பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்: நாசா அசத்தல்.!

நாசாவின் 2020 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முயற்சி அமைந்துள்ளது.

|

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு ஒரு சிறிய ஹெலிகாப்டரை அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது. நாசாவின் 2020 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முயற்சி அமைந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் பயணிப்பதற்கான புதிய தலைமுறைத் தொழில் நுட்ப வானூர்தியாக இந்த ஹெலிகாப்டர் அமையும். பூமியிலிருந்து மற்றொரு கிரகத்திற்கு இது போன்று ஹெலிகாப்டர் அனுப்பப்படுவது இதுதான் முதல் முறையாக இருக்கும்.

பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஹெலிகாப்டர்: நாசா அசத்தல்.!

பல்பு வாங்கிய நாசா; இனி கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் ஒருத்தன் நம்ப மாட்டான்.!பல்பு வாங்கிய நாசா; இனி கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் ஒருத்தன் நம்ப மாட்டான்.!

தொலைவிலிருந்து இயக்கக்கூடிய தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்படும் இந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தில் நிலவக்கூடிய அடர்த்தி குறைந்த வளிமண்டலத்திலும் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய பந்துபோலிருக்கும் ஹெலிகாப்டரின் மையப்பகுதியிலிருந்து எதிர் எதிராகச் சுழலக்கூடிய இரண்டு தகடுகளுடன் வடிவமைக்கப்படும் இந்த ஹெலிகாப்டரின் எடை இரண்டு கிலோவுக்கும் குறைவாகவே இருக்கும். ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ள தகடுகள், ஒரு நிமிடத்திற்கு 3000 முறை சுழலும். பூமியில் இயங்குவதைக் காட்டிலும் இதன் சுழற்சி 10 மடங்கு அதிகம்.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

"பூமியிலிருந்து இயங்கும் ஹெலிகாப்டர்கள் 40,000 அடி (12,200 மீட்டர்) உயரம் வரை பறக்கும். பூமியில் உள்ள வளிமண்டல அடர்த்தியில் நூறில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே செவ்வாய் கிரகத்தில் இருக்கும். எனவே, செவ்வாய் கிரக மேற்பரப்பிற்கு நம்முடைய ஹெலிகாப்டர் சென்றாலே, அது பூமியிலிருந்து ஒரு இலட்சம் அடி (30,480 மீட்டர்) உயரத்தில் இருப்பதற்குச் சமம்." என்கிறார், நாசாவுக்கு ஹெலிகாப்டர் அனுப்புவதற்கான திட்டத்தின் மேலாளர்.

சிறிய பந்துபோலிருக்கும்

பேட்டரிகள்

கார் அளவுக்குப் பெரிய வடிவிலான பறக்கும் ஊா்தியின் மூலமாக இந்த ஹெலிகாப்படர் செவ்வாய் கிரகத்துக்குக் கொண்டு செல்லப்படும். செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டவுடன், ஹெலிகாப்டர் இயங்குவதற்கான கட்டளைகள் தொலைவிலிருந்து கொடுக்கப்படும். பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டு சோதித்துப் பார்த்த பிறகு, ஹெலிகாப்டர் மேல் எழும்பிப் பறப்பதற்கான கட்டளைகள் பூமியிலிருந்து பிறப்பிக்கப்படும்.

நிர்வாக அலுவலர்

நிர்வாக அலுவலர்

"வேற்றுகிரக வான்வெளியில் ஒரு ஹெலிகாப்டரைப் பறக்கவிடுதல் என்னும் திட்டம் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது" என்கிறார், நாசாவின் நிர்வாக அலுவலர், பிரைடன்ஸ்டைன்.

செவ்வாய் கிரகத்தில் வானவூர்திகளைப் பறக்கவிடுவதற்கான சாத்தியக் கூறுகளையும் அதனால் விளையும் நன்மைகளையும் ஆராய்வதற்காகவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முப்பது நாட்கள்

முப்பது நாட்கள்

முப்பது நாட்கள் வரையிலான சோதைனைக் காலத்தில் ஐந்து ஹெலிகாப்டர்களைப் பறக்கவிட நாசா திட்டமிட்டுள்ளது. பறக்கும் நேரத்தையும் உயரத்தையும் படிப்படியாக அதிகரத்துச் சோதித்துப் பார்க்கவிருக்கிறது. முப்பது வினாடிகள் வரை, 10 அடி உயரத்திற்குச் செங்குத்தாகப் பறக்கவிடுதலில் தொடங்கி, படிப்படியாக உயரத்தை சில நூறு அடிகள்வரை அதிகரித்து, 90 வினாடிகள் வரை பறக்கவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

லித்தியம் மூலக்கூறுகளால் மின்னூட்டம் பெறக்கூடிய ஹெலிகாப்டரின் பேட்டரிகளை சோலார் மின்கலங்கள் மூலமாக சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்தச் சூரிய மின்கலங்களைப் பயன்படுத்தி, செவ்வாய் கிரகத்தின் இரவு நேரக் கடுங்குளிர்ச்சியிலிருந்து ஹெலிகாப்டரின் இயந்திரங்களைப் பாதுகாக்க அதனைச் சூடேற்றிக் கொள்ளவும் இயலும்.

இந்தத் தொலை நோக்குத் திட்டத்தின் தொடக்கம், 2020ஆம் ஆண்டு, ஜீலை மாதம், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள கேப் கார்னிவல் விமானப் படைத் தளத்தில் நடைபெறவுள்ளது. இத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தை அடையும். புவியியல்சார் ஆய்வுகள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்வதற்குத் துணையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
In an Interplanetary First, NASA to Fly a Helicopter on Mars ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X