மீண்டும் அதிரடிக்கு தயாராகும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்.!

அனைத்து கோளாறுகளும் சரிசெய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் வகையில் மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளது திட்டகுழு.

|

நாசாவின் பிரபல ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப், சிறு கோளாறால் இரண்டு வாரங்களுக்கு மேல் செயல்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அந்த கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டுவந்துள்ளது.

மீண்டும் அதிரடிக்கு தயாராகும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்.!

கடந்த அக்டோபர் 5ம் தேதி அன்று, ஹப்பிள் தொலைநோக்கியின் திசையை நிர்ணயிக்க உதவும் கைரோஸ்கோப்பில் ஒன்று பழுதடைந்ததன் காரணமாக, ஹப்பிள் தொலைநோக்கி பாதுகாப்பான 'ஃசேப் மோட்'க்கு சென்றது. திட்ட உறுப்பினர்கள் மாற்று கைரோஸ்கோப்பை பொருத்தியநிலையிலும், அது சரியாக செயல்படாமல் முரண்பாடான கணக்கீடுகளை அளித்தது.

எனினும் கடந்த வாரம் நடைபெற்ற பல்வேறு சரிசெய்தல் செயல்பாடுகளுக்கு பிறகு பால்கி கைரோஸ்கோப் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக நாசா அதிகாரிகள் அக்டோபர் 22 அறிவித்துள்ளனர். அனைத்து கோளாறுகளும் சரிசெய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் வகையில் மேலும் சில பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளது திட்டகுழு.

மீண்டும் அதிரடிக்கு தயாராகும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்.!

"இலக்குகளை நோக்கி நகர்த்துதல், இலக்குகளை நிர்ணயித்தல் மற்றும் துல்லியமான புள்ளிகளை கண்டறிதல்" உள்ளிட்ட வழக்கமான அறிவியல் சோதனைகளை மேற்கொள்ளும் போது சந்திக்கும் சூழ்நிலைகளில், கைரோஸ்கோப்பின் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் தொடர் பரிசோதனைகளை செய்ய ஹப்பிள் செயல்பாட்டு குழு திட்டமிட்டுள்ளது. இந்த பொறியியல் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், ஹப்பிள் டெல்ஸ்கோப் தனது சாதாரண அறிவியல் செயல்பாடுகளுக்கு திரும்பும் என நாசா அறிவித்துள்ளது.

ஹப்பிள் தொலைநோக்கியில் மொத்தமாக 6 கைரோஸ்கோப்கள் உள்ளநிலையில், அவையனைத்தும் 2009 மே மாதம் விண்வெளியில் நடக்கும் விண்வெளி வீரர்களால் மாற்றப்பட்டன.ஒவ்வொரு உள்ள கைரோவிலும் உள்ள சக்கரம், நிமிடத்திற்கு 19,200 சுற்றுகள் என்ற வீதத்தில் முழுவுதும் மூடப்பட்ட உருளையின் உள்ளே நிலையாக சுற்றி வருகின்றன. அந்த உருளையானது அடர்த்தியான திரவத்தில் மிதந்து வருகிறது.

மீண்டும் அதிரடிக்கு தயாராகும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்.!

"இந்த கைரோவில் இரு வகைகள் உள்ளன - உயர் மற்றும் தாழ்வு. இதில் ஹை மோட் என்னும் கரடுமுரடான மோட்-ஐ பயன்படுத்தி, விண்கலம் விண்ணில் ஒரு இலக்கிலிருந்து மற்றொன்றுக்கு திரும்பும் போது ஏற்படும் அதிக சுழல் விகிதத்தை கணக்கிடமுடியும். லோ மோட்-ஐ பயன்படுத்தி விண்கலம் இலக்கில் லாக் செய்த பின்னர் நிலையாக இருக்கும் போது குறைவான சுழல் வேகத்தை கணக்கிடமுடியும்" என்கின்றனர் நாசா அதிகாரிகள்.

அக்டோபர்5ல் ஏற்பட்ட கோளாறின் காரணமாக, ஹப்பிளின் 3 கைரோக்கள் செயலிழந்தன. திட்ட குழுவினர் செயல்பாட்டிற்கு கொண்டுவர நினைக்கும் மாற்று கைரோ, கடந்த 7.5 ஆண்டுகளாக முடங்கியிருந்தது. ஆகையால் இந்த மாற்று கைரோ அசாதாரணமான வகையில் அதிக சுழல் விகதங்களை காண்பித்தது.

கடந்த அக்டோபர் 16 அன்று மாற்று கைரோ ரீஸ்டார்ட் செய்யப்பட்ட நிலையிலும், அது சொல்லிக்கொள்ளும் வகையில் செயல்படவில்லை. இரண்டு நாட்கள் கழித்து, டெலஸ்கோப்பை பலமுறை எதிர்திசைகளில் திருப்ப கட்டளைகள் வழங்கி, அடைப்புகளை நீக்கிய பின்னர் மாற்று கைரோ அக்டோபர் 18 முதல் ஓரளவிற்கு செயல்பட்டு சரியான கணக்கீடுகளை வழங்கியது.

மீண்டும் அதிரடிக்கு தயாராகும் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்.!

அக்டோபர் 19ம் தேதியன்று, ஹப்பிள் தொலைநோக்கி கூடுதல் செயல்பாடுகள் மற்றும் மோட் மாற்றம் செய்யும் வகையில் கட்டளைகளை வழங்கினர். அதன் பின்னர் அனைத்து கோளாறுகளும் சரிசெய்யப்பட்டன. தற்போது ஹை மற்றும் லோ என இரு மோட்களிலும் ஹப்பிள் சிறப்பாக செயல்படுவதாக நாசா அறிவித்துள்ளது.
Best Mobiles in India

English summary
Hubble Space Telescope Nearly Ready for Action Again: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X