நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கிய இந்தியர்: இது எங்க போய் முடியுமோ?
அன்மையில் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சாதனையை இந்தியா முழுவதும் அதிகமாக கொண்டாடப்பட்டது, குறிப்பாக பல்வேறு நாடுகள் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தியதிற்கு பல பாரட்டுகளை தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 2
இதற்குமுன்பு செலுத்தப்பட்ட சந்திராயன் 1 விண்கலம், நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்தது. இதேபோல் சந்திரயான் 2 விண்கலமும் நிலவு பற்றிய பல அரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இருக்கிறது.

தொழிலதிபர் ராஜிவ் பாக்டி
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ராஜிவ் பாக்டி என்பவர் இனி நிலவில் பிக்னிக் செல்லலாம் என்று மிகவும் ஆனந்தத்துடன் தெரிவித்துள்ளார்,இவர் கடந்த 2003-ம் ஆண்டு 140-டாலர் கொடுத்து நிலவில் 5-ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதற்கான அமெரிக்காவில் உள்ள நிலவு நிலப்பதிவு அலுவலகத்தில் அத்தாட்சியும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5-ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன்
மேலும் தொழிலதிபர் ராஜீவ் பாக்டி கூறியது என்னவென்றால், சந்திரயான் 2 விண்கலம் புதிய சாதனை படைக்க உள்ளது, பின்பு நான் ஏற்கனவே நிலவில் மரே இம்பிரியம் என்ற இடத்தில் 5-ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன், எனவே விரைவில்
குடும்பத்துடன் நிலவுக்கு பிக்னிக் செல்வேன் என்று கூறினார்.

100நாடுகள் கையெழுத்து போட்டுள்ளது
ஆனால் 1979-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட விண்வெளி ஒப்பந்த அடிப்படையில், நிலவு உட்பட விண்வெளி பொருட்கள் மீது யாரும் உரிமை கொண்டாட முடியாது எனவும், பின்பு இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 100நாடுகள்
கையெழுத்து போட்டுள்ளது.

சட்டப்பூர்வமான எந்த ஒரு அதிகாரமும் கிடையாது
குறிப்பாக நிலவு போன்ற விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது என்பது அந்தந்த நாடுக்கு நன்மை அளிக்கும்படி இருக்க வேண்டும், பின்பு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சிட்டியில் உள்ள நிலவு நிலப்பதிவு என்பது முற்றிலும் அரசு அனுமதியுடன் செயல்படுகிறதா என்பதை கூறிவிட முடியாது. எனவே பல்வேறு நாடுகள் கையெழுத்திட்ட விண்வெளி ஒப்பந்த அடிப்படையில் நிலவில் நிலம் விற்கும் நிறுவனங்களுக்கு சட்டப்பூர்வமான எந்த ஒரு அதிகாரமும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications