மனிதனால் முடியாத 9 காரியங்களை மிருகங்கள் செய்யும்; அவைகள் என்னென்ன.?

  உலகின் மிகப்பெரிய ராக்கெட்டுகளை கட்டமைப்பதாலும், கற்பனைக்கு எட்டாத ஒளியாண்டுகள் பயணித்து அண்டத்தில் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும் ஏலியன்களையும், இதர வளங்கள் மிகுந்த கிரகங்களையும் கண்டுபிடிக்க ஆசைப்படுவதாலும் - பூமி கிரகத்தின் ஆளுமைகளாக மனித இனம் மாறிவிடாது. இந்த கிரகத்தின் ஒரே ஆளுமை, அதுவும் பேராளுமை - இயற்கை மட்டும் தான்.!

  அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுகள் நம்மை சூழ்ந்து வாழும் விலங்குகள் தான். அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களால் கூட துல்லியமாக கண்டறிய முடியாத பல விடயங்களை விலங்குகள் இயற்கையாகவே கண்டறியும் திறன் கொண்டுள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  இயல்பிலான சக்திகள்.!

  எடுத்துக்காட்டுக்கு நிலநடுக்கம் ஏற்படும் முன்னரே அதை நாய்களுக்கு உணர முடியும் என்பதை நம்மில் பலர் அறிவோம். அப்படியாக எந்தெந்த விலங்குகளால் என்னென்ன இயல்பிலான சக்திகள் உண்டென்பதை பற்றிய தொகுப்பே இது.

  இரண்டு மடங்கு சக்திவாய்ந்தவைகள்.!

  பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதர்கள் தான் சக்தி வாய்ந்தவர்கள் என நீங்கள் நினைத்தால், விலங்குகள் அதற்கும் ஒருபடி மேல் மற்றும் நமது பரிணாம வளர்ச்சியை காட்டிலும் நம்பமுடியாத வண்ணம் இரண்டு மடங்கு சக்திவாய்ந்தவைகள் என்பதை கட்டுரையின் முடிவில் அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

  09. பறவைகளால் காந்த புலங்களைக் கண்டறிய முடியும்.!

  பூமியின் காந்தப்புலத்தில் உள்ள வேறுபாடுகளை கண்டறிவதில் கில்லாடிகளாக பறவைகள் அறியப்படுகின்றன. புலம்பெயரும் பறவைகளானது ஆயிரக்கனக்கான கிலோமீட்டர்களை குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் ஆராய்ந்து இனப்பெருக்கம் மற்றும் குளிர்கால தேர்வுகளை நிகழ்த்துகின்றன. இந்த தகவலைத் தேர்ந்தெடுப்பதற்கான செல்கள், பறவையின் உள்காதில் அமைந்திருப்பதாக அறிவியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

  08. ஒரு பெண்ணின் கர்ப்பத்தை டால்பின்களால் கண்டறிய முடியும்.!

  எதிரொலி இடமாக்கம் (எக்கோலேஷன்) மூலமாக ஒருவர் கர்ப்பமாக இருப்பதை டால்பின்களால் கண்டறிய முடியும். பிறக்காத மனித குழந்தைகளை டால்பின்களால் உணரவும் முடியும்.

  ஒலி எவ்வாறு மாறுகிறது.!

  இதே திறனை கொண்டுதான் டால்பின்கள் தங்களை வழிநடத்தியும், பேசியும் கொள்கிறது. இவைகளால் மிக உயர்ந்த ஒலி அலைகளை வெளிக்கிட முடியும். பின்னர் பல்வேறு பொருள்களைத் தாண்டி ஒலி எவ்வாறு மாறுகிறது என்பதைப் பகுப்பாய்வும் செய்ய முடியும்.

  07. தேனீக்களால் கண்ணிவெடிகளை கண்டறிய முடியும்.!

  வெடிமருந்துகளின் வாசனையுடன் கலந்த சர்க்கரைத் தீர்வை கண்டுபிடிக்கும் படி தேனீக்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. விஞ்ஞானிகளின்படி - தேனீக்களானது நம்பமுடியாத நுகரும் சக்தியினை கொண்டுள்ளது. ஆக சக்கரையுடனான வெடிபொருள் வாசத்தை கண்டறியும் திறனை தேனீக்கள் பெற்றால், நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை களைய தேனீக்கள் மிகவும் உதவும்.

  How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
  06. பூனைகள் மனிதர்களின் நோய்களைக் கண்டறிய முடியும்.!

  06. பூனைகள் மனிதர்களின் நோய்களைக் கண்டறிய முடியும்.!

  பூனைகளுக்கு நோயை குணப்படுத்துவதற்கான எந்த திறனும் இல்லை என்றாலும் கூட, நோயை அதை கண்டுபிடிப்பதற்கான திறன்களை கொண்டுள்ளது. ஒரு 10 வயதான பூனையான ஆஸ்கார் சுமார் 100 பேர்களின் மரணத்தை முன்னரே கணித்துள்ளதாக நம்பப்படுகிறது. ஆஸ்கார் எனப்படும் இந்த பூனை தன்னந்தனியாக இறக்கப்போகும் நோயாளிகளுக்கு ஆறுதலளிக்கும் வண்ணம் அவர்களுடன் நேரம் செலவிடும் பழக்கத்தையும் கொண்டுள்ளது.

  05. பாம்புகளால் வெப்பத்தினை கண்டறிய முடியும்.!

  பைத்தான்ஸ், போயஸ், ராட்டில்ஸ்னேக்ஸ் மற்றும் இவைகளின் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அனைத்துமே பிட்-வைப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இவைகள் அனைத்திற்குள் ஒரு தனித்த 'ஆறாவது அறிவு' உண்டு.

  வெப்ப-ரத்த பிராணிகள்

  அது அகச்சிவப்பு கதிர்கள் உள்ளிட்ட மிகச்சிறிய வெப்பநிலை மாற்றங்களை கூட உணரும் திறன்கள் உள்ளது. இவைகளின் கண்கள் மற்றும் மூக்கிற்கு இடையே உள்ள சிறப்பு குழிகளானது (பிட்) இதை சாத்தியப்படுத்துகிறது. இதனாலேயே தான் பெரும்பாலான வெப்ப-ரத்த பிராணிகள் பாம்புகளுக்கு இரையாகிறது.

  04. பன்றிகளால் ராபுள்களை கண்டறிய முடியும்.!

  ராபுள் (truffle) என்பது பூமிக்கு அடியிலுள்ள ஒருவகையான பழம்தரும் காளானின் உடலாகும். ராபுள் (truffle) நூற்றுக்கணக்கான இனங்களில் காணப்படுகிறது. சில (பெரும்பாலும் பேரினத்தின் கிழங்குவகை) பழம்தரும் உடல் அதிக விலையுடைய உணவாகும்.

  உறிஞ்சுதல் என்ற குறிப்பிடத்தக்க திறன்

  உண்ணத்தக்க ராபுள் (truffle) மத்திய கிழக்கு, பிரஞ்சு, ஸ்பானிஷ், வடக்கு இத்தாலி மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளில் உயர் மதிப்புடைய உணவாகும். இவைகளை மிக எளிதாக பன்றிகளால் கண்டறிய முடியும். அதற்கு அவைகளின் உறிஞ்சுதல் என்ற குறிப்பிடத்தக்க திறன் பக்கபலமாக உள்ளது.

  03. யானைகளால் புயல்மழையை கண்டறிய முடியும்.!

  உணவு மற்றும் தண்ணீருக்கான தேடலில் மந்தைகளோடு சேர்ந்து குடியேறும் விலங்குகளான யானைகளால் சுமார் 150 மைல்கள் தொலைவில் இருந்தும்கூட மழை பெய்வதை "உணர முடியும்".

  கேட்கும் திறன் மீது நாம் சந்தேகம் கொள்ளலாம்.!

  இது எப்படி சாத்தியம் என்பது பற்றிய அறிவியல் பூர்வமான விளக்கங்கள் ஏதுமில்லை. இங்கு யானைகளின் கேட்கும் திறன் மீது நாம் சந்தேகம் கொள்ளலாம். ஒருவேளை இடி-மின்னலின் ஒலியானதை, எதைவிடவும் யானைகளால் அதிகம் கேட்க முடியலாம்.

  02. நாய்களால் ஏற்படும் முன்னரே பூகம்பத்தை கண்டறிய முடியும்.!

  நாய்கள் மட்டும் அல்ல, பொதுவாக விலங்குகள் அனைத்துமே ஏற்படப்போகும் பூகம்பங்களை உணர்கின்றன. குறிப்பாக மிகவும் கூர்மையான கேட்கும் திறன் கொண்டிருக்கும் விலங்குகள், அவைகளின் உணர்திறன் கொண்டு சீஸ்மெட்டிக் (நில அதிர்வு) நடவடிக்கைகளை முன்னரே கேட்கின்றன.

  01. பழ ஈக்களால் புற்றுநோய் செல்களை கண்டறிய முடியும்.!

  இத்தாலியில் நிகழ்த்தப்பட்டதொரு ஆராய்ச்சியின் படி, ப்ரூட் பிளைஸ் எனப்படும் பழ ஈக்களால் புற்றுநோய் செல்களை கண்டறிய முடியும். புற்றுநோய் செல்களின் நறுமணத்தை கொண்டு பழ ஈக்கள் அவைகளின் ஆண்டெனாவில் ஏற்படுத்தும் சில மாற்றங்கள் கொண்டு புற்றுநோய் செல்களின் இருப்பினை அறிந்துகொள்ள முடியும். பழ ஈக்களின் நடவடிக்கையானது, பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு இடையில் வேறுபடுகின்றன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Incredible Things Animals Can Detect That Technology Fail To. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more