நாசாவிற்கு மாபெரும் இழப்பு; ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஷட் டவுன்!

இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் மிக நுட்பமான மேம்பட்ட கேமராவை கொண்ட ஒரு தொலைநோக்கி ஆகும்.

|

விண்வெளியின் தொலைதூர எல்லைகளை தொட்டுப்பார்க்கும் ஒரு விண்வெளி தொலைநோக்கி தான் - ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப். இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் மிக நுட்பமான மேம்பட்ட கேமராவை கொண்ட ஒரு தொலைநோக்கி ஆகும்.

 ஹப்பிள் டெலஸ்க்கோப்பில் கோளாறு; நாசாவின் கனவுகள் கலையுமா?

இது சமீபத்தில் ஒரு வன்பொருள் சிக்கலை எதிர்கொண்டது, அதனை தொடர்ந்து, "ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் அட்வான்ஸ்டு கேமரா ஆனது ஷட் டவுன் செய்யப்பட்டது" என்கிற விவரத்தை நாசா கூறியது.

 அப்போது ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் அவ்வளவு தானா?

அப்போது ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் அவ்வளவு தானா?

இல்லை. ஹப்பிள் தொலைநோக்கி ஆனது மீதமிருக்கும் அதன் மூன்று செயலிகளின் உதவியின் கீழ் அறிவியல் கண்காணிப்புகளை தொடரும். இந்த இடத்தில "அதன் வைட் பீல்ட் கேமரா 3 ஆனது ஒழுங்கீனமாக உள்ளது. அது ஆராயப்படுகிறது" என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்ததும், ஹப்பிள் தொலைநோக்கியில் உள்ள வைட் பீல்ட் கேமரா 3 ஆனது கடந்த 2009 ஆம் ஆண்டில் ஸ்பேஸ் வால்கர்ஸ் பணிக்குழுவின் மூலம் பொருத்தப்பட்ட ஒரு கேமரா ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பழுதுகள் பார்க்க முடியாதா?

பழுதுகள் பார்க்க முடியாதா?

இந்த கருவியை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதிலும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய மின்னணு சாதனங்களை மீண்டும் கேமராவுடன் இணைக்க வேண்டும் என்பதிலும் நாசா உறுதியாக உள்ளது. பிரபஞ்சத்தின் அடர்ந்த எல்லைகளை தொட்டுப்பார்க்கும் பார்வையை வழங்கும் இந்த ஹப்பிள் தொலைநோக்கி தான், விண்வெளியில் வைக்கப்பட்ட முதல் பெரிய ஆப்டிகல் தொலைநோக்கி ஆகும்.

எப்போது செலுத்தப்பட்டது?

எப்போது செலுத்தப்பட்டது?

இது கடந்த 1990 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் வெற்றியும் புகைப்படங்களும் தான், நம் பூமி வாழும் இந்த பிரபஞ்சம் ஆனது பரந்து விரிந்த ஒன்று என்கிற கோட்பாட்டை உறுதிப்படுத்தியது. கிரகங்கள் அனைத்தும் உருவாக ஆதிபுள்ளியாக இருந்த பிக் பேங் தியரிக்கு நம்பகத்தன்மையை வழங்கியது.

நோக்கங்கள் பற்றி?

நோக்கங்கள் பற்றி?

செலுத்தப்பட்ட அதே 1990 ஆம் ஆண்டிலேயே அதன் பணி துவங்கியது. அன்று முதல் இன்று வரையிலாக ஹப்பிள் தொலைநோக்கி ஆனது சுமார் 1.3 மில்லியனுக்கும் மேலான ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளது. இது பூமியை சுற்றிக் கொண்டே தொலைதூர நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன்களின் படங்களை எடுத்து தள்ளியது. ஹப்பிள் தொலைநோக்கி வழியாக கிடைத்துள்ள தகவல்களை (தரவுகளை) பயன்படுத்தி வானியலாளர்கள் 15,000 க்கும் அதிகமான ஆய்வு காகிதங்களை வெளியிட்டு உள்ளனர் என்பதால், இதுவரை கட்டப்பட்ட மிகவும் பயனுள்ள அறிவியல் கருவிகளில் இதுவும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வேற்று கிரங்களை கண்டுபிடிக்குமா?

வேற்று கிரங்களை கண்டுபிடிக்குமா?

இதற்கிடையில் வேற்று கிரக வேட்டை நடத்தும் ஹப்பிள் தொலைநோக்கி ஆனது, நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அது பூமியில் இருட்னது சுமார் 53 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள குள்ள நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டு உள்ளதாம். இது கடந்த வருட ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது புதிய கிரகமாகும். இந்த கிரகத்தின் இருப்பான் நாசாவின் டெஸ் (டிரான்சிங் எக்ஸ்போபான்நெட் சர்வே சேட்டிலைட் - TESS) மூலமாக உறுதிப்படுத்தப்பட்டது.

ஹப்பிளின் உருவாக்கம் மற்றும் பெயர் காரணம்!

ஹப்பிளின் உருவாக்கம் மற்றும் பெயர் காரணம்!

ஹப்பிள் தொலைநோக்கியின் உருவாக்கம் ஆனது சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்தது. சரியாக கூற வேண்டும் என்றால் இதன் பணிகள் 1946 ஆம் ஆண்டு துவங்கியது. ஹப்பிள் எனும் பெயர் காரணத்திற்கு, அமெரிக்க வானியல் நிபுணர் ஆன எட்வின் ஹப்பல் [பொறுப்பு ஆகிறார். இவரின் ஆராய்ச்சிகள் தான் பிரபஞ்சத்தின் மீதான ஆழமான பார்வைகளை மனித குலத்திற்கு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்திலேயே அடி வாங்கிய ஹப்பிள்!

ஆரம்பத்திலேயே அடி வாங்கிய ஹப்பிள்!

1986ஆம் ஆண்டு, புறப்படும் நேரத்தில் நாசாவின் சாலஞ்சர் விண்கலம் வெடித்து சிதறி ஏழு விண்வெளி வீரர்கள் உயிர் இழந்த காரணத்தினால், புதிதாக உருவாக்கப்பட்ட ஹப்பிள் திட்டம் ஒரு பெரிய பின்னடைவை பெற்றது. பின் அதன் போக்குவரத்து மற்றும் பராமரிப்புக்கான துல்லியமான திட்டங்கள் நிகழ்த்தப்பட்ட பின்னரே வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

Best Mobiles in India

English summary
Hubble Space Telescopes most advanced camera shut down NASA: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X