செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய 'ஸ்டீம்பேங்க்' ஆற்றும் பணி

19 ஆம் நூற்றாண்டில் வெளியான ஒரு அறிவியல் புதினம் போல தெரியலாம். ஆனால் உண்மை. உலோகத்திலான ஐந்து விரல் நகங்களை கொண்ட ரோபோட்டை, செவ்வாய் கிரகத்திற்கு மெழுகு உருகுவதன் மூலம் ஏவி உள்ளது.

|

இது ஏதோ 19 ஆம் நூற்றாண்டில் வெளியான ஒரு அறிவியல் புதினம் போல தெரியலாம். ஆனால் உண்மை. உலோகத்திலான ஐந்து விரல் நகங்களை கொண்ட ரோபோட்டை, செவ்வாய் கிரகத்திற்கு மெழுகு உருகுவதன் மூலம் ஏவி உள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய 'ஸ்டீம்பேங்க்' ஆற்றும் பணி

ஆனால் அந்த ரோபோட் உண்மையானது. கடந்த மே மாதம் சிவப்பு கிரகமான செவ்வாயில் களமிறக்கப்பட்ட நாசாவின் இன்சைட் மார்ஸ் லேண்டர், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் தனது பணியை தொடங்கி உள்ளது.

 செவ்வாயிக்கு இன்சைட்:

செவ்வாயிக்கு இன்சைட்:

செவ்வாய் கிரகத்தின் உள்ளக அமைப்பு மற்றும் கலவையை குறித்த விவரத்தை அறியும் வகையில் இன்சைட் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் இரு முக்கிய விஞ்ஞான கருவிகள் அனுப்பப்பட்டுள்ளன.

அவையாவன: ஹீட் ப்ளோ என்ற அழைக்கப்படும் வெயிலை தாங்கும் கொள்ளும் பொந்து மற்றும் உடல் பண்புகள் பேக்கேஜ் (ஹெச்பி3) மற்றும் உள்ளக அமைப்பை (எஸ்இஐஎஸ்) அதிர்வு ஆராயச்சிக்கு உதவும் சூப்பர் ப்ரீசைஸ் சேஸ்மோமீட்டர்களின் ஒரு குழு ஆகியவை அமைந்துள்ளன. (செவ்வாய் கிரகத்தின் செல்லரிக்கிற பகுதியில் கூடுதல் வெளிச்சத்தை வெளியிட்டு, ஒரு ரேடியோ அறிவியல் ஆராய்ச்சியை செயல்படும் பணியை தன்னில் உள்ள தொலைத்தொடர்பை கொண்டு இன்சைட் மேற்கொள்ளும்.)

ரோபோட் கை முனையில்:

ரோபோட் கை முனையில்:

HP3 மற்றும் SEIS ஆகிய இவ்விரண்டும், செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கி, தரையிறங்க பயன்படுத்தப்பட்ட உடற்பகுதியை விட்டு, உயர்தர தகவல்களை திரட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காற்று மற்றும் காலநிலை பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், SEIS-க்கு என்று ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காப்புறை மூலம் மூடப்பட்டுள்ளது.

தரையிறங்கியின் 5.9 அடி நீளம் (1.8 மீட்டர்) ரோபோட் கையின் முனையில் இன்சைட்டின் ஸ்டீம்பங்க் நகத்துடன் வருகிறது. மேற்கண்ட மூன்று காரியங்களையும் பயன்படுத்தி தகவல்களை சேகரிக்க உள்ளது. இது குறித்து ஆராய்ச்சியில் உள்ள உறுப்பினர் கூறுகையில், மற்றொரு உலகில் ஒரு ரோபோட் மூலம் இதற்கு முன் பணிகளை செய்தது இல்லை என்றார்.

சரியான இடத்தில் ரோபோட் கை:

சரியான இடத்தில் ரோபோட் கை:

இது குறித்து கலிஃபோர்னியாவின் பாசாடினாவில் உள்ள நாசாவின் ஜெட் உந்துவிசை ஆராய்ச்சியகத்தின் இன்சைட்டின் கருவி பயன்படுத்துதல் அமைப்பு நடவடிக்கைகள் குழுவின் தலைவரான அஸ்சிடி டிரிபி-ஒல்லின்னு கூறுகையில், "எல்லா காரியங்களையும் இந்த ரோபோட் கை, சரியான இடத்தில் வைக்க வேண்டும். ஆனால் ஒரு சவாலை நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.

சுருள் கம்பியை அழுத்தி:

சுருள் கம்பியை அழுத்தி:

நாசா அதிகாரிகள் கூறுகையில், மேற்கண்ட இந்த மூன்று பொருட்களும் நகத்துடன் வரிசையாக இணைக்கப்பட்டு, உறுதியாக பிடித்து கொள்ள உதவுகிறது. இறுக்கமாக பிடித்து கொள்ள வேண்டிய நேரம் வரும் போது, நகத்தின் உள்ளே காணப்படும் பாராஃபின் மெழுகின் உருகுதல் குறித்து இன்சைட்டின் ஹேண்டர்களுக்கு தகவல் அளிக்கும். இந்த மெழுகு உருகும் போது, அது விரிவடைந்து, ஒரு சிறிய கம்பியை வெளியே தள்ளும். அந்த கம்பி ஒரு சுருள் கம்பியை அழுத்தி, விரல்களை விரிக்கும் என்கிறார்கள்.

நகங்கள் அதன் நிலைக்கு வந்த பிறகு, ஹீட்டர் தானாக அணைந்துவிடும். மெழுகு குளுமை அடைந்து, விரல்களை சுருக்கி, இறுக்கத்தை தளரவிடும்.

மேற்கண்ட இந்த விரிவுரை மூலம் ஆர்கேட் கிளா மிஷன் கேம்ஸின் ஒரு உருவத்தை உங்கள் கற்பனையில் கொண்டு வந்தால், அது உங்களுக்கு மட்டும் ஏற்படுவது இல்லை.

ரோபோடிக் கை அணி கடின ஊழைப்பு:

ரோபோடிக் கை அணி கடின ஊழைப்பு:

ஜெபிஎல் அமைப்பின் இன்சைட் திட்ட மேலாளர் டாம் ஹாஃப்மேன், அதே அறிக்கையில் கூறுகையில், "இன்சைட்டின் ரோபோட்டிக் கையை குறித்து இன்னும் அதிகமாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இதற்காக க்ளா கேம்ஸை பல முறைகளாக பயற்சியில் ஈடுபட்டு வருகிறோாம். கிளா மிஷன் வடிவமைப்பாளர்கள் போல இல்லாமல், கட்டாயம் வித்தியாசத்தை உண்டாகும் வகையில், எங்கள் ரோபோடிக் கை அணி கடினமாக உழைத்து, ஒவ்வொரு முறையும் வெற்றி பெற எங்களுக்கு வழிவகை செய்கிறது."

இந்த உருகும் மெழுகு அமைப்பு, எளிய தொழில்நுட்பம் போல தெரியலாம். ஆனால் நீண்ட ஆலோசனைக்கு பிறகே இன்சைட் அணியினர், இதை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

 விண்வெளி பயன்பாடுகளுக்கு:

விண்வெளி பயன்பாடுகளுக்கு:

இந்த திட்டத்தை குறித்த "கிரேஸி இன்ஜினியரிங்" என்ற வீடியோவில், ஜெபிஎல் மெக்காட்ரோனிக்ஸ் இன்ஜினியரும் இன்சைட் அணி உறுப்பினருமான நிக்கோலஸ் ஹட்டாட் கூறுகையில், "இது சிறப்பாக நிரூபிக்கப்பட்ட தொழிற்நுட்பம் ஆகும். இன்சைட் கிராப்பில் போன்ற விண்வெளி பயன்பாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. வீட்டில் உள்ள பல பொருட்களிலும் நம் கார் தெர்மோஸ்டாட்ஸ் போன்றவற்றில் பல ஆண்டுகளாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன." என்றார்.

நாசா அதிகாரிகள் கூறுகையில், "சைஸ்மிக் ஆராய்ச்சிகள், ஜியோடிஸி மற்றும் வெப்ப பரிமாற்றம் போன்றவற்றில் இன்சைட்டில் பயன்பாட்டில் உள்ள உள்துறை ஆய்வுகள் பயன்படுத்தப்படுகின்றன. செவ்வாய் கிரகத்தில் உள்ள தகவல்களை இந்த தரையிறக்கி சேமிப்பதன் மூலம் கற்பாறைகளால் அமைந்த அந்த கிரகத்தின் பொதுவான அமைப்பு மற்றும் பரிமாணம் குறித்த ஒரு தெளிவான புரிந்து உணர்தலை பெற ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும்" என்றனர்.

Best Mobiles in India

English summary
How NASA Mars Landers Steampunk Claw Will Work : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X