நம் பூமி தப்பிக்க இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் - இருந்தும் பயனில்லை.!
சூரிய மரணம் எப்போது நிகழும்.? பூமியின் நிலை என்னவாகும்.?
பூமி கிரக வாசிகளான நமக்கு வாழ்வாதாரத்தின் அடித்தளமாக திகழும் சூரிய சக்தியானது, நம்மை பேரழிவிற்குள்ளும் செலுத்தும் என்பதை அறிந்து வைத்துக்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளோம். ஆம், புதன் கிழமை (நேற்று) அதிகாலை, சூரியன் அதன் அசுரதனமான இரண்டு சூரிய எரிப்புகளை கட்டவிழ்த்து விட்டது. இரண்டாவதாக வெளியான சூரிய எரிப்பானது ஒரு தசாப்தத்திற்கும் (10 ஆண்டுகளுக்கும்) மேலாக நாம் பார்த்த சூரிய வெடிப்புகளிலேயே மிகவும் சக்திவாய்ந்ததாகும்.

வானத்தில் நம் காணும் பெரும்பாலான நட்சத்திரங்களை போலவே தான் நமது சூரியனும் ஒரு நட்சத்திரம் என்ற தெளிவை நாம் பெற்றால், எல்லா நட்சத்திரங்களுக்கும் அழிவு உண்டு (சூரியன் உட்பட) என்பதை நாம் புரிந்துகொள்வோம். ஏற்கனவே சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியன் அதன் பாதி வாழ்நாளை கடந்து விட்டது. அடுத்த 5 பில்லியன் ஆண்டுகளில் சூரிய மரணம் நிகழும்.

இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும்
அந்நேரத்தில் பூமி கிரகத்திற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்று - விரிவடைந்த சூரியனிடம் இருந்து தப்பித்து வெளியேறும். அதாவது சூரியன் அதன் வெளிப்புற அடுக்குகளைத் தாழ்த்தும், அதன் வெகுஜனம் குறைந்து, அனைத்து கிரகங்களின் மீதான சூரிய ஈர்ப்பு சக்தியை தளரும். ஆக சூரியனின் சுற்றுவட்டிலுள்ள அனைத்து கிரகங்களும் விலகி சிறிது தூரம் செல்லும்.

சூரியனின் மரணம் மட்டுமின்றி
அல்லது சூரியனால் உட்கொள்ளப்படும். ஒருவேளை சுற்றுப்பாதையிலிருந்து வெளியேறி தப்பித்தாலும் கூட தீவிர வெப்பநிலை காரணமாக பூமி அதன் சோகமான முடிவை தேடிக்கொள்ளும். சூரியனின் மரணம் மட்டுமின்றி சூரியனின் இருப்பும் பூமியை ஒருவழி செய்துவிடும் என்பதை நேற்றைய சூரிய வெடிப்பிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது

சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது
இந்த வெடிப்பில், கதிர்வீச்சு வெளிப்பாடானது மிகவும் தீவிரமானதாக இருந்தது, அது பூமியின் பகல்நேர பக்கத்தின் மீது உயர் அதிர்வெண் ரேடியோ ஆற்றலை ஏற்படுத்தியது மற்றும் அது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. சூரிய வெடிப்பு என்பது, சூரியனின் மேற்பரப்பில் நிகழும் பெரிய வெடிப்புகளாகும். சூரியனின் காந்தப்புயல் கோடுகள் திடீரென அதிகமான ஆற்றலை வெளிபடுத்தும் போது இது நிகழும்.

தீவிரத்தன்மையின் அடிப்படையில்
விண்வெளி வானிலை விஞ்ஞானிகளின் படி, எக்ஸ் கிளாஸ் சூரிய எரிப்பு தான் மிகவும் சக்தி வாய்ந்த வெடிப்பாகும். எரிப்பின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் பார்த்தல் இவ்வகை வெடிப்புகள் ஒரு பில்லியன் ஹைட்ரஜன் வெடிகுண்டுகளின் ஆற்றலுக்கு சமம்.

சரியாக மூன்று மணி நேரம் கழித்து
தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் கூற்றுப்படி "புதன்கிழமை அதிகாலை 5:10 மணியளவில் முதல் சூரிய எரிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டது. சரியாக மூன்று மணி நேரம் கழித்து இரண்டாம் சூரிய எரிப்பு வெளிப்பட்டுள்ளது. கடந்த 2006-ல் இருந்து வெளியான மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு இதுதான்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்28
விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்னர் பதிவான மிகவும் சக்திவாய்ந்த சூரிய எரிப்பயந்து கடந்த 2003-ஆம் ஆண்டில் (எக்ஸ்28) வெளிப்பட்டது. சரி இம்மாதிரியான சூரிய வெடிப்புகளால் பூமிக்கு என்னென்ன தீங்குகள் விளையலாம்.?

அதன் கொடூரத்தை கட்டவிழ்த்து விடவில்லை
ஒரு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பானது, நமது கிரகத்தின் காந்தப்புலத்தை பாதித்து ஒரு பூகோள மின்காந்த புயலைத் தூண்டலாம். அதன் வழியே நமது செயற்கைக்கோள்கள், ஜிபிஎஸ் ஊடுருவல் மற்றும் மின் கட்டம் ஆகியவற்றை தகர்க்கலாம் அல்லது தடுக்கலாம். இதிலிருந்து சூரியன் பூமி மீது இன்னும் அதன் கொடூரத்தை கட்டவிழ்த்து விடவில்லை என்பதை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது



Click it and Unblock the Notifications