கனவில் கூட நினைக்காத "அந்த" நாள் ஆரம்பமாகிறது.? இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டோமா.?

By Gizbot Bureau
|

சமீபத்தில் வெளியான சதியாலோசனை கோட்பாடு ஒன்று, வருகிற அக்.15 முதல் பூமி கிரகத்தின் அழிவு ஆர்மபமாகி, அடுத்த 7 ஆண்டுகளில் (பூகம்பம், சுனாமி, சூறாவளி போன்ற தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகளால்) முழுமையான அழிவை சந்திப்போம் என்ற பீதியை கிளப்பியுள்ளது.

பிளானட் எக்ஸ் எனக்கூறப்படும் மிகவும் மர்மமான இருப்பை கொண்ட ஒரு கிரகம் தான் பூமி கிரகத்தின் அழிவை தூண்டி விடப்போவதாக அந்த கோட்பாடு விளக்கமளித்துள்ளது. இதனை தொடர்ந்து, சுமார் 4.41 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய நெபுலாவில் இருந்து உருவான நமது பூமி கிரகம் அதன் இறுதி நாட்களை எட்டியுள்ளது என்ற பல கோட்பாடுகள் கிளம்பிய வண்ணம் உள்ளன.

குழப்புமான மற்றும் விசித்திரமான.!

குழப்புமான மற்றும் விசித்திரமான.!

புகைப்படங்களிலும் பார்க்கும் போதும் மிகவும் அழகான, அமைதியாக தோன்றும் விண்வெளி, விண்மீன் திரள்கள் மற்றும் நெபுலாக்கள் உண்மையில் மிகவும் குழப்புமான மற்றும் விசித்திரமான, வன்முறை மிகுந்த விடயங்களாகும் என்பது தான் நிதர்சனம்.

வன்முறை மிக்க  விண்வெளி நிகழ்வு

வன்முறை மிக்க விண்வெளி நிகழ்வு

ஒரு வன்முறை மிக்க விண்வெளி நிகழ்வு அல்லது சம்பவம், பூமியை மட்டுமில்லாது ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தையே அழிக்கும் வல்லமை கொண்டிருக்கலாம். அப்படியாக நமது சூரிய குடும்பத்தின் மிக அருகமையில் நடக்கலாம் என்றும், அதில் சில மனிதர்களாகிய நாம் வாழும் காலத்திலேயே கூட நிகழலாம் என்றும் விண்வெளி ஆய்வாளர்களால் எதிர்நோக்கப்படும் ஒரு நிகழ்வு தான் - பிளானட் சமாஷ் அப்.!

பிளானட் சமாஷ் அப்.!

பிளானட் சமாஷ் அப்.!

நாம் பள்ளி புத்தகங்களில் பார்த்தது, படித்தது போல சூரிய குடும்பத்தின் கிரகங்களின் சுற்று வட்டப்பாதையானது மிகவும் நிலையான ஒன்றல்ல. இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் எதோ இரண்டு கிரகங்களுக்கு மத்தியில் நிகழப்போகும் ஒரு மோதலுக்கு பின்பு, மெர்குரி தனது சுற்றுவட்டப் பாதையை மாற்றிக்கொள்ளும் நிலை உருவாகி ஒரு கட்டத்தில் பூமி கிரகத்தோடு மோதும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி ரின்ங்டு மார்ஸ் என்றவொரு நிகழ்வும் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரின்ங்டு மார்ஸ்

ரின்ங்டு மார்ஸ்

அதாவது செவ்வாய் கிரகம், தனது அருகாமை நிலவோடு மோதும், அதன் விளைவாய் சனி கோளுக்கு இருப்பது போன்ற ரிங் அமைப்பை தனக்கு தானே ஏற்படுத்திக் கொள்ளும். இது நிகழும் போது சூரிய குடும்பத்தின் அமைப்பில் சில பிரச்சனைகள் ஏற்படும். இந்த சமன்பாவம் நிகழ எப்படியும் சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரையிலாக மனித இனம் நீடித்து வாழுமா என்பதே மிகப்பெரிய கேள்விகுறி தான்.

க்ரம்பிலிங் மூன்

க்ரம்பிலிங் மூன்

செவ்வாய் கிரகத்திற்கு "ரிங்" உண்டாக்குவது போன்றே, நமது நிலவும் நம் பூமி கிரகத்தின் மீது மோதல் நிகழ்த்த, பூமிக்கும் ஒரு ரிங் அமைப்பு உருவாகும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அனால் அது நிகழ சுமார் 5 பில்லியன் ஆண்டுகளாவது ஆகும்.

ஆந்த்ரோமெடா

ஆந்த்ரோமெடா

நம் சூரிய குடும்பம் இருக்கும் பால்வெளி மண்டலமானது, அதன்அருகாமை மண்டலத்தோடு நிகழ்த்தும் ஒரு மோதலை ஆந்த்ரோமெடா என்கிறார்கள். இந்த மோதல் நிகழ்ந்து, இரண்டு மண்டலங்களும் இணைந்து புதிய ஒரு கேலக்சியை உருவாக்குமாம், அழிந்தது போக மீதமுள்ளதில் உயிர்கள் முளைக்குமா என்பதை பார்க்க நாம் மிஞ்சியிருக்க மாட்டோம். நமது பால்வெளி மண்டலமானது இன்னும் ஒரு 4 பில்லியன் ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கும் நிலைத்திருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

கில்லர் க்ளவுட்

கில்லர் க்ளவுட்

நமது சூரிய குடும்பமானது ஒரு கொடூரமான விண்வெளி மூடுபனி மூலம் தாக்கப்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அது நிகழுமானால், அது தான் உயிரினங்களின் கடைசி நாட்களாக இருக்கும்.

மீண்டும் கேரிங்க்டன் நிகழ்வு

மீண்டும் கேரிங்க்டன் நிகழ்வு

1859-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று, ரிச்சர்ட் கேரிங்டன் என்ற ஒரு தன்னார்வ வானியலாளர் வரலாற்றின் மிக மோசமான சூரிய புயலை கண்டறிந்தார். அதை தான் கேரிங்க்டன் நிகழ்வு எனப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வானது பூமி யை நேரடியாக தாக்கும். அதன் தீவிரத்தை பொறுத்து பாதிப்புகள் ஏற்படும்.

டெத் ஸ்டார்ஸ்

டெத் ஸ்டார்ஸ்

வால் நட்சத்திரங்களின் ஒரு பெரிய கொத்து தான் "ஊர்ட்" மேகம் எனப்படுகிறது. அவ்வாறான ஊர்ட் மேகத்தினுள் ஏகப்பட்ட இறந்த நிலை நட்சத்திரங்கள் இருக்கின்றனவாம். சூரியனை சுற்றி வந்துகொண்டிருக்கும் இதுபோன்ற ஊர்ட் மேகப் பொருள்களுடன் நமது பூமி கிரகம் மோதல் நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது. இந்த மோதல் நிகழும் வாய்ப்பானது மிக மிக குறைவு என்பது நமக்கான ஒரு குட்டி குட் நியூஸ்.!

பாராசிட்டிக் ட்ராப்

பாராசிட்டிக் ட்ராப்

சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 3260 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பினும் கூட அண்டத்தின் அடைப்படையில் பார்க்கும் போது நம்முடனான "ஒட்டுண்ணி உறவு" கொண்டுள்ள டி பைசிடிஸ் என்ற இருமை நட்சத்திர அமைப்பானது நம் சூரிய குடும்பத்தின் அருகமையில் தான் இருக்கிறது. அவைகள் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வெப்பாற்றல் வெடிப்பை நிகழ்த்துகிறது. அந்த வெடிப்பு மிகவும் தீவிரமாகும் பட்சத்தில் பூமி கிரகத்திற்கு சில அடிப்படை ஆபத்துகள் நிகழும்.

தி பிக் சேன்ஜ்

தி பிக் சேன்ஜ்

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு சூப்பர்கூல் நிலைக்கு செல்லும், மறுபுறம் ஒரு மாபெரும் வெற்றிடம் உருவாகும். இதை தான் தி பிக் சேன்ஜ் என்கிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்திலிருந்தும் பூமி தப்பி பிழைத்தாலும் கூட நம்மை நேரடியாக பாதிக்க காத்திருக்கிறது. வுல்ப்-ராயெட் ஸ்டார் ஆனது இன்னும் நூறு ஆண்டுகளில் சூப்பர்நோவாவாக மாறும். அதன் வழிப்பாதையின் அடிப்படையில் பார்க்கும் போது, அது வெளிக்கிடும் காம்மா கதிர்கள் நேரடியாக பூமியை நோக்கி பாயலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How Our Solar System Will End In The Far Future. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X