Home
Scitech

2000 ஆண்டு முன் பூமி உருண்டை என ஓரே குச்சியால் நிரூபித்த கிரேக்கர்கள்.!

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான், நாம் பூமியின் சரியான சுற்றளவு தீர்மானிக்க உதவிய செயற்கை கோளை விண்வெளிக்குள் செலுத்தினோம். அந்த தொடக்கத்தின் வழியாக நமக்கு கிடைத்த விடை - 40,030 கிமீ.

20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தான், நாம் பூமியின் சரியான சுற்றளவு தீர்மானிக்க உதவிய செயற்கை கோளை விண்வெளிக்குள் செலுத்தினோம். அந்த தொடக்கத்தின் வழியாக நமக்கு கிடைத்த விடை - 40,030 கிமீ.

2000 ஆண்டு முன் பூமி உருண்டை என ஓரே குச்சியால் நிரூபித்த கிரேக்கர்கள்!

ஆனால் இதே விடையை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர், பண்டைய கிரேக்க நாகரீகத்தின் கீழ் வாழ்ந்த ஒரு மனிதன், அவரது மூளையை வைத்து கண்டுபிடித்தார் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் அது தான் உண்மையும் (வரலாறும்) கூட! அது எப்படி சாத்தியம் ஆனது என்பதற்கான சாத்தியமான விளக்கங்களை தான் நாம் இந்த தொகுப்பில் காண உள்ளோம்!

குச்சியை வைத்து கண்டுபிடித்த கிரேக்கள்:

குச்சியை வைத்து கண்டுபிடித்த கிரேக்கள்:

முன்னர் கூறியவாறே பூமியின் சுற்றளவை அதாவது பூமி உருண்டை தான் என்பதை நம்ப வைக்கவும் கணக்கீடுகளை நாம் கண்டுபிடிக்கவே 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீண்டு விட்ட நிலைப்பாட்டில், புராதன மற்றும் பூர்வகுடி கிரேக்க கணிதவியலாளர் ஒருவர் பூமியின் சுற்றளவை (அதாவது பூமி உருண்டை தான் என்பதை) எவ்வாறு கணக்கிட்டார்? அதை அவர் தீர்மானிக்க எது உதவியது? கடவுளா? ஏலியன்ஸா? அல்லது பறக்கும் தட்டுகளா? எதுவும் இல்லை வெறும் குச்சிகளை வைத்து தான் கண்டு பிடித்து உள்ளார்.

 பூமி உண்டை:

பூமி உண்டை:

ஆம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வ கிரேக்க நாகரீகத்தின் கீழ் வாழ்ந்த ஒரு மனிதன் தரையில் ஒரு குச்சியை வைப்பதன் மூலம் பூமி உருண்டை தான் என்பதையும், அதன் துல்லியமான அளவீட்டையும் கண்டு அறிந்து உள்ளார். அந்த மனிதனின் பெயர் - எரடோஸ்தனிஸ் (Eratosthenes). கிரேக்க கணிதவியலாளரும், அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள நூலகத்தின் தலைவரும் ஆவார்.

மதிய நேரத்தில் நிகழ் விழாது:

மதிய நேரத்தில் நிகழ் விழாது:

ஒருமுறை எரடோஸ்தெனெஸ், அலெக்ஸாண்டிரியாவுக்கு தெற்கே உள்ள ஒரு நகரமான ஸைனேவில், கோடை காலங்களின் மதிய நேரத்தில் எந்தவொரு நிழலும் செங்குத்தாக தரையில் விழுவதில்லை என்கிற தகவலை அறியப்பெறுகிறார். சூரியன் நேரடியாக மேல்நிலையில் இருப்பதாக அறிகிறார். இந்த நிகழ்வு அலெக்ஸாண்டிரியாவிலும் சாத்தியமா என்பதை அறிய விரும்பினார்.

 7 டிகிரி அளவில் இருக்கும்:

7 டிகிரி அளவில் இருக்கும்:

எனவே, ஜூன் 21 ஆம் தேதி அவர் நேரடியாக தரையில் ஒரு குச்சியை நிறுத்தி, நண்பகலில் அதன் நிழல் எப்படி தரையில் விழுகிறது என்பதை பார்க்க காத்திருந்தார். காத்திருப்பின் பலன் கிடைத்தது, நிழல் விழுந்தது, அது 7 டிகிரி என்கிற அளவையும் கொண்டு இருந்தது.

பூமியின் மேற்பரப்பு வளைவு அர்த்தம்:

பூமியின் மேற்பரப்பு வளைவு அர்த்தம்:

இப்போது, அலெக்ஸாண்டிரியாவில் நடப்பட்டுள்ள ஒரு குச்சி ஆனது - ​​சூரியனின் கதிர்கள் அதே நாளின் அதே நேரத்தில் ஒரு நிழலைப் தரையின் மீது போட்டுக் கொண்டிருக்கும்போது, ஸைனேவில் நடப்பட்டு உள்ள குச்சி எந்தவிதமான நிழலையும் தரையில் வீழ்த்தவில்லை எனும் பட்சத்தில், பூமியின் மேற்பரப்பு வளைந்திருப்பதாக அர்த்தம். இதை எரடோஸ்தெனெஸ் முன்னரே அறிந்தும் இருந்தார், அதை உறுதியும் படுத்திக் கொண்டார்.

பூமி குறித்து ஆய்வு:

பூமி குறித்து ஆய்வு:

பூமியானது கோள வடிவில் ஆனது எனும் யோசனை கி.மு. 500 ஆம் ஆண்டளவில் வாழ்ந்த பித்தாகரஸ் மூலம் உருவானது, பின்னர் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு பின்னர் அரிஸ்டாட்டில் மூலம் அது சரி பார்க்கப்பட்டது. பூமி உண்மையிலேயே ஒரு கோளம் தான் என்பதை அறிந்திருந்த எரடோஸ்தெனென்ஸ் தனது ஆய்வுகளை கொண்டு முழு கிரகத்தின் சுற்றளவை மதிப்பீடு செய்ய பயன்படுத்ததி கொண்டார்.

360 டிகிரி மேற்பரப்பு:

360 டிகிரி மேற்பரப்பு:

அலெக்ஸாண்ட்ரியா மற்றும் ஸைனேவில் வீழும் நிழலின் வித்தியாசம் 7 டிகிரிகளாக இருப்பதால், இந்த இரண்டு நகரங்களும் பூமியின் 360 டிகிரி மேற்பரப்பில், 7 டிகிரிக்கு அப்பால் உள்ளன. ஆக இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே ஆன தொலைவை அவர் அறிந்ததாக வேண்டி இருந்தது. அதனால், எரடோஸ்தெனெஸ் இரண்டு நகரங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை கணக்கிட ஒரு மனிதரை பணியமர்த்தினார். அந்த பனியின் முடிவில் இரண்டு நகரங்களுக்கும் சுமார் 800 கிலோமீட்டர் தொலைவு இருப்பதாக அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சுமார் 2200 ஆண்டுக்கு முன்பு கண்டுபிடிப்பு:

சுமார் 2200 ஆண்டுக்கு முன்பு கண்டுபிடிப்பு:

கிடைக்க பெற்ற விவரங்களை கொண்டு பூமியின் சுற்றளவு கண்டுபிடிக்க எளிய விகிதங்களை அவர் பயன்படுத்தினார். 7.2 டிகிரி என்பது 360 டிகிரிகளில் 50 1 இல் பகுதியாகும். எனவே 800 கிலோமீட்டரை 50 மடங்கால் பெருகினால் 40,000 கி.மீ என்கிற விடை கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு துல்லியமான விடையை ஒரு மனிதன் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விதமான அதிநவீன கருவிகளும் இன்றி, வெறும் அறிவால், மூளையால் கண்டுபிடித்து உள்ளார் என்பது உண்மையிலேயே சிலிர்ப்படைய வைக்கிறது அல்லவா? மேலும் இதுபோன்று அறிவியல் கட்டுரைகளுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்து இருக்கவும்.

Best Mobiles in India

English summary
How the ancient Greeks proved Earth was round over 2,000 years ago : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X