டெலிபோர்ட் தொழில்நுட்பத்தின் மூலமாக வெற்றிகரமாக அனுப்பப்பட்ட படைவீரர்கள் குழு!
இதன் மூலம் ஒரு பொருள் ஒர் இடத்தில் இருந்து தொலைவில் உள்ள மற்றொரு இடத்திற்குக் கடத்தப்படும். இங்கு பருப்பொருள் (matter) மற்றொரு வடிவமாக மாற்றப்பட்டுக் கடத்தப் படுகிறது.
அமெரிக்காவின் பாதுகாப்புப் படைத் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள், தொலைப் பதிவிப் போக்குவரத்து – teleportation - தொழில் நுட்பத்தின் மூலமாக, முழுமையான பாதுகாப்பு ஆடை மற்றும் ஆயுதங்களுடன் கூடிய படை வீரர்களின் குழுவினை அமெரிக்காவின் மசாசூட் நகரில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்திலிருந்து ஜெர்மனியில் அமைந்துள்ள பயிற்சி மையத்துக்கு அனுப்பிச் சாதனை படைத்துள்ளனர்.

இந்தத் அறிவியல் தொழில் நுட்பச் சாதனையை 08.12.2018 ஆம் தேதி நிகழ்த்தியுள்ளனர். இந்தத் தகவலை அமெரிக்காவைச் சேர்ந்த நாடிக் படைவீரர் தொழில்நுட்ப மையம் Natick Soldier Systems Center (NSSC) தெரிவித்துள்ளது.

ஐன்ஸ்டின்
தொலைப் பதிவிப் போக்குவரத்து அதாவது Teleportation என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உருவாக்கிய புகழ்ப் பெற்ற இயற்பியல் சூத்திரமான E = mc² என்னும் வாய்ப்பாட்டின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும்.

பருப்பொருள்
இதன் மூலம் ஒரு பொருள் ஒர் இடத்தில் இருந்து தொலைவில் உள்ள மற்றொரு இடத்திற்குக் கடத்தப்படும். இங்கு பருப்பொருள் (matter) மற்றொரு வடிவமாக மாற்றப்பட்டுக் கடத்தப் படுகிறது. அதாவது அந்தப் பொருள் ஆற்றலாக (energy) மாற்றப்படுகிறது. இந்தப் பொருள் இயற்பியல் ரீதியாக இடைப்பட்ட தூரத்தைக் கடப்பதில்லை. பிறகு அந்த ஆற்றல் பிறிதொரு இடத்தில் ஒருங்கிணைக்கப்படும்.

அறிவியல் கதை
இங்கு விவரிக்கப்பட்ட மற்றும் அறிவியல் கதைகளில் சொல்லப்பட்ட தொலைப் பதிவிப் போக்குவரத்துக்கும் (teleportation) அக்குவம் தொலைப் பதிவிப் போக்குவரத்துக்கு (quantum teleportation) தொடர்பு இல்லை. குவாண்டம் டெலிடிரான்ஸ்போர்ட் என்பது தரவுப் போக்குவரத்தைக் (information transport) குறிப்பதற்காகக் குவாண்டம் இயற்பியலில் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமான கலைச் சொல்லாகும்.

தொலைப் போக்குவரத்து
தொலைப் போக்குவரத்து (teleportation) நுட்பத்தை மையமாகக் கொண்டு நிறைய ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1966 ஆம் ஆண்டு வெளிவந்த "Star Trek" திரைப்படம் அவற்றுள் முக்கியமானது. இந்தப் படம் பல பாகங்களாகத் தொடர்ந்து வெளிடப்பட்டது. இப்படம் ஜேன் ரோடன்பெரி (Gene Roddenberry) என்பவர் எழுதிய கதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத் தொடர் எடுக்கப்பட்டது. இப்படத்தில் இடம் பெற்ற முக்கியப் பாத்திரங்கள் அனைவரும் தங்களுடைய கப்பலில் இருந்து தரைப்பகுதிக்கும், பிற கப்பலுக்கும் செல்வதற்கு இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த நுட்பத்தினை இப்படத்திற்கு முன்னர், 1958 ஆம் ஆண்டு ஜார்ஜ் லேங்லான் (George Langelaan) என்பவர் எழுதிய கதையை மையமாக வைத்து வெளிவந்த "A Mosca " என்னும் திரைப்படத்திலும் பயன்படுத்தியிருப்பர்.
வீடியோக்கள்
தொலைப் போக்குவரத்து (teleportation) மூலமாகத் திடீரென ஆட்கள் தோன்றுவது, மறைவது, கார் போன்ற வாகனங்கள் தோன்றி மறைவது போன்ற வீடியோக்கள் யூடியூப்பில் அதிகமாக உலா வருகின்றன. ஆனால் இவையெல்லாம் உண்மையாகவே நிகழ்ந்தவைகளா அல்லது வீடியோ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட போலியான பதிவுகளா என்பது குறித்துப் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் அமெரிக்க பாதுகாப்புத் துறை விஞ்ஞானிகள் இந்தத் தொலைப் பதிவிப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்தி படைவீரர்கன் குழுவை ஜெர்மனி பயிற்சி மையத்திற்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








