வாழ்க்கை ஆதரவு, கதிர்வீச்சு பாதுகாப்பு, விண்வெளிக் குப்பைகள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுகாதார அமைப்பு என அனைத்துத் துறைக்கும் தனிப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனன்ர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கேள் தெரிவித்துள்ளார்.

நுண்ணோக்கி சோதனை
இஸ்ரோ, அதன் விண்வெளி வீரர்கள் மூலம் நுண்ணோக்கி மீது சோதனைகள் நடத்தத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி ஆராய்ச்சி குழு
இந்திய மற்றும் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சி குழு காலநிலை கண்காணிப்பு, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயன்பாடு, புதிய கண்டுபிடிப்பு, புதிய விண்வெளி வாகன கண்டுபிடிப்பு போன்ற அனைத்துத் துறையிலும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி மேம்பாட்டில் ஈடுபடுமென்று விழாவில் தெரிவிக்கப்பட்டது.

தொடர் ஆராய்ச்சி
இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு ஸ்பேஸ், இரு நாடுகளும் மார்ஸ், வீனஸ் மற்றும் நட்சத்திரங்களின் ஆராய்ச்சியில் இடுப்பவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications