கிரிப்டோகரன்சி உற்பத்திக்காக ஹேக் செய்யப்படும் போன்கள்! போனை பாதுகாப்பு எப்படி?
சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த அறிகுறிகள் நீங்கள் துரதிருஷ்டவசமாக கிரிப்டோஜேக்கர்-ஆல்( cryptojacker ) பாதிக்கப்பட்டிருக்கலாம்.
உங்கள் மொபைல் போன் (குறிப்பாக ஆண்ராய்டு ) மெதுவாக இயங்க தொடங்கியிருந்தால், அதிக வெப்பமடைந்தால் அல்லது அதன் பேட்டரி எந்தவொரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் விரைவாக குறைந்தால் நீங்கள் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.
ஏன் என கேட்கிறீர்களா? சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்த அறிகுறிகள் நீங்கள் துரதிருஷ்டவசமாக கிரிப்டோஜேக்கர்-ஆல்( cryptojacker ) பாதிக்கப்பட்டிருக்கலாம்.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி உற்பத்தி என்பது டிஜிட்டல் பரிவர்த்தனை போலவே அடிப்படையான ஒன்று. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இடையே வேறுபாடு என்பது, பொதுவாக இதில் வன்பொருள் பயன்படுத்தி பிரச்சினைகள் தீர்க்கப்படுகின்றன. (உங்களுக்கு வழங்கப்பட்ட கிரிப்டோகரன்சிக்கு பிரதிபலனாக).

சைபர் கிரிமினல்கள்
பொதுவாக கிரிப்டோ பரிவர்த்தனைகளை செய்ய மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வுகாண வேண்டும். எனவே கணிசமான அளவிலான கணிப்பொறி ஆற்றலுக்கு தேவை இருக்கிறது. இதில இயற்கையாகவே வன்பொருளுக்காக நிறைய செலவழிக்கப்படுகிறது மற்றும் மிகப்பெரிய அளவில் ஆற்றலுக்கும் பணம் செலவளிக்க வழிவகுக்கிறது. ஆனால் இதற்கு மாற்றாக சைபர் கிரிமினல்கள் இன்னும் செலவு குறைந்த குறுக்குவழியை கண்டறிந்துள்ளனர்.

கிரிப்டோஜேக்கர்கள்
ஒரு ஸ்மார்ட்போன் மட்டும் கிரிப்டோகரன்சியை உற்பத்தி செய்ய தேவைப்படும் செயலாக்க சக்தியை வழங்கமுடியாது. ஆனால் பல ஸ்மார்ட்போன்களை ஒன்றாக பயன்படுத்தும் போது, சைபர் கிரிமினல்கள் எளிதாக கூட்டு செயலாக்க சக்தியை பயன்படுத்தி கொள்ள முடியும். மற்றும் பயனர்களுக்கு தெரியாமலேயே ஏராளமான கிரிப்டோஜேக்கர்கள் இதனை செய்து வருகின்றனர்.

மால்வேர்
கிரிப்டோஜேக்கர்கள் கிரிப்டோகரன்சியை உற்பத்தி செய்யும் வகையில், பயனர்களும் பாதிப்பில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்கள் சாதனத்தில் தீங்குவிளைவிக்கும் மால்வேர்கள் வர வழிவகுக்கின்றனர்.

ஆப்பிள் ஐஓஎஸ் vs கூகுள் இயங்குதளம்
கூகுள் இயங்குதளத்தை பயன்படுத்தும் சாதனங்கள் பாதுகாப்பற்றவையாக இருக்க காரணம், ஆப்பிள் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரை போல செயலிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் இல்லாததே.எனினும் தற்போது கூகுளும் ஆப்பிள் போன்று தனது கூகுள் ப்ளே ஸ்டாரில் கட்டுபாடுகள் விதிக்க துவங்கியதுடன், இனி தங்களது சாதனங்களில் கிரிப்டோகரன்சி உற்பத்தியை அனுமதிக்காது என டெவலப்பர்களுக்கு அறிவித்துள்ளது.

உங்கள் போனை நீங்கள் எவ்வாறு பாதுகாக்க முடியும்!
வல்லுநர்கள் தீங்குவிளைக்கும் மால்வேர்கள் எந்த செயலியில் உள்ளது என கூறுவது மிகவும் கடினமாக இருப்பதாக ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு பயனராக நீங்கள் எடுக்கும் சில நடவடிக்கைகள் மூலம் போனை பாதுகாக்கலாம் என்கின்றனர்.
*உங்கள் போனின் இயங்குதளம் மற்றும் செயலிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்.
*அதிகாரப்பூர்வ தளங்களில் (கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்) இருந்து மட்டுமே செயலிகளை இன்ஸ்டால் செய்யவும்.
*தெரியாத தளங்களில் இருந்து செயலிகளை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும்.

பாதுகாப்பை உறுதிப்படுத்த
*நீங்கள் பதிவிறக்கும் எந்தவொரு செயலியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அது எத்தனை முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதர பயனர்களின் மதிப்பீட்டையும் அறியவும்.
*உங்கள் போனில் உள்ள செயலிகளுக்கு தேவையற்ற அனுமதிகளை வழங்க வேண்டாம்.
கூடுதல் பாதுகாப்புக்காக உங்கள் இயங்குதளத்திற்கு பொருத்தமான வைரஸ் தடுப்பு மென்பொருளை(Anti virus) நீங்கள் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications