நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நேர்மையான தீர்ப்பு வழங்க புதிய ஏ.ஐ ரோபோட் நீதிபதி.!

நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்க, உலக வரலாற்றில் முதன் முறையாக ஏ.ஐ ரோபோ நீதிபதியை நியமிக்க முடிவு செய்துள்ளது எஸ்தோனியா நீதித்துறை அமைச்சகம்.

|

எஸ்தோனியாவின் நீதி முறை தற்போது மிகவும் பின்தங்கிய பல பிரச்சனைகளை எதிர்கொண்டுவருகிறது, மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க புதிய ஏ.ஐ ரோபோட் நீதிபதி!

நீதிபதிகளைக் காட்டிலும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது, இதனால் இன்னும் பல வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்படாத நிலை உருவாகியுள்ளது.

 ஏ.ஐ ரோபோ நீதிபதி

ஏ.ஐ ரோபோ நீதிபதி

எனவே, இந்த நிலையைச் சமாளித்து, நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்க, உலக வரலாற்றில் முதன் முறையாக ஏ.ஐ ரோபோ நீதிபதியை நியமிக்க முடிவு செய்துள்ளது எஸ்தோனியா நீதித்துறை அமைச்சகம். முழு செயல்முறையையும் ஏ.ஐ ரோபோட் மூலம் தானியங்கியாக்கிகொள்ளும் படி முடிவு செய்துள்ளது.

அணைத்து சட்ட திட்டங்களும் கற்பிக்கப்படும்

அணைத்து சட்ட திட்டங்களும் கற்பிக்கப்படும்

எஸ்தோனியா நாட்டின் நீதித்துறை அமைச்சகம், ஓட் வெல்ஸ்பேர்க் என்ற தலைமை டேட்டா அமைப்பாளரின் உதவியுடன் இந்த ஏ.ஐ ரோபோட்டை உருவாக்கி வருகிறது. அணைத்து சட்ட திட்டங்களும் இந்த ரோபோட்களுக்கு கற்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வழங்கும் ஏ.ஐ ரோபோட் நீதிபதி

தீர்ப்பு வழங்கும் ஏ.ஐ ரோபோட் நீதிபதி

உருவாக்கப்பட்டு வரும் ஏ.ஐ ரோபோட் நிலுவையில் உள்ள அணைத்து வழக்குகளையும் ஆராய்ந்து, வழக்குடன் சம்மந்தப்படும் ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்து தனது தீர்ப்பை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோபோட் நீதிபதியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் மனித நீதிபதி

ரோபோட் நீதிபதியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் மனித நீதிபதி

இந்த ஏ.ஐ ரோபோட் நீதிபதி, வழக்கிற்கு ஏற்ற தீர்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏ.ஐ ரோபோட் எடுக்கும் என்றும் மற்றும் அதனைத் தொடர்ந்து உயர் மனித நீதிபதி, ரோபோட் நீதிபதியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்மையான தீர்ப்பு

நேர்மையான தீர்ப்பு

இதன்மூலம் நிலுவையில் உள்ள பல கோடி வழக்குகளுக்கு விரைவாகத் தீர்ப்பு கிடைக்கும் என்றும், நீதித்துறையில் எந்த வித கோளறுபடுகளும் இல்லாமல் நேர்மையான தீர்ப்புகளை வழங்க உதவியாய் இருக்கும் என்று எஸ்தோனியா நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிலுவையில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள்

நிலுவையில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள்

இந்தியாவிலும் இதே பிரச்சினை பல காலமாக நிலவி வருகிறது. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு 2.91 கோடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல கொலை, கொள்ளை, சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

60,000 உச்ச நீதிமன்ற வழக்குகள் நிலுவை

60,000 உச்ச நீதிமன்ற வழக்குகள் நிலுவை

இந்தியாவில் மொத்தம் 17,400 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர், கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2.91 கோடி வழக்குகளுக்கும் இவர்களே தீர்ப்பு வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 60,000 உச்ச நீதிமன்ற வழக்குகள் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்திய நீதித்துறை அமைச்சகம் முயற்சி செய்யுமா?

இந்திய நீதித்துறை அமைச்சகம் முயற்சி செய்யுமா?

நீதிக்காகக் காத்திருக்கும் சாதாரண குடிமக்களுக்கும், நிலுவையில் உள்ள பல வழக்குகளுக்கும் முடிந்த வரையில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியும் என்பதனால், இந்த ஏ.ஐ ரோபோட் நீதிபதிகளை இந்திய நீதித்துறை அமைச்சகம் முயற்சி செய்யுமா என்ற கேள்விகள் தற்பொழுது எழுந்துள்ளது.

Best Mobiles in India

English summary
India Badly Needs An AI Robot Judge To Clear Backlog Of Cases Just Like The One Estonia Wants : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X