இதுவரை நிலவில் கால்பதித்தவர்கள் யார் யார் தெரியுமா?

|

அப்போலோ 11 மிஷனின் ஒரு பகுதியாக நிலவின் மேற்பரப்பில் கால்பதித்த முதல் மனிதன் என்ற சாதனையை நீல் ஆம்ஸ்ட்ராங் செய்த 50வது ஆண்டு இது ஆகும்.

ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ்

ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ்

ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஷ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும், ப்ளோரிடாவின் கேப் கென்னடி தளத்திலிருந்து 100 மணி நேரம் பயணித்து 20 ஜூலை 1969 அன்று நிலவின் மேற்பரப்பில் கால்பதித்த அந்த தருணம், "மனிதனின் ஒரு சிறு அடி, மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சலுக்கு வழிவகுக்கும்" என்ற அழிவில்லா பொன்மொழிக்கு காரணமாக அமைந்தது.

 முழுமையான தகவல்கள் இதோ

முழுமையான தகவல்கள் இதோ

இவர்கள் மட்டுமே நிலவில் கால்பதித்த அந்த சாதனையை செய்தவர்கள் அல்ல. அவர்களுக்கு தொடர்ந்து பலரும் நிலவில் கால்பதித்துள்ளனர். ஆனால் எத்தனை பேர் நிலவில் தரையிறங்கியுள்ளனர்?. அதைப்பற்றிய முழுமையான தகவல்கள் இதோ.

அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

நிலவில் கால்பதித்தவர்கள் யார்?

நிலவில் கால்பதித்தவர்கள் யார்?

ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் உள்ளிட்ட மொத்தம் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் கால்பதித்துள்ளனர். மற்ற 10 பேரும் 1969 முதல் 1972 வரை நடைபெற்ற நாசாவின் மற்ற 5 விண்வெளி பயணங்களின் போது நிலவிற்கு சென்றுள்ளனர்.

இந்த மிஷன்கள் அனைத்தும் அப்போலோ 12, அப்போலோ 14, அப்போலோ 15, அப்போலோ 16 மற்றும் அப்போலோ 17 திட்டங்களின் கீழ் நடைபெற்றன.

இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்?இந்தியா: ஏடிஎம் மோசடி: 3வது இடத்தில் தமிழ்நாடு: முதல் இடம்?

நிலவில் கால்பதித்த நபர்கள் யார் யார்?

நிலவில் கால்பதித்த நபர்கள் யார் யார்?

பின்வரும் விண்வெளி வீரர்கள் தான் மனிதகுலத்திற்கு விண்வெளியில் பெரும் பாய்ச்சலை வழங்கியுள்ளனர்.


* நீல் ஆம்ஸ்ட்ராங் - அப்போலோ11, 1969

*பஷ் ஆல்ட்ரின் - அப்போலோ11, 1969

*பீட்டே கான்ராட் - அப்போலோ12, 1969

*ஏலன் பீன் - அப்போலோ12, 1969

*ஏலன் ஷெப்பர்ட் - அப்போலோ14, 1971

*எட்கர் மிட்சல் - அப்போலோ14, 1971

*டேவிட் ஸ்காட் - அப்போலோ15, 1971

*ஜேம்ஸ் இர்வின் -அப்போலோ15, 1971

*ஜான் யங்- அப்போலோ16, 1972

* சார்லஸ் டுயூக் - அப்போலோ16, 1972

*ஜீன் செர்னான் - அப்போலோ17, 1972

* ஹாரிசன் ஸ்மிட் - அப்போலோ17, 1972

நிலவில் வெற்றிக்கொடி நாட்டிய நாடுகள்

நிலவில் வெற்றிக்கொடி நாட்டிய நாடுகள்

அமெரிக்கா, முந்தைய சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவில் இதுவரை தரையிறங்கியுள்ள நிலையில், அவற்றில் சமீபத்தில் 2013ஆம் ஆண்டு சீனா நிலவில் கால்பதித்தது.

ஆர்டிமிஸ் என்ற புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டுகளில் ஒரு பெண் விண்வெளி வீராங்கனையை நிலவில் கால்பதிக்கச் செய்ய நாசா உறுதியேற்றுள்ளது.

நாசா நிர்வாகி ஜிம் பிரையன்ஸ்டீன்

நாசா நிர்வாகி ஜிம் பிரையன்ஸ்டீன்

புதியதலைமுறையின் இளம் பெண்கள் விண்வெளி துறையில் பணியாற்றும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், விரைவில் விண்வெளி வீராங்கனை ஒருவரை நிலவில் கால்பதிக்க வைப்பதை குறிக்கோளாக கொண்டிருப்பதாக நாசா நிர்வாகி ஜிம் பிரையன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கு மனிதர்கள்

செவ்வாய்க்கு மனிதர்கள்

வாஷிங்டன் டிசி.யில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற 'செவ்வாய்க்கு மனிதர்கள் " என்ற கருத்தரங்கில் பிரையன்ஸ்டீன் கூறியதாவது," எனக்கு 11 வயதான மகள் உள்ளார். அவர் தற்போதைய மிகவும் வேறுபட்ட விண்வெளி வீரர்கள் இதை பார்க்கும் அதே வழி யிலேயே, தன்னை பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 வரலாற்றை திரும்பி பார்த்தால்....

வரலாற்றை திரும்பி பார்த்தால்....

"நாம் நிலவில் தரையிறங்கிய வரலாற்றை திரும்பி பார்த்தால், 1960 மற்றும் 1970 களில் போர் விமானிகளே விண்வெளி வீரர்களாக பயணித்துள்ளனர் மற்றும் இன்னும் அப்போதிருந்து பெண்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே இந்த புதிய திட்டம் மூலம் எனது மகள் போன்ற புதிய தலைமுறை இளம் பெண்கள், இதுவரை மற்ற பெண்கள் நினைத்து பார்க்க கூட முடியாத வழியில் தங்களை பார்க்க முடியும்" என கூறினார் ஜிம்.

Best Mobiles in India

English summary
How many people have landed on the moon and who were they : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X