Just In
- 13 min ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- 1 hr ago கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- 2 hrs ago பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- 3 hrs ago Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
Don't Miss
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- News ‛‛முகத்தில் மாஸ்க்’’.. அடையாளத்தை மறைத்து நீதிமன்றத்தில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த்.. என்ன மேட்டர்?
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆதரிக்கும் சீனாவை வைத்தே வடகொரியாவை அடித்து விரட்ட இதை செய்தால் போதும்.!
முட்டாள் தான் துப்பாக்கியை தூக்கி கொண்டு ஓடுவான், புத்திசாலியானவன் உட்காந்த இடத்திலிருந்தே எதிரியை வீழ்த்துவான்.
வட கொரியா, கடந்த செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக நிகழ்த்திய அணு சோதனைகளை நடத்தியபோது, 3,000 மைல்களுக்கு அப்பால் உள்ள மேற்கு கஜகஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது, நிலத்தடி அணு வெடிப்புகளை கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட உலகளாவிய நெட்வொர்க்கின் பகுதியாக இயங்கும் - ஏஎஸ்059 தானியங்கி நிலையம் பதிவு செய்துள்ளது.
இந்த அதிர்வு சீனாவிலும் உணரப்பட்டது, மேலும் செயற்கைக்கோள் புகைப்படங்களில் வெடிப்பின் அருகே பாறை சிதறல்களை தூண்டியுள்ளதையும் காட்சிப்படுகின்றன. "போர் போர்" என்று கூவும் அமெரிக்கா, இதையெல்லாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது ஏன்.? கட்டுப்பாட்டை மீறுவதையே வழக்கமாய் கொண்டுள்ள வடகொரியாவை அடக்குவதற்கு சரியான வழி தான் என்ன.?
அமெரிக்க நிதி உதவியின் கீழ்
ஏஎஸ்059 என்பது, சட்டவிரோதமான அணுசக்தி பரிசோதனையை கண்காணிக்கும் இந்த நெட்வொர்க் ஆகும். இது அணுசக்தி-சோதனைகளை தடை செய்யும் உடன்படிக்கை (CTBTO) நிறுவனத்தின் நேரடியாக கண்காணிப்பில் அல்ல, அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் நிதி உதவியின் கீழ் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்தை கிளப்பியுள்ளது
அமெரிக்காவின் கழுகு கண்கள் உளவு பார்க்காத இடமே என்கிற நிலைப்பாட்டில், கடந்த வாரம் ஜப்பானின் தலைக்கு மேலே வடகொரியாவால் நிகழ்த்தப்பட்ட ஒரு இடைநிலை-தூர ஏவுகணை சோதனையானது, தேசிய பாதுகாப்பிற்கு ஏவுகணை பற்றிய தெளிவே இல்லை போல என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
ஏவுகணை ஏன் சுட்டு வீழ்த்தப்படவில்லை.?
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நொடியும் பலவகையான கண்காணிப்புகள் நடக்கிறதென்றும், நாம் பாதுகாப்பகத்தான் உள்ளோம் என்றும், நிம்மதியாக உலவிக்கொண்டிருக்கும் உலக மக்கள் பலர் கிளம்பிய வடகொரியாவின் ஏவுகணை ஏன் சுட்டு வீழ்த்தப்படவில்லை.? - என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் உள்ளனர். அந்த கேள்விக்கான பதில்கள் நம்மை ஏமாற்றமடைய வைக்கும் அதே சமயம் அறிவுபுகட்டுவதாகவும் இருக்கிறது.
மிகவும் சவாலான ஒரு பொறுப்பாகும்
ஏவுகணை வளர்ச்சி மற்றும் செயல்பாடு சார்ந்த கண்காணிப்பில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முதல் மற்றும் மிகவும் அடிப்படையான பிரச்சினை எதுவென்றால் - இந்த கண்காணிப்பு மிகவும் சவாலான ஒரு பொறுப்பாகும் என்பது தான். இந்த விடயத்தில், சிலர் மற்றவர்களை விட சிறந்தவர்களாக உள்ளனர். இதன் விளைவாக (இயல்பாகவே) கண்காணிக்கப்படும் அமைப்புகள், திறமைகள் மற்றும் பாத்திரங்களில் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன.
பூஸ்ட்-பேஸ் சிஸ்டம்ஸ்
பாய்ந்து வரும் ஏவுகணைகளை விண்ணிலே விரைவாக நிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதாக "கூறப்படும்" பூஸ்ட்-பேஸ் சிஸ்டம்ஸ்கள் என்ன செய்கிறதென்ற விவரங்கள் இல்லை. பூகோள சுற்றுப்பாதையில் ஒரு உலகளாவிய பூஸ்ட்-பேஸ் சிஸ்டம்ஸ் நெட்வொர்க்கை உருவாக்க அமெரிக்கா கருதினாலும் அந்த யோசனை மிகவும் சிக்கலானது மற்றும் பொருளாதாரம் அதை நிகழ்த்தவிடாமல் தடைசெய்யும்.
யதார்த்தத்தின் குறைபாடு
மிகவும் சமீபத்தில், அமெரிக்கா முன்மாதிரி "வான்வழி லேசர்" ஒன்றை உருவாக்கியது. அது போயிங் 747-ல் கட்டப்பட்டுள்ள இது - ஒரு ஏவுகணை நுழைவை வானத்திலே அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட - ஒரு பாரிய ஆயுதமாகும். இந்த திட்டம், தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு யதார்த்தத்தின் குறைபாடு ஆகியவற்றின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது.
இப்போதைக்கு இல்லை, அநேகமாக சாத்தியமில்லை
நாம் கற்பனை செய்து வைத்துள்ள அளவு மிகவும் கவர்ச்சிகரமான பாதுகாப்பு அம்சங்கள் இப்போதைக்கு இல்லை என்பதும் மற்றும் அது அநேகமாக சாத்தியமில்லை என்பதும் தான் நிதர்சனம். ஆயுத வளர்ச்சிக்காக டாலர்களை கொட்டிக்குவிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாடே இதுதான் என்றால் டெர்மினல் பேஸ் பாதுகாப்பை கொண்டுள்ள எஞ்சியுள்ள பெரும்பாலான உலக நாடுகளை பற்றி கூறவே தேவையில்லை.
உண்மையான போர் மூளும் வரை
ஆக, ஒரு உண்மையான போர் மூளும் வரை, நிச்சயமாக ஒவ்வொரு நாடுகளின் பலம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது நமக்கு தெரியாது. முக்கியமாக "கூறப்படும்" ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஒரு சஞ்சீவி அல்ல. எதிர்வரும் ஏவுகணைகளின் பலம், பல்வேறு போக்குகள், வெவ்வேறு தாக்குதல் பாதைகள் மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் போன்ற திறன்கள் மிகவும் சிறந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை கூட உடைக்கலாம்.
கட்டிபோடுவதற்கு வழியே இல்லையா.?
குறிப்பாக திறன்மிக்க எதிரியான வடகொரியாவைப் போன்ற நாடுகளுக்கு எதிரான அழிவுகரமான யுத்தத்தின் ஆரம்பத்தை மட்டுமே அமெரிக்க இராணுவத்தின் மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளால் தாக்குப்பிடிக்க முடியும். அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், உலக யுத்த பீதிகளை கிளப்பும் வடகொரியாவை அடக்குவதற்கும், கட்டிபோடுவதற்கும் வழியே இல்லையா.? என்று கேட்டால்- இருக்கிறது.
புத்திசாலித்தனமாக அழுத்தம் கொடுக்கிறது
வடகொரியா மீதான இராணுவ நடவடிக்கைகள் என்பது உலகநாடுகளுக்கு இருக்கும் கடைசி செயல்பாடாகும். வட கொரியாவின் அணுசக்தி திட்டத்தை முறியடிக்க அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் எடுக்கும் மற்ற சில பயன்மிக்க நடவடிக்கைகளும் உள்ளன: வடகொரியாவிற்கான எண்ணெய் மற்றும் பிற எரிபொருள் விநியோகங்களைக் குறைக்க அதன் முக்கிய வணிகப் பங்குதாரர்களான சீனா மற்றும் யு.என். செக்யூரிட்டி கவுன்சிலின் மற்ற உறுப்பினர்களுக்கு அமெரிக்கா புத்திசாலித்தனமாக அழுத்தம் கொடுக்கிறது.
கடுமையாக செயல்பட்டு வருகிறது
வட கொரியாவுடன் வணிகம் செய்யும் சீன வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையாக செயல்பட்டு வருகிறது. வடகொரிய உறவுகளை கொண்டுள்ள அனைத்து வெளிநாட்டு வங்கிகளையும், உலக வங்கியியல் அமைப்பிற்கான அணுகலை சுட்டிக்காட்டி அமெரிக்கா முற்றுகையிடுகிறது. வடகொரியா அதன் அணுசக்தி திட்டத்தை திரும்பிப்பெற்றுக்கொள்ளும் வரை குறிப்பிடத்தக்க உணவு உதவிகளை அனுப்ப அமெரிக்கா மறுத்துவருகிறது.
சீனாவின் பெய்ஜிங்கிற்கு கொடுக்கப்படும் அழுத்தம்
இவைகளெல்லாம் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஒரு வலுவான வடகொரிய எதிர்ப்பு கொள்கைகளாக உள்ளன. ஆனால், இது வடகொரியின் பியோங்யாங்கிற்கான அழுத்தம் என்ற பெயரில் சீனாவின் பெய்ஜிங்கிற்கு கொடுக்கப்படும் அழுத்தம் என்பதே உண்மை. பெய்ஜிங் வட கொரியாவின் உயிர்நாடியாகும். அமெரிக்கா சீனாவை கடிமான நிலைபாட்டிற்குள் தள்ளினால், வடகொரியாவில் கிம் ஆட்சி கவிழக்கூடும். பின்னர் உலகிற்கு அதைவிட சிறப்பிப்பான பரிசை அமெரிக்காவால் கொடுக்க முடியாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470