மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இனப்பெருக்கம் செய்ய முடியுமா? விஞ்ஞானிகள் சொன்ன பதில் இது தான்..

|

மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இனப்பெருக்கம் செய்ய முடியுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் தற்பொழுது அதிகாரப்பூர்வமான பதிலை வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு மனிதர்களால் செவ்வாய் கிரகத்தில் இனப்பெருக்கம் செய்யச் சாத்தியமில்லை என்று கூறப்பட்டு வந்தது. இதை விஞ்ஞானிகள் பொய் என்று நிரூபித்துள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கண்டுபிடிப்பு

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கண்டுபிடிப்பு

ஏனெனில், மனிதனின் விந்தணுக்கள் செவ்வாய் கிரகத்தில் சுமார் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழச் சாத்தியம் உள்ளது என்று கூறியுள்ளனர். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ஆய்வின் முடிவு படி, மனிதர்களால் செவ்வாயில் இனப்பெருக்கம் செய்ய முடியும் என்று ஒரு அறிவியல் ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடிய விந்தணுக்கள்

சுமார் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடிய விந்தணுக்கள்

விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவலின் படி, விந்தணுக்கள் சிவப்பு கிரகத்தில் சுமார் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நம்புகின்றனர். இதற்கு முன்பு, ஆராய்ச்சியாளர்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று கூறிவந்தனர்.

குறிப்பாக விண்வெளியில் உள்ள கதிர்வீச்சு நமது மனித விந்தணுக்களில் உள்ள டி.என்.ஏ-வை அழித்துவிடும் என்று கூறியிருந்தனர்.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

விண்வெளியில் இனப்பெருக்கம் என்பது சாத்தியமற்றதா?

விண்வெளியில் இனப்பெருக்கம் என்பது சாத்தியமற்றதா?

இதனால், விண்வெளியில் இனப்பெருக்கம் என்பது சாத்தியமற்றது என்று கூறியிருந்தனர். இதனை, தற்பொழுது மாற்றி அமைக்க முடியும் என்று கூறி, செவ்வாய் கிரகத்தில் மனித இனப்பெருக்கம் சாத்தியமானது என்று கூறியுள்ளனர். ஏனெனில் விந்தணுக்கள் 200 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த கண்டுபிடிப்புகள் ஆறு வருடப் பரிசோதனையின் ஒரு பகுதியாகும்.

விண்வெளி கதிர்வீச்சு மனித டிஎன்ஏ-வை அழிக்கக்கூடியதா?

விண்வெளி கதிர்வீச்சு மனித டிஎன்ஏ-வை அழிக்கக்கூடியதா?

இதில் விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எலியின் விந்தணுக்களை வைத்து கதிர்வீச்சு சோதனை நடத்தியுள்ளனர். டெய்லி மெயில் அறிக்கையின் தகவல் படி, விண்வெளி மனித டிஎன்ஏ-வை அழிக்கக்கூடிய கதிர்வீச்சைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது மற்றும் இனப்பெருக்கம் செய்யச் சாத்தியமற்றது என்பதைக் கூறியிருந்தது. கதிர்வீச்சினால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்தும் மற்றொரு கவலையாக இருந்தது.

முதல் போனே இப்படியா? 1' இன்ச் அளவில் கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது தான்..முதல் போனே இப்படியா? 1' இன்ச் அளவில் கேமரா சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இது தான்..

புதிய ஆராய்ச்சி கருவுறுதலைப் பாதிக்கவில்லை

புதிய ஆராய்ச்சி கருவுறுதலைப் பாதிக்கவில்லை

ஆனால், தற்பொழுது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, விண்வெளி நிலையத்தில் சேமிக்கப்பட்ட எலியின் விந்து இன்னும் ஆரோக்கியமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அவர்கள் அதை பூமியில் உள்ள எக்ஸ்-ரே கதிர்களுக்கும் வெளிப்படுத்தினர் மற்றும் அது கருவுறுதலைப் பாதிக்கவில்லை என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் யமனாஷி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாயகா வாகயாமா, டெய்லி மெயிலிடம் சில தகவலைப் பகிர்ந்துள்ளார்.

மனிதகுலம் விண்வெளி யுகத்தில் முன்னேற வாய்ப்பு

மனிதகுலம் விண்வெளி யுகத்தில் முன்னேற வாய்ப்பு

அதில், "இந்த கண்டுபிடிப்புகள் மனிதகுலம் விண்வெளி யுகத்தில் முன்னேற மிக அவசியமானது என்று அவர் கூறியுள்ளார். பிற கிரகங்களுக்கு இடம்பெயர வேண்டிய நேரம் வரும்போது, ​​மனிதர்களுக்கு மட்டுமல்ல, செல்லப்பிராணிகளுக்கும், வீட்டு விலங்குகளுக்கும் மரபணு வளங்களின் பன்முகத்தன்மையை நாம் பராமரிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறியிருக்கிறர். இதன் மூலம் மனிதர்களின் இனப்பெருக்கம் வெற்றிகரமாக வேற்றுக்கிரகத்தில் நடக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Humans will be able to reproduce on Mars because sperm can survive there for up to 200 years : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X