வாட்ஸ்அப் சாட் டெலிட் ஆகாமல் நம்பரை மாற்றுவது எப்படி? WhatsApp சிம்பிள் டிப்ஸ்.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. குறிப்பாக மொபைல் எண்ணை கொண்டு வாட்ஸ்அப் கணக்கை திறக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் என்ன செய்வது

ஆனால் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் என்ன செய்வது? அதாவது பழைய நம்பரில் இருந்த சாட்கள் அனைத்தும் அழியாமல் ஒரு புதிய நம்பருக்கு மாறுவது எப்படி? இதுபற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.

 அல்லது வேறு எந்த டேட்டாவையு

அதாவது சில மாதங்களுக்கு முன்பு பயனர்கள் சாட், போட்டோ அல்லது வேறு எந்த டேட்டாவையும் இழக்காமல் தங்கள் மொபைல் எண்களை மாற்றுவதற்கான வழியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்தது.

Mi, Redmi, POCO மாடல்களுக்கு MIUI 13 அப்டேட்.! இதோ லிஸ்ட்.!

படி என்று சற்று விரிவாக

இந்த அட்டகாச அம்சம் தற்போது ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு இயங்குதளங்களுக்கும் அணுக கிடைக்கும். இந்த அட்டகாச அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்று சற்று விரிவாக பார்ப்போம்.

 வாட்ஸ்அப் உங்களுடைய
  • முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.
  • அடுத்து உங்களது ப்ரொபைலுக்குள் சென்று, செட்டிங்ஸ் மெனுவை திறக்கவும்.
  • அதன்பின்பு அக்கவுண்ட் விருப்பத்திற்குள் செல்ல கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும்.
  • பின்னர் உங்களுக்கு பல விருப்பங்கள் தெரியும், அதில் சேன்ஜ் நம்பர் என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • சேன்ஜ் நம்பர் என்கிற விருப்பத்தை தேர்வு செய்த பின்னர் நெக்ஸ்ட் என்பதைக் கிளிக் செய்து உங்களுடைய பழைய மற்றும் புதிய மொபைல் எண்ணைச் சேர்க்கவும்.
  • அதன்பின்னர் வாட்ஸ்அப் உங்களுடைய புதிய எண்ணை சரிபார்த்து அதை மாற்றும்.
மொபைல் நம்பர் மாற்றப்பட்டதும், உங்கள்

குறிப்பாக உங்களுடைய மொபைல் நம்பர் மாற்றப்பட்டதும், உங்கள் காண்டாக்ட்ஸ்களுக்கு அதைப் பற்றி தெரிவிக்கப்படும். பின்பு தனிப்பட்ட தொடர்புகள் மட்டுமல்ல, நீங்கள் ஒரு பகுதியாக இருக்கும் க்ரூப்களுக்கும் உங்களது புதிய வாட்ஸ்அப் எண்ணைப் பற்றி அறிவிக்கப்படும்.

உங்களது சாட்கள்

அதேபோல் இந்த அம்சத்துடன், உங்களது சாட்கள், மீடியா கோப்புகள் மற்றும் வாட்ஸ்அப்-ல் பகிரப்பட்ட அனைத்து டேட்டாவும் அப்படியே இருக்கும். அதாவது அந்த டேட்டாக்கள் நீக்கப்படாது. மேலும் உங்களது வாட்ஸ்அப் நம்பரை மாற்றும் இந்த செயல்முறை சில நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to change whatsapp number without losing any chats : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X