Home
Scitech

பிரமிப்பூட்டும் தமிழன் விண்வெளி அறிவு: தொழில் நுட்பம் இல்லாமல் சாத்தியம்?

அறிவியல் இல்லாத காலத்திலும் உலகத்தையும், கடலையும், விண்வெளி கூட்டத்தையும், அணுவையும் ஆராய்ந்துள்ளான். இவைகளை எவ்வாறு கண்டுபிடித்தான். மண்ணையும் பொன்னாக்கும் வித்தையும் கற்று வைத்துள்ளான்.

By Rajivganth Gurusamy

நாம் பூமியில் பிறந்து வளர்ந்தாலும், விண் மீன் கூட்டங்களையும், அவைகள் இயங்கும் விதத்தையும் அங்கு என்ன இருக்கின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

பிரமிப்பூட்டும் தமிழன் விண்வெளி அறிவு:

கல் மண் தோன்றாத காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பார்கள். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி, சனி, ராகு, கேது என ஒன்பது கிரங்களையும் கண்டுபிடித்துள்ளான் தமிழன். இது மட்டும் எப்படி சாத்தியம் ஆயிற்று. 9 கோள்களுக்கும் நவ கிரகம் என்று கோயில்களிலும் வழிபாட்டு முறையை உருவாக்கியுள்ளான். மற்ற நாட்டினர் எல்லாம் கூட்டு நுண்நோக்கி உதவியுடன் தான் கோள்களின் நிறம், இயக்கம், சஞ்சாரம் இருப்பதை கண்டுபிடித்தான்.

ஆனால் தமிழன் எப்படி அவைகளின் நிறம், 27 நட்சத்திரம், தலைவனாக உள்ள சூரியனை தான் மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன. இதை எவ்வாறு கண்டுபிடித்தான் என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது.

அறிவியல் வளராத காலம்:

அறிவியல் வளராத காலம்:

அறிவியல் இல்லாத காலத்திலும் உலகத்தையும், கடலையும், விண்வெளி கூட்டத்தையும், அணுவையும் ஆராய்ந்துள்ளான். இவைகளை எவ்வாறு கண்டுபிடித்தான். மண்ணையும் பொன்னாக்கும் வித்தையும் கற்று வைத்துள்ளான். புஸ்பகரக விமானத்தையும் வைத்து இருக்கிறான். இதைஎல்லாம் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இவைகளை கட்டுகதையாக நினைத்து இருந்த நாம் நடப்பதை பார்க்கும் போது, ஆபூர்வமாக இருக்கிறது.

அறிவியல் யுகம்:

அறிவியல் யுகம்:

அறிவியல் யுகத்தில் இருப்பதால், தற்போது விண்வெளி முதல் அனைத்தையும் உலக நாடுகள் ஆய்வு செய்து வருகின்றன. பூமியை தவிர மற்ற கோள்களில் மனிதன் வாழ முடியுமா? அங்கு நீர், காற்று, தட்பவெட்ப நிலை போன்றவை இருக்கின்றதா என அறிவியல் யுகத்தில் செயற்கைகோள்கள் உதவியுடனும், விண்வெளியிலும் ஆராய்ச்சி நிலையம் அமைத்து ஆராய்ந்து வருகிறான்.

விண்வெளி மீது மோகம்:

விண்வெளி மீது மோகம்:

விண்வெளியில் என்ன நடக்கிறது இதனால் மனித இனத்திற்கு ஏதாவது தீங்கு உண்டாகுமா? மனிதனை போலவே மற்ற கிரகங்களிலும் மனிதர்கள் வேறு உயிரினங்கள் வசிக்கிறதா என்று ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏன் விண்வெளி மீது மட்டும் இத்தனை மோகம். விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகள் நடப்பதை பார்த்தால், ஏதோ ஒருவகையில் கற்பனையாக செல்லப்படுவது கூட தற்போது உண்மை போன்ற இருக்கிறது.

வேற்றுகிரக வாசிகள்:

வேற்றுகிரக வாசிகள்:

மனிதர்களை போலேவே வேற்று கிரகங்க வாசிகள் இருப்பது உண்மை தான் என்று அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீப்பன் ஹாக்கிங்ஸ் கூயிருந்தார். வேற்று கிரக வாசிகள் மனிதனை விட புத்தியாக இருக்க கூடும். அவர்களும் நம்மை தேடி பூமிக்கும் வருவார்கள். நம்மை போன்றே அவர்களும் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்றனர். அவர்களால் ஆபத்து கூட நேரிடலாம் என்று மாற்று திறனாளியான ஸ்டீப்பன் ஹாக்கிங்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் நாம் செல்லும் விண்வெளி ஓடம் போலே அவர்களும் பறக்கும் தட்டுகளில் பூமியை கண்காணித்து வருதாக அவர் கூறியுள்ளார்.

கோள்கள் ஆராய்ச்சி:

கோள்கள் ஆராய்ச்சி:

சந்திரன், செவ்வாய், புதன், சனி, வியாழன் உள்ளிட்ட கோள்களை செயற்கை கோள்கள் உதவியுடன் ஆய்வு செய்துள்ளான். ஒரு சில கோள்களில் விண்வெளி நிலையம் அமைத்தும் ஆய்வு செய்துள்ளான். சூரியனை போலவே ஆயிரம் சூரியன்கள் இருக்கின்றன என்றும் விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளான்.

உலக நாடுகள்:

உலக நாடுகள்:

அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் விண்வெளி குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வுகள் ஒவ்வொரு கோள்களிலும் உள்ள தனிமங்கள், வாயுக்கள், நீர், தட்பவெப்பம் உள்ளிட்டவைகள் குறித்து செயற்கை கோள் அனுப்பியும், விண்வெளி மையங்கள் அமைத்தும் ஆய்வு செய்து வருகின்றன.

நிலவில் வடை சுடலாம்:

நிலவில் வடை சுடலாம்:

தற்போது சந்திரனில் மக்கள் வசிக்கலாம் என்று தெரியவந்துள்ளதால், அங்கு நாசா சார்பிலும் தனியார் அமைப்புகள் சார்பிலும் கட்டுமான பணிகள் நடக்கிறது. அங்கு மனை பிரிவுகளும் விற்கப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் முந்தியடித்துக் கொண்டு, மனைப்பிரிவுகளை வாங்கி குவிக்கின்றனர். அங்கு மனிதர்கள் குடிபெயர்ந்தால், கட்டாயம் நிலவில் பாட்டி அமர்ந்து வடை சுட்ட கதையை விரைவில் நம் நாட்டினரும் அரங்கேற்றி விடுவார்கள் என்பது சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
incredible tamil space achievement technology: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X