விண்வெளியில் இருந்து படம்பிடிக்கப்பட்ட 2000மைல் நீளமுள்ள ஏலியன் விண்கலம்! அதிர்ச்சி வீடியோ.!

மிகப்பெரிய மர்ம பறக்கும் பொருளின்(UFO) சில புகைப்படங்களை இவர் காண்பித்தார்.

|

அமெரிக்க இராணுவத்தில் காமாண்டு சார்ஜெண்ட் மேஜராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாப் டேன். இவர் சுமார் 28 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அமெரிக்க இராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு நபரை நம்பிக்கைக்குரியவராக கருதலாம் அல்லவா.

விண்வெளியில் 2000மைல் நீளமுள்ள ஏலியன் விண்கலம்! அதிர்ச்சி வீடியோ...

மிகப்பெரிய மர்ம பறக்கும் பொருளின்(UFO) சில புகைப்படங்களை இவர் காண்பித்தார். அது சுமார் 2000மைல் நீளமுடையதாக இருந்தது. இந்த ஏலியன் விண்கலமானது 80களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இது நகைப்பிற்குரியதாக உங்களுக்கு தெரியலாம். ஆனால் இதே ஏலியன் மர்ம பறக்கும் பொருள் பற்றிய தகவல்கள் இரஷ்ய விண்வெளி திட்டத்தின் இரகசிய ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இதே மர்ம பறக்கும் பொருளானது மூன்றாவது முறையாக 2009ல் தென்பட்டது என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த பாப், அதை காசினி விண்கலத்தில் இருந்து புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் 2000மைல் நீளமுள்ள ஏலியன் விண்கலம்! அதிர்ச்சி வீடியோ...

ஒரு விதமான ஆற்றலை பயன்படுத்தும் அந்த விண்கலமானது, சில வகையான நுண்ணறிவின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

அந்த ஏலியன் விண்கலத்தின் நீளம் சுமார் 2000மைல்கள் என்வும், சுற்றளவு 500மைல்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

விண்வெளியில் 2000மைல் நீளமுள்ள ஏலியன் விண்கலம்! அதிர்ச்சி வீடியோ...

அந்த பிரம்மாண்டமான ஏலியன் விண்கலம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ.

பறக்கும் தட்டுகள் பற்றிய ரஷ்யாவின் மர்ம தொகுப்புகள் - வீடியோக்கள்

பறக்கும் தட்டுகள் பற்றிய ரஷ்யாவின் மர்ம தொகுப்புகள் - வீடியோக்கள்

வேற்றுகிரகவாசிகள் சமூகம் பற்றி பல தசாப்தங்களாக இரஷ்யாவுக்கு தெரியும் என பல ஆண்டுகளாக பல்வேறு வதந்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

சாம்பல் நிற ஏலியன்களுடனான ரஷ்யாவின் முதல் தொடர்பு 1942ல் நடைபெற்றது என கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பரஸ்பர பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தொடர் தூதரக பயணங்கள் மேற்கொள்ள திட்டமிட்டதாகவும், அதற்காக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டதாகவும் இரஷ்ய ஆவணங்களில் கூறப்படுகிறது.

ரஷ்ய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது

ரஷ்ய மொழியில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது

அந்த ஆவணங்களில் படி, 1961ல் நடைபெற்ற சம்பவத்தில், ராணுவ தள அலுவலர்கள் ஒப்பந்தத்தை மீறி 3 ஏலியன்களின் (என்ட்டிக்கள்) வருகை , அது போது அவர்களுக்கே தெரியாமல் இரகசிய கேமராக்களில் பதிவானதை அவர்கள் கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது.23/04 ஒப்பந்தத்தின் படி இரகசிய சந்திப்புகளை வீடியோ/புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

1969ல், ஸ்வெர்ட்லவ்ஸ்கி மாகாணத்தில் மர்ம பறக்கும் தட்டு விபத்திற்குள்ளான போது, இரஷ்ய இராணுவம் அதை கையப்படுத்தியது. அந்த மீட்பு பணியை பறக்கும் தட்டுக்கு அருகிலிருந்து காண்பிக்கிறது ஒரு வீடியோ.விபத்திற்குள்ளான அந்த பறக்கும் தட்டில் இறந்த ஏலியன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பறக்கும் தட்டின் இடிபாடுகள் இரஷ்யாவில் உள்ள மிக பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துசெல்லப்பட்டு ஆராயப்பட்டது மற்றும் ஏலியனுக்கு பிரதேபரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

டிஎன்டி ஸ்பெசலில்

டிஎன்டி ஸ்பெசலில்

இந்த சம்பவங்கள் அனைத்தும் டிஎன்டி ஸ்பெசலில் "இரஷ்ய பாதுகாப்பு குழுவின் பறக்கும் தட்டுகள் பற்றிய இரகசிய ஆவணங்கள்" என்ற பெயரில் ஒளிபரப்பப்பட்டது.இதில் பல்வேறு புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

இரஷ்யா

இரஷ்யா

உண்மை என்னவெனில், இரஷ்யாவில் நடைபெறும் மர்மமான மற்றும் விவரிக்க இயலாத சம்பவங்களை பற்றிய அனைத்துவித தகவல்களையும் சேகரித்து கண்காணிக்க, ஒரு சிறப்பு பிரிவை இரஷ்ய பாதுகாப்பு அமைப்பு உருவாக்கியதாக கூறப்படுகிறது.

ப்ரேலாண்டினியா

ப்ரேலாண்டினியா

10 ஆகஸ்ட் 1989 அன்று ரஷ்யாவின் ப்ரேலாண்டினியா நகருக்கு அருகில், மர்ம பறக்கும் தட்டு விபத்திற்குள்ளான அல்லது சுட்டு வீழ்த்தப்பட்ட போது, சோவியத் இராணுவத்தின் ரோடாரில் அந்த மர்ம பறக்கும் பொருள் கண்டறியப்பட்டு, அதனுடன் ஆயுததொடர்பு மேற்கொண்ட இரஷ்யாவின் முயற்சிகள் தோல்வியடைந்ததற்கான ஆதாரப்பூர்வ ஆவணங்கள் உள்ளன. அந்த பறக்கும் தட்டு "ஆபத்தானது" என மதிப்பீடு செய்யப்பட்டு, உடனடியாக பாதுகாப்பு துறையை எச்சரித்து, பின்னர் MIG-25 அனுப்பப்பட்டது.

மீட்பு குழுவினர்

பறக்கும் தட்டின் வெளிப்புறம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு சேதமடைந்திருந்தது. மீட்பு குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு அங்கு சென்றனர். ஹெலிகாப்டர் மூலம் அந்த பறக்கும் தட்டு மோஷ்டாக் விமானதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இரஷ்ய வீரர்கள் அதனுள் நுழைந்து ஆராயும் போது இரு ஏலியன் சடலங்கள் மற்றும் ஒரு உயிருள்ள ஏலியனும் இருந்தன. அதனை காப்பாற்ற மருத்துவர் குழு போராடி தோற்றது.

90-120 சென்டிமீட்டர்

90-120 சென்டிமீட்டர்

அந்த மூன்று உயிரினங்களும் 90-120 சென்டிமீட்டர் உயரத்தில், சாம்பல் நிற உடை அணிந்திருந்தன.அவற்றின் தோல் நீல-பச்சை நிறத்தில் இருந்தது மற்றும் முடி,பெரிய கருப்பு கண்கள், பாதுகாப்பு தொப்பியும் இருந்தன.

இரஷ்ய ஆராய்ச்சியாளர்கள்

இரஷ்ய ஆராய்ச்சியாளர்கள்

இரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் இந்த உடல்கள் கண்ணாடி பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு, கபுஸ்டன்யார் எனும் விண்வெளி தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக மூன்று இரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லை என்பதே நிதர்சனம்.

Best Mobiles in India

English summary
huge-ufo-with-the-size-of-a-country-2000-miles-was-filmed-in-space: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X