2040-ல் உலகின் அழிவை உறுதி செய்த 1973 ஆண்டு கம்ப்யூட்டர்!

ஏனெனில் அந்த காலத்தில் தான் முன் எப்போதும் இல்லாத அளவில் விண்வெளி, கம்ப்யூட்டிங் மற்றும் இன்னும் பல அதிநவீன துறைகளில் ஆகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.

|

1970 களின் முற்பகுதியை, நாம் தொழில்நுட்பத்தின் பொற்காலமாகவே கருதினோம். ஏனெனில் அந்த காலத்தில் தான் முன் எப்போதும் இல்லாத அளவில் விண்வெளி, கம்ப்யூட்டிங் மற்றும் இன்னும் பல அதிநவீன துறைகளில் ஆகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டது.

2040-ல் உலகின் அழிவை உறுதி செய்த 1973 ஆண்டு கம்ப்யூட்டர்!

அந்த காலத்தில் தான் மனித இனத்தின் மேம்பட்ட வாழ்க்கையின் பலமான அடித்தளங்கள் போடப்பட்டன. அந்த அடித்தளத்தின் மேல் தான் நாம் இன்று மேன்மேலும் பல அதிநவீங்களை கட்டமைத்து வருகிறோம்.

ஆர்வம் யாரை விட்டது?

ஆர்வம் யாரை விட்டது?

அப்படியான அதீத அறிவானது ஆபத்தில் முடியலாம் என்பதை நாம் அப்போது அறிந்திருக்க்கவில்லை. ஆர்வம் யாரை விட்டது. எதையெல்லாம் அறிந்துகொள்ள முடியாமல் இருந்ததோ அதை எல்லாம் அறிந்து கொண்டோம். அதன் விளைவாக "வளர்ச்சி சார்ந்த" கொண்டாட்டங்களுக்கு இடையே ஒரு கருப்பு குறியையும் நாம் கண்காணித்து கொண்டே இருக்கும் நிலைப்பாடு ஒன்று உருவானது.

அதென்ன கருப்பு குறி?

அதென்ன கருப்பு குறி?

வேறொன்றும் இல்லை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் வாழும் இந்த பூமியின் அழிவு சார்ந்த ஞானத்தையும் நாம் பெற்றுள்ளோம் என்பது தான் அது. ஆம், ஒன்றல்ல இரண்டல்ல, பூமி அழிவதற்கான சாத்தியங்கள் பல நூறு உள்ளன அவற்றில் கொள்ளை நோய், சூப்பர் வல்கனோ வெடிப்பு, விண்கல் மோதல், அணு ஆயுத போர், ஏலியன் படை எடுப்பு ஆகியவைகளும் அடங்கும்.

இதெல்லாம் நடக்கிற காரியமா?

இதெல்லாம் நடக்கிற காரியமா?

நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்களை பொறுத்தது. நம்பாதவர்களுக்கு சமமாக "எர்த் எண்ட் பீலிவர்ஸ்' என்கிற ஒரு கூட்டமே இருக்கிறது. அவர்கள் இந்த பூமி அழியும் என்பதையும் அதற்கான தெளிவான கோட்பாடுகளையும் வகுத்து வைத்துள்ளனர். அதெல்லாம் ஒருபக்கம் இருக்க தற்போது 1973 ஆம் ஆண்டில், எம்ஐடியின் விஞ்ஞானிகளால் உருவாக்கம் பெற்ற கணித மாதிரி 3 கம்ப்யூட்டர் "ஒரு குண்டை" போட்டுள்ளது.

அதென்ன குண்டு?

அதென்ன குண்டு?

இது ஜே ப்ராஸ்டரின் பெயரை கொண்ட முதலாவது கணித மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கம்ப்யூட்டர் ஆகும். இது மக்கள் தொகை மற்றும் தொழில்துறை வளர்ச்சி, உணவு உற்பத்தி மற்றும் வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்கள் ஆகியவைகளை கணக்கிட்டு, பூமியில் எவ்வாறு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதை விவரிக்கும்படி (கணக்கிடும்படி) கட்டமைக்கப்பட்டுள்ளது. இது வருகிற 2040 ஆம் ஆண்டில் இந்த உலகம் முடிவடையும் என்று கணக்கிட்டு உள்ளது.

ஐந்து காரணிகள்!

ஐந்து காரணிகள்!

இந்த கணினியின் ஆய்வு ஆனது, 'வளர்ச்சியின் வரம்புகள்' என்கிற புத்தகமாய் உருவாகி சிறந்த விற்பனையையும் சந்தித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பூகோள வளர்ச்சியின் மீதான பாதிப்பு, விவசாய உற்பத்தியின் மீதான பாதிப்பு, மறுசீரற்ற வள ஆதாயம், தொழில்துறை வெளியீடு மற்றும் மாசுபடுத்தும் தலைமுறை ஆகிய ஐந்து காரணிகளை உள்ளடக்கியதே இந்த ஆய்வும், வளர்ச்சியின் எல்லை சார்ந்த கணக்கும்.

பழைய ஆய்வு புதிய செய்தியானது எப்படி?

பழைய ஆய்வு புதிய செய்தியானது எப்படி?

ஒரு ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அசல் கதை மீண்டும் ஒளிபரப்பி உள்ளது, அதனால் தான் இந்த பழைய ஆய்வு மீண்டும் செய்தியாக உருமாறி இருக்கிறது. பழைய ஆய்வாக இருந்தாலும் கூட அது சுட்டிக்காட்டியபடி, சில கணிப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்படுகின்றன. உதாரணமாக, மாசுபாடு மனிதர்களுக்கு ஒரு அச்சுறுத்தலைக் கொடுக்கும் ஒரு புள்ளியில் உள்ளது.

நம்பலாமா? வேண்டாமா?

நம்பலாமா? வேண்டாமா?

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த ஆய்விற்கு நிறைய எதிர்ப்பாளர்களும் உள்ளனர். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த கம்ப்யூட்டர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இயங்கவில்லை. மற்றொன்று இந்த ஆய்வு உருவானது 1973 ஆம் ஆண்டில், ஆக அப்போது ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட காரணிகளின் நிலைமை இப்போது முற்றிலும் வேறு. ஆக "இந்த" உலக அழிவு சார்ந்த முடிவையும் உங்கள் கைகளிலேயே கைகளிலேயே விடுகிறோம். நம்புவதும் நம்பாமல் போவதும் உங்களை பொறுத்தது.

2050 ஆக கூட இருக்கலாம்!

2050 ஆக கூட இருக்கலாம்!

மனிதநேயம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் வரை, இந்த உலகை மாசுபடுத்திக் கொண்டே இருக்கும் வரை, பூமியின் இயற்கையான வளங்களை சுரண்டிக் கொண்டே இருக்கும் வரை, அழிவு என்கிற முடிவின் மீது எந்த விதமான கேள்வியும் இல்லை. ஆனால் அது எப்போது, எப்படி நிகழும் என்பதில் தான் அத்தனை கேள்விகளும் உள்ளன. அது 2040 ஆக இருக்கலாம் அல்லது 2050 ஆக கூட இருக்கலாம்.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே!

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே!

குறைந்தபட்சம் மாசுபடுவதைப் பொறுத்த வரை, விஞ்ஞானிகள் நாம் ஒரு முனைப்புள்ளியில் (அதாவது அழிவின் விளிம்பை நோக்கி) இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். நாம் செய்யும் தவறுகளை நிறுத்த வேண்டும், செய்த சேதத்தைத் திருப்புவதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அது தாமதமானால் எதிர்பார்க்கப்படும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே அழிவு தேதியை நாமே நகர்த்திக் கொள்வோம் என்பது தான் நிதர்சனம்.

Best Mobiles in India

English summary
In 1973 An MIT Computer Predicted End Of The World By 2040 Shockingly Some Of It Has Come True: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X