பெங்களூரில் துவக்கப்பட்ட இஸ்ரோ மனித விண்வெளி விமான மையம்.!

மாநில இஸ்ரோ அமைச்சகம் நேற்று பெங்களூர் இல் புதிய மனித விண்வெளி விமான மையத்தை அறிமுகம் செய்துள்ளது.

|

மாநில இஸ்ரோ அமைச்சகம் நேற்று பெங்களூர் இல் புதிய மனித விண்வெளி விமான மையத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மனித விண்வெளி விமான மையம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ வின் தலைமை அமைச்சகம் அருகில் நிறுவப்பட்டுள்ளது.

மனித விண்வெளி விமான மையம்

மனித விண்வெளி விமான மையம்

தற்பொழுது இந்த மனித விண்வெளி விமான மையம் இயங்கத் துவங்கியுள்ளதாக தந்து டிவிட்டர் பக்கத்தில் மாநில இஸ்ரோ அமைச்சகம் டிவீட் செய்துள்ளது. இந்த மையம் மனித விண்வெளி பயணங்கள் குறித்த முக்கியமான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.கஸ்தூரிரங்கன் & கே.சிவன் தலைமையில்

கே.கஸ்தூரிரங்கன் & கே.சிவன் தலைமையில்

முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மற்றும் தற்போதைய இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஆகியோரால் இந்த மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர் தலைமையில் இயக்கபடும் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 20, 2020

டிசம்பர் 20, 2020

2020 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதிக்குள், இஸ்ரோ தனது ககனானியன் மிஷன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் என்று அறிவித்துள்ளது. அதற்கான இலக்கை இப்பொழுதே துவங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு அளவிலான ககனானியன் குழு மாதிரியை மையத்தில் வெளியிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்

வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்

10,000 கோடி ரூபாய் மதிப்பில் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் இத்திட்டத்தின் முதல் நிலை தற்பொழுது துவங்கியுள்ளது. பூமியில் இருந்து சுமார் 350-400 கி.மீ. உயரத்தில் விண்வெளியில் பயணம் மற்றும் குறைந்தது ஒரு வாரம் கிரகத்தை சுற்றி சுற்றுப்பாதையில் வீரர்கள் பயணம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2021

ஜூலை 2021

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2020 ஆம் ஆண்டில் விண்வெளியில் மனிதர்கள் அனுப்புவதற்கு முன் முதல் ஆளில்லா விமான மிஷனை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 2021 முன் விண்வெளியில் மனிதர்களை அனுப்புவதற்கும் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Human Space Flight Centre at the ISRO headquarters in Bengaluru : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X