ஏப்ரல் 1: அடுத்தக்கட்ட பாதுகாப்புக்கு சிவன் தலமையில் விண்ணில் பாய்கிறது எமிசாட்.!

கடந்த ஜனவரி 24 அன்று டிஆர்டிஓ விண்ணில் செலுத்திய மைக்ரோசாட்-ஆர் செயற்கைகோளானது, இரவில் புகைபடங்கள் எடுக்கும் திறன் கொண்டது.

|

பாதுகாப்பு தளத்தை வலுப்படுத்த தீர்மானித்துள்ள இந்தியா வழக்கொழிந்த வெடிபொருட்களுக்கு மாற்றாக புதிய போர்க்கால ஆயுதங்களை வாங்கவுள்ளது. இந்த நடவடிக்கைகளை தனது மின்னணு பிரிவிற்கும் விரிவாக்கியுள்ளது இந்திய அரசு.

எதிரி நாட்டு ரேடார் கருவிகளை எளிதில் கண்டறியும் புதிய டிஆர்டிஓ செயற்கை

வருகின்ற ஏப்ரல் 1 ம் தேதி இந்தியா தனது பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி அமைப்பிற்காக (டி.ஆர்.டி.ஓ.) 28 மூன்றாம் தரப்பு செயற்கைகோள்களுடன், எலெக்ட்ரானிக் உளவு செயற்கைக்கோளான எமிசாட்(EMISAT)-ஐ விண்ணில் செலுத்தவுள்ளது.இந்த செயற்கைக்கோள் மூலம் எல்லையில் நிறுவப்பட்டுள்ள எதிரி நாட்டு ரேடார் மற்றும் சென்சர்களையும் கண்டறியமுடியும்.

இஸ்ரோ

இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கூறுகையில், புதிய வகை போலார் சேட்டிலைட் லான்ச் வெகிகில் (PSLV) ராக்கெட் மூலம் 436 கிலோ எடைகொண்ட இந்த எமிசாட் செயற்கைகோள் 749 கிமீ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த புதிய செயற்கைக்கோள், படங்கள் மற்றும் தொலைத்தொடர்பு தொடர்பான உளவுத்தகவல்களை சேகரிக்க உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சாதனங்கள்

தொலைத்தொடர்பு சாதனங்கள்

இந்த செயற்கைக்கோள் மூலம் எதிரிநாட்டு பகுதிகளின் சரியான நிலப்பகுதிகளை அடையாளம் காணவும், அப்பகுதியில் எத்தனை தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதை கண்டறியமுடியும். எதிரி நாடுகளின் மீது தனது கழுகு பார்வையை எப்போதும் வைத்திருக்க இந்தியாவிற்கு இந்த செயற்கைகோள் உதவும்.

எதிரி குழுக்களை கண்காணிக்க முடியும்

எதிரி குழுக்களை கண்காணிக்க முடியும்

என்னதான் டிரோன்கள் பலூன்கள் மற்றும் ஏரோஸ்டாட்ஸ் ஆகியவை எதிரிகள் மீது ஒரு கண் வைத்திருக்க பாதுகாப்பு முகமைகளால் பயன்படுத்தப்பட்டாலும், அவை அனைத்திற்கும் குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. உதாரணமாக டிரோன்களால் சில மணிநேரத்திற்கு மட்டுமே பறக்க முடியும், பலூன்களில் ஹீலியம் வாயு தீர்ந்துபோகலாம் மற்றும் செயற்கைக்கோள்கள் எப்போதும் நிலையானவை அல்ல.எனவே சில பாதுகாப்பு சாதனங்கள் மூலம் எதிரி குழுக்களை கண்காணிக்க முடியும். மேம்பட்ட மின்னணு செயற்கைக்கோள்கள் மூலம் தொடர்பு சாதனங்கள் இடைமறித்து இரண்டு பயனர்களிடையே உரையாடலை கண்காணிக்க முடியும்.

மைக்ரோசாட்-ஆர்

மைக்ரோசாட்-ஆர்

கடந்த ஜனவரி 24 அன்று டிஆர்டிஓ விண்ணில் செலுத்திய மைக்ரோசாட்-ஆர் செயற்கைகோளானது, இரவில் புகைபடங்கள் எடுக்கும் திறன் கொண்டது.

இராணுவம் மற்றும் கண்காணிப்பு

இராணுவம் மற்றும் கண்காணிப்பு

"தற்போது செயல்பாட்டில் உள்ள 47 செயற்கைக்கோள்களில், தற்போது இராணுவம் மற்றும் கண்காணிப்பு நோக்கங்களுக்காக 6 முதல் 8 செயற்கைகோள்களை இந்தியா முழுவதுமாக பயன்படுத்துகிறது. அத்துடன் இரவு நேரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்ட ரிசாட்-2 செயற்கோளுடன், நான்கு கார்டோசாட் -2 தொடர் செயற்கைக்கோள்களும் (2C, 2D, 2E, 2F) உள்ளன. இந்த கார்ட்டோசாட் செயற்கைக்கோள்களில் உள்ள உயர் தர பஞ்ச்ராமேடிக் (பான்) கேமிராக்கள் மூலம் பூமியின் கருப்பு மற்றும் வெள்ளை படங்கள் எடுக்கலாம் மற்றும் ஒரே சமயத்தில் இதனால் 9.6 கி.மீ. சுற்றளவை உள்ளடக்க முடியும்" என இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எமிசாட்

எமிசாட்

எமிசாட் உடன் சேர்த்து விண்ணில் செலுத்தக்கூடிய பிற சர்வதேச செயற்கைக்கோள்களில், 28 அமெரிக்காவை சேர்ந்தவை. லுதானியாவிலிருந்து இரண்டு, ஸ்பெயினிலும், சுவிட்சர்லாந்தை சேர்ந்த தலா ஒரு செயற்கைகோளும் இதில் அடக்கம். இவையனைத்தும் சுமார் 210 கிலோ எடையுள்ளவை.

4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்கள்

4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்கள்

இஸ்ரோ தலைவர் கே. சிவன் இந்த சிறப்பு நிகழ்வை குறித்து கூறுகையில் "நாங்கள் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டார்கள் உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட்-ஐ பயன்படுத்தவுள்ளோம். மேலும் முதல்முறையாக மூன்று வெவ்வேறு உயரங்களில் ராக்கெட்டை சுற்றுவட்டபாதையில் செலுத்த முயற்சிக்கவுள்ளோம்." என தெரிவித்தார்.

ஜூலை அல்லது ஆகஸ்டில்

ஜூலை அல்லது ஆகஸ்டில்

இஸ்ரோ இந்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்டில், மேலும் இரண்டு பாதுகாப்பு செயற்கைகோள்களை புதிய ராக்கெட்டான சிறிய செயற்கைக்கோள் செலுத்துதல் வாகனம் (Small Satellite Launch Vehicle -SSLV) மூலம் விண்ணில் செலுத்தவுள்ளது.

Best Mobiles in India

English summary
India Can Easily Detect Enemy Radars & Communication Devices With New DRDO Satellite: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X