கேலக்ஸி உருவானது எப்படி? களமிறங்கும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்...

இந்த அபெல்370 அண்டவெளியானது பூமியிலிருந்து 4பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில், ஃசீ மான்ஸ்டர் என்னும் விண்மீன் கூட்டத்தில் உள்ளது.

|

பிரபஞ்சம் உருவானது போது எப்படி அண்டவெளிகள் பிரிந்தன மற்றும் எந்த சூழ்நிலையில் அவை உருவாகின என்பதை வானியல் ஆராய்ச்சியாளர்கள் புரிந்துகொள்ள உதவியாக புதிய பிரச்சாரத்தில் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க விண்வெளி அமைப்பு கூறியுள்ளது.

கேலக்ஸி உருவானது எப்படி? களமிறங்கும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்...

தீவிர ஆழ எல்லைப்புற பகுதிக்கு அப்பால் மற்றும் மரபு கூர்நோக்கல்(Beyond Ultra-deep Frontier Fields And Legacy Observations -BUFFALO) என அழைக்கப்படும் இந்த புதிய கூர்நோக்கு பிரச்சாரம், பெருவெடிப்பிக்கு பின்னர் 800மில்லியன் ஆண்டுகளுக்கு குறைவாக 6 மிகப்பெரிய அண்டவெளி தொகுப்புகள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களை கண்காணிக்கும் என்கிறது நாசா.

அபெல் 370(Abell370) என்ற அண்டவெளி தொகுப்பு முதலில் ஆராயப்படவுள்ளது.

ஹப்பிளின் முதற்கட்ட ஆய்வுகள், அபெல்370 அண்டவெளி தொகுப்பு மற்றும் பெருமளவிலான, அதிக ஈர்ப்புவிசையுடைய அண்டவெளிகள் பெருந்திரளாக உள்ளதை காட்டுகிறது.

இந்த அபெல்370 அண்டவெளியானது பூமியிலிருந்து 4பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில், ஃசீ மான்ஸ்டர் என்னும் விண்மீன் கூட்டத்தில் உள்ளது.

இந்த ஆறு எல்லைப்புற அண்டவெளி தொகுப்புகளை ஆராயும் பொருட்டு, 101 ஹப்பிள் சுற்றுவட்டப்பாதையில்,160மணி நேரத்தை ஆய்விற்காக செலவிடப்பட்டுள்ளது.

இந்த பப்பெளோ சர்வேயில் இதே அண்டவெளி தொகுப்புகள் உள்ள பகுதியில் ஆய்வு நடத்திய மற்ற ஸ்பேஸ் டெலஸ்கோப் தரவுகளையும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தரவுதொகுப்புகள் முதல் அண்டவெளிகளை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்படும்.

எப்படி இந்த பெரிய மற்றும் பிரகாசமான கேலக்ஸிகள் உருவாகின, எப்படி இவை இருண்ட விசயத்துடன் தொடர்புடையது,எப்படி இந்த அண்டதொகுப்புகள் அதன் உள்ளும் புறமும் ஆதிக்கம் செலுத்துகின்றன போன்றவற்றில் புதிய பார்வையை இந்த சர்வே வழங்கும் என வானியல் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் இந்த சர்வே மூலம் தொலைதூர கேலக்ஸி மற்றும் சூப்பர்நோவாக்களின் புகைப்படங்கள் கண்டறிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

கேலக்ஸி உருவானது எப்படி? களமிறங்கும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்...

பெருவெடிப்பிற்கு பின்னர் எப்படி விரைவாக 800மில்லியன் ஆண்டுகளுக்கு குறைவாக அண்டவெளிகள் உருவாகின என்பதை கண்டறிவதன் மூலம் வானியல் ஆய்வாளர்கள், நாசாவின் அடுத்த படைப்பான இன்ப்ராரெட் விஷன் கொண்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்-ன் யுக்திகளை வடிவமைக்கமுடியும்.

நெய்ல்ஸ் போஃர் இன்ஸ்டியூட், டென்மார்க் மற்றும் யூ.கே வின் டர்ஹேம் பல்கலைகழக வானியல் ஆய்வாளர்களால் இந்த பப்பெளோ திட்டம் நடத்தப்பட்டது. இக்குழுவில் 13 நாடுகளைச் சேர்ந்த 100 சர்வதேச வானியலாளர்கள் இடம்பெற்றனர்.

Best Mobiles in India

English summary
Hubble Space Telescopes New Observing Campaign Is Aimed at Early Galaxy Formations : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X