Home
Scitech

கொலைகார விண்கற்களிடம் இருந்து பூமியை எப்படி காக்கப் போகிறோம்?

1998ல் இதுபோன்ற விண்கற்களை கண்டறியும் பொறுப்பு நாசாவிடம் வழங்கப்பட்டு, 2005ல் கோரிக்கைகள் விரிவாக்கப்பட்டன.

விண்வெளியில் இருந்து விழும் அனைத்தை கண்டும் நாம் பயப்பட தேவையில்லை. உண்மையில் பல டன் விண்கற்கள் தினமும் மழையாக பொழிகின்றன. ஆனால் அவையாவும் மிகச்சிறிய அளவிலான துகள்கள் மற்றும் தூசு வடிவில் உள்ளன. இருப்பினும் ஒவ்வொரு 100மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை பேரழிவை ஏற்படும் பல மைல் அளவு கொண்ட விண்கற்கள் பூமியை தாக்குகின்றன. கடைசியாக தாக்கிய ஒன்று டைனோசர்கள் மட்டும் கொல்லாமல், பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் கொன்றது.

கொலைகார விண்கற்களிடம் இருந்து பூமியை எப்படி காக்கப் போகிறோம்?

பூமி அதிர்வு ஏற்பட்டு ஒவ்வொரு கரையையும் சுனாமி தாக்கும் போதும், எரிமலைகள் தனது கோபத்தை கனலாக கக்கும் போதும், அணு புயலால் சூரியனை தூசு சூழ்ந்து வானம் இருண்டாலும், அதில் தப்பி பிழைந்த சிலர் விண்கற்களால் மடிவர். உலகின் சக்திவாய்ந்த உயிரிகளான கரப்பான் மற்றும் எலிகள் மட்டுமே மிச்சும். நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்த பேரழிவுகள் சாத்தியம் என வரலாறும் நமக்கு கூறுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நம்மிடம் தற்போது ராக்கெட்களும், அணு ஆயுதங்களும் நாசாவும் உள்ளது.

விண்கற்களை தடுத்தல்

விண்கற்களை தடுத்தல்

1998ல் இதுபோன்ற விண்கற்களை கண்டறியும் பொறுப்பு நாசாவிடம் வழங்கப்பட்டு, 2005ல் கோரிக்கைகள் விரிவாக்கப்பட்டன. 2020க்குள் நாசா 450 அடி அல்லது அதை விட பெரிய விண்கற்களில் 90%ஐ கண்டறிய வேண்டும். நம்மை தாக்க வரும் அவற்றை கண்டறிந்த பின்னர், அடுத்து என்ன?

அணுஆயுதங்கள்

அணுஆயுதங்கள்

பொதுவாகவே அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது கடைசி நகர்வாகவே இருக்கும். 1967 ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தத்தின் படி அணுஆயுதங்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், பூமிக்கு அழிவு எனும்போது அதை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என பெரும்பாலானோர் கருதுகின்றனர்.

திரைப்படத்தில் காண்பிப்பது போல, விண்கல்லை துளையிட்டு அணுஆயுதத்தை செலுத்தி அதை உடைக்க வேண்டியதில்லை. விண்கல்லின் அருகில் எளிதாக ஒரு அணுகுண்டை வெடிக்க செய்து அதன் பாதையை மாற்றிவிடலாம். அதாவது மனிதர்கள் அங்கு செல்லாமலேயே, ராக்கெட் மூலம் அணு ஆயுதத்தை செலுத்தி அதை திசைதிருப்பலாம். ஆனால் ராக்கெட்கள் ஒரு டன் பொருட்களை சுமந்துசெல்லும் நிலையில், இந்த விண்கற்களை நகர்த்த பல மில்லியன் டன் வெடிபொருட்கள் தேவைப்படும். அதற்கேற்ற வகையில் ராக்கெட்களை வடிவமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

தள்ளுதல் வேகம்

தள்ளுதல் வேகம்

தள்ளுதல் என்பது எப்போதும் ஒரு தேர்வாகவே இருக்கும். அணு ஆயுதங்களை விண்கற்கள் மீது செலுத்தும் போது அதன் மீது அவ்வளவு தாக்கம் இருக்காது ஆனால் பூமிக்கு அதனால் பாதிப்பு ஏற்படும்.

இந்த தள்ளுதல் முறையில் , இராக்கெட்களை விண்கற்கள் மீது செலுத்தி எளிதாக திசைதிருப்பலாம். அந்தளவுக்கு சக்திவாய்ந்த இராக்கெட் நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை. ஆனால் நம்மை ஒரு விண்கல் தாக்க வரும்போது, வேறு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் இந்த எளிய முறையை பயன்படுத்தலாம்.

ஈர்ப்புவிசையை பயன்படுத்துதல்

ஈர்ப்புவிசையை பயன்படுத்துதல்

விண்வெளியில் இயற்பியல் என்பது முற்றிலும் விசித்திரமானது. பூமியில் பல மில்லியன் டன் பாறையை இழுப்பது என்பது ஈர்ப்புவிசையால் முற்றிலும் சாத்தியமற்றது. ஆனால் விண்வெளியில் இது சாத்தியம். இந்த முறை சற்று மெதுவாக இருந்தாலும், விண்கற்கள் பூமியை நெருங்க வருடங்கள் ஆகும் எனில், ஒவ்வொரு ஆண்டும் மில்லிமீட்டர்/சென்டிமீட்டர் என்ற விகிதத்தில் நகர்த்தி விண்கல்லின் திசையை மாற்றலாம்.

இம்முறையில் எளிய வடிவமாக, விண்கல்லிற்கு வெள்ளை நிற வண்ணம் பூசி அதன் எதிரொளிப்பு திறன் அதிகரிக்கலாம் என விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர். இதன் மூலம் சூரியனில் இருந்து அதிக போட்டான்களை பெற்று வரும் அழுத்தத்தால் விண்கல்லை நகர்த்த முடியும்.

விண்கல்லை நெருக்குதல்

விண்கல்லை நெருக்குதல்

மேலும் சில முறைகளில் கூட விண்கற்கள் பூமியை தாக்குவதை தடுக்கலாம். லேசாரை பயன்படுத்தி விண்கற்களை உடைக்கலாம்.'மாஸ் டிரைவர்'எனும் முறையில், ஒவ்வொரு வினைக்கு எதிர்வினை உள்ளது என்பதன் அடிப்படையில், பூமியை நோக்கி சிறிய கற்களை வீசும் போது விண்கற்கற் தானாக வேறு திசையில் சென்றுவிடும்.

 நல்ல செய்தி

நல்ல செய்தி

நல்ல செய்தி என்னவெனில், பூமியை அழிக்க வரும் மிகப்பெரிய விண்கற்கள் கண்டறிய எளிதாக இருக்கின்றன. எனவே நாம் பயப்படவும்,திட்டமிடவும் ஏராளமான நேரம் நமக்கு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How would we save the planet from a killer asteroid: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X