தயாரா இருங்க! 7 நிமிடங்கள் 32 நொடிகள் இருளில் மூழ்கப்போகும் பூமி! சரியான தேதியை கணித்துள்ள விஞ்ஞானிகள்!

|

இந்த 2023 ஆம் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளின் போது.. மொத்தம் 7 நிமிடங்கள் மற்றும் 32 நொடிகளுக்கு நாமெல்லாம் "இருளில் மூழ்கலாம்" என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

இன்னும் சொல்லப்போனால் இந்த சம்பவம் ஒரே ஒரு நாளோடு நின்று விடாது, இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டுமே மொத்தம் 4 முறை நடக்க உள்ளது.

ஏனென்றால்?

ஏனென்றால்?

இந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழவுள்ளது. அதில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் அடக்கம்.

இந்த 4 கிரகணங்களில் முதலாவது சூரிய கிரகணம் தான் நம்மை இருளில் மூழ்கடிக்க போகிறது. ஏனென்றால் அதுவொரு முழு சூரிய கிரகணம் ஆகும்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ஒரு முழு சூரிய கிரகணம் ஆனது சுமார் 7 ​​நிமிடங்கள் மற்றும் 32 வினாடிகள் நீடிக்கலாம். ஒருவேளை இது அதிகபட்சமாக 12 நிமிடங்கள் மற்றும் 29 வினாடிகள் கூட நீடிக்கலாம்.

பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!பூமியின் கடைசி நொடி இப்படித்தான் இருக்கும்! விஞ்ஞானிகளின் விபரீதமான ஆய்வில் கிடைத்த திகிலூட்டும் ஆதாரம்!

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது தோன்றும்?

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது தோன்றும்?

இந்த 2023 ஆம் ஆண்டு மொத்தம் இரண்டு சூரிய கிரகணங்கள் தோன்றும். முதலாவது சூரிய கிரகணம் ஆனது ஏப்ரல் 20 ஆம் தேதி தோன்றும்,

இதுவொரு முழு சூரிய கிரகணம் ஆகும். ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப்படி, இந்த சூரிய கிரகணம் ஆனது தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அண்டார்டிக்காவில் உள்ளவர்களால் பார்க்க முடியும்.

இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது தோன்றும்?

இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது தோன்றும்?

இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதியன்று தோன்றும்.

இதுவொரு அனுலார் சோலார் எக்லிப்ஸ் (Annular solar eclipse), அதாவது இந்த சூரிய கிரகணம், ஒரு மோதிர வடிவிலான சூரிய கிரகணமாக தோன்றும்.

ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகளின்படி, இந்த சூரிய கிரகணம் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்காவை கடக்கும் மற்றும் இது அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு தெளிவாக தெரியும்,

அதுமட்டுமின்றி, மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் கூட இந்த கிரகணத்தை பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது!

பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த "எமன்".. என்னது அது?

சூரிய கிரகணம் மட்டுமல்ல.. 2023-இல் சந்திர கிரகணமும் நடக்கும்!

சூரிய கிரகணம் மட்டுமல்ல.. 2023-இல் சந்திர கிரகணமும் நடக்கும்!

சூரிய கிரகணத்தை போலவே இந்த 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 2 சந்திர கிரகணங்களும் நிகழவுள்ளன.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் தகவலின்படி, இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆனது ஒரு பெனும்பிரல் லூனார் எக்லிப்ஸ் (Penumbral Lunar Eclipse) ஆக இருக்கும். இது மே 5, 2023 அன்று தோன்றும்.

இந்த பெனும்பிரல் சந்திர கிரகணம் ஆனது ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும்.

2023-ன் இரண்டாவது சந்திர கிரகணம் எப்போது நிகழும்?

2023-ன் இரண்டாவது சந்திர கிரகணம் எப்போது நிகழும்?

இரண்டாவது சந்திர கிரகணம் ஆனது பார்ஷியல் லூனார் எக்லிப்ஸ் (Partial Lunar Eclipse) ஆக இருக்கும், இது அக்டோபர் 28, 2023 அன்றும் நிகழும்.

இந்த பார்ஷியல் லூனார் எக்லிப்ஸ் ஆனது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளவர்களால் பார்க்க முடியும்.

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது?

சூரிய மற்றும் சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது?

கிரகணத்தின் போது சூரியனையும், சந்திரனையும் நேரடியாக பார்ப்பது பாதுகாப்பானது அல்ல. குறிப்பாக வெறும் கண்களால் கிரகணத்தை பார்ப்பது உங்கள் கண்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்த கூடும்.

எனவே கிரகணத்தை பார்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கண்ணாடிகள் அல்லது தொலைநோக்கிகள் வழியாக மட்டுமே கிரகணங்களை பார்க்க வேண்டும்.

இந்த 4 கிரகணங்களையும் ஆன்லைன் வழியாக நேரடியாக பார்க்க முடியுமா?

இந்த 4 கிரகணங்களையும் ஆன்லைன் வழியாக நேரடியாக பார்க்க முடியுமா?

முடியும்! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உட்பட பல விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் - சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் லைவ் ஸ்ட்ரீம்கள் மற்றும் வீடியோக்களை வழங்குகிறார்கள்.

ஆன்லைன் வழியாக சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை பார்ப்பது, மிகவும் பாதுகாப்பான ஒரு வழியும் கூட. அதுமட்டுமின்றி, நீங்கள் இருக்கும் இடத்தை, இருக்கும் நாட்டை பொருட்படுத்தாமல் உங்களால் எல்லா வகையான கிரகணங்களையும் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் ஸ்க்ரீன் வழியாக பார்க்க முடியும்!

Best Mobiles in India

English summary
In 2023 to we gonna see total of 4 eclipses 2 solar eclipse and 2 lunar eclipse check dates

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X