ஹப்பிள் தொலைநோக்கி மூலம் 163,000 ஒளி தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரம்

|

விண்மீன் திரள்களுக்கு அருகிலும் தொலைவிலும் உள்ள விண்வெளிப் பொருட்களில் இருந்து வெடிக்கும் சூப்பர் நோவாக்கள் மற்றும் இருண்ட விஷயங்கள் வரை, அதன் ஒவ்வொரு செயலும் நம்மை மூச்சடைக்கும் வகையில் ஆச்சரியம் அளித்து வருகிறது. மேலும் மனிதகுலம் இத்ற்கெல்லாம் தொலைநோக்கிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

வெவ்வேறு அம்சங்களைக்

இருப்பினும், ஒரு தொலைநோக்கி நமது பிரபஞ்சத்தின் வெவ்வேறு அம்சங்களைக் காட்டுவதில் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளது. ஹப்பிள் தொலைநோக்கி உருவாகி தற்போது 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுதான் உண்மையில் பிரபஞ்சத்தின் பல விஷயங்களை நமக்க்கு வெளிக்காட்டியுள்ளது.

வெகு தொலைவில்

நமது பால்வீதியில் இருந்து வெகு தொலைவில் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு நட்சத்திர உருவாக்கம் பற்றிய படத்தை நமக்கு அளித்துள்ளது. அதாவது சுமார் 163,000 ஒளி தூரம். பூமியிலிருந்து பல ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு பெரிய பொருள் நெபுலா என்ஜிசி 2014 என்பதும், அதற்கு நெருக்கமான சிறிய நீல நிற என்ஜிசி 2020 என்பதையும் நமக்கு காண்பித்துள்ளது. இருப்பினும், வானியலாளர்கள் இதற்கு 'காஸ்மிக் ரீஃப்' என்று செல்லப்பெயர் சூட்டியுள்ளனர். இது கிட்டத்தட்ட நமது பூமியின் கடலுக்கு அடியில் உள்ள உலகம் போன்றே இருக்கும்.

TikTok காதலனை காண தஞ்சையிலிருந்து மதுரை நடந்து வந்த ஒருதலை காதலி! கடுப்பான நெட்டிசன்ஸ்!TikTok காதலனை காண தஞ்சையிலிருந்து மதுரை நடந்து வந்த ஒருதலை காதலி! கடுப்பான நெட்டிசன்ஸ்!

படத்தின்படி தனித்தனி

இந்த இரண்டும் படத்தின்படி தனித்தனி உலகங்கள் போலத் தோன்றினாலும், உண்மையில் அவை ஒரே ஒரு மாபெரும் நட்சத்திர உருவாக்கம் தான். ஈஎஸ்ஏ கூற்றின்படி "என்ஜிசி 2014ன் மையப்பகுதி என்பது ஒரு பிரகாசமான, கனமான நட்சத்திரங்களின் தொகுப்பாகும். இந்த பிரகாசம் ஹைட்ரஜன் வாயு மற்றும் அதில் உள்ள தூசி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.. நட்சத்திரக் கிளஸ்டரிலிருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை ஒளிரச் செய்கிறது.

தொலைநோக்கி ஏப்ரல் 24,

இந்த அதிசயம் மிக்க தொலைநோக்கி ஏப்ரல் 24, 1990 அன்று விண்வெளி விண்கலம் கண்டுபிடிப்பில் அறியப்படாத பரந்த அளவை கண்டுபிடிக்க உதவியது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் படி இந்த தொலைநோக்கியால் தான் வானியலில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்று கூறினால் அது மிகையாகாது

ஹப்பிள் தொலைநோக்கி

இந்த 30 ஆண்டுகளில், ஹப்பிள் தொலைநோக்கி பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்து வருகிறது, இது ஈசா மற்றும் நாசாவுக்கும் உதவி செய்கிறது. 1.4 மில்லியன் கணிப்புகளையும் 17,000 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கும் இந்த தொலைநோக்கி தான் வழிவகுத்தது.

 ESA ஒரு அறிக்கையில்

இதுகுறித்து ESA ஒரு அறிக்கையில் கூறியபோது, ‘இது விண்வெளி வரலாற்றில் மிகச் சிறந்த விண்வெளி ஆய்வகங்களில் ஒன்று என்றும், அதன் துல்லிய தரவு வருங்கால தலைமுறைகளுக்கு வானியல் ஆராய்ச்சியைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Hubble Space Telescope Discovered A New Born Star At 163,000 Light Years Away: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X